‘ம’கரக் கவிகள்

சிவசித்தரே!
மெய் மெச்சும் மெய்ப்பொருலே உம்மால்
மெய்யுணர்வு எனும் மெய்க்கீர்த்தியது – சிவசித்தரால்
மெல்ல மெருகு பெற்றோம் மெய்சிலிர்த்தோம்
மெல்குவானோம் மெய்ப்பித்தோம் மெயப்பொருளை
– உண்மையைக் கண்டு வியந்தோம் உண்மையான பொருளான உம்மால் உண்மை உணர்த்தும் பேரறிவால் கல்வெட்டு கொண்டது மனம் – சிவசித்தரால் மெதுவாக, பளபளப்பு பெற்றோம் மயிர்கூச்செறிந்தோம், லேசாகினோம் நிரூபித்தோம் உள்ளத்து உணர்ச்சிகளை.

சிவசித்தரே!
மேதினி யின்மேத கைமேடு காட்ட
மேகம் மேற்கோளெ அது – வாசியே
மேன்மை மேதகை யாம் மேவி
மேட்டி மையாம்மேரு வாசியே
– பூமியின் மேன்மையை உயர்த்திக் காட்டிட, மேகங்கலை எடுத்துக்காட்டாகக் கூற முடியாது வாசியைத் தவிர, சிறப்பான மேன்மை எனும் ஆசையை தலைமை கொள்ளும் மலை போன்ற நிலையான ஒன்று தான் வாசி.

சிவசித்தரே!
மை மையம் கொண்ட மையஉலகில்
மை தானம் உருவாக்கும் – சிவசித்தரே
மைந்து தந்தது வாசி மைநீக்க
மைஞ்சு வானோம் மிளிக்கிறோம்.
– இருள் சூழ்ந்த இந்த நடு உலகினில் திறந்த வெளியிடமாய் வாசி பரப்பும் சிவசித்தரே, வலிமை தந்து இருள் நீக்கினீரே – வாசியால் மேகமாய் மிதக்கிறோம் ஒளி கொள்கிறோம்..

சிவசித்தரே!
மொய் மொழியாம் வாசி அளித்தவா
மொழி யியல்வேண்டா வாசி – அதுகூறும்
மொக்குளாய் மொகு மொகுக்குமே நின்னால்
மொக் குளித்ததே குண்டலினியாய்
– வலிமை மிகுந்த மொழியாம் வாசி அளித்த சிவசித்தரே, வாசி அறிய மொழியின் அமைப்பு பற்றிய ஆய்வு தேவையில்லை, உம்மால் அது தானாகவே என்னுள் எதிலொலிக்குமே திரண்டு நிற்கிறதே குண்டலினியாய்.

சிவசித்தரே!
மோகனம் மேற்றி மோசடி செய்தோம்
மோசம் கொண்டு மோடி – விதமாய்
மோட்டா எனும் மோட்சம் விளையாதே
மோனை யறி சிவசித்தர் யாவும் அறிவிப்பாரே
– மயக்கம் ஏற்றுச் சிலர் மற்றவரை ஏமாற்றி பயங்கரமாய் செருக்குக் கொண்டு நின்னால் பெரிய நிலையால் முக்திநினைத்தாலும் நிலை கிடைக்காதே.. செய்யுளால் வாசி அறிவிப்பாரே சிவசித்தரே…

சிவசித்தரே!
மௌடி கட்டுபடுத்தாத மௌட்டியம் கட்டுண்டதே
மௌடீக கட்டிலி ருந்தே – வாசியால்
மௌனி யானோம் சிவசித்தரின் மௌனம்
மௌசு பூண்டதே உண்மையாய்
– பாம்பாட்டியின் மகுடிக்குக் கட்டுப்படாத அறியாமை எனும் முட்டாள்தனம் கட்டுண்டதே வாசியால் அமைதியானோம், சிவசித்தரின் மௌனம் எங்களுள் அமைதி ஏற்படுத்தியதே உண்மையாய்..

Next Post

Leave a Reply