‘ப’-கரக் கவிகள்

சிவசித்தரே!
பெயர்ச்சி பெள்ளம் பெரிய பெற்றி
பெண்டிர் கூறவாசி பெட்டகம் – பெய்து
பெயர் பெருமித மாய்ப் பெருக்க
பெயரன் அவரே சிவசித்தரே
– கிரகங்களின் மாற்றம் மிகப்பெரிய இயல்பைக்கூட மாற்றும் என்று கூறும் பெண்களுக்கு, வாசியே உங்கள் உயிரின் இருப்பிடம் என்று பரவலாக உணரச் செய்து, அமைதியாக நின் புகழ் மேம்படுகிறதே.. அத்தகைய மேம்பாட்டின் அருளாளரே – சிவசித்தரே – பணிகின்றோம்.

சிவசித்தரே!
பேதமை யேபேயோ பேதலித் தோமே
பேசாமை பேச்சால் பேணுநர் – நீர்
பேரண்டம் பேணும் பேதுரம் வாசிநின்
பேரறிவு பே பெற்றோம்
– மடமையெனும் அச்சத்தால் ஐயுற்றோமே நின் மௌனமெனும் பேச்சால் விண்வெளியை உள்ளடக்கிய பிரபஞ்சமெனும் உருண்டையைக் காக்கும் வச்சிராயுதமே வாசியென்று உணர்த்திய உம்மால்.. முழுமையான ஞானமெனும் மேகக்கூட்டத்தை அடைந்தோமே.

சிவசித்தரே!
பையப் பையப் பைதல் கொண்டு
பைத் தியமாய் ஆனோம் – பைசாசமாய்
பையுள் எம்மை பையுள் கொள்ளநீர்
பைங்கூழாக்கினீர் எம்மை பைங்காய்
– மெல்ல மெல்ல துன்பம் கொண்டு மனநோயாளியான எங்களின் பிசாசுப்பயம், வறுமை போல் மயக்கத்தில் தள்ள, நீரே எங்களை விளைநிலமாய் மாற்றி பசுமை ஊற்றினீரே வாசியால்.

சிவசித்தரே!
பொச்சரிப்பு பொங்கம் பொக் கிஷம்
பொங்க பொச்சாப்பு கூட-பொத்தை
பொய்ப்பு பொகுட்டு கூறிஎழ பொத்தி
பொய்யாமொழி வாசி கூறினீரே
– பொறாமை மிகுதியால் உள்ளக் கருவூலம் நிறைந்து மேலெழ, மறதி அதிகரித்து, கடலானது பொய் எனும் மாயையால் நிறைய – அண்டம் முழுவதும் உணர வேண்டிய உண்மை வாசி என்று கூறி எங்களை நீர்வழியில் நடத்தினீரே..

சிவசித்தரே!
போக்கடி போகாறு போகப் போகப்
போக்கிடம் போதிக்கும் போதகம் – சிவசித்தரே
போக போக்கியமே போகருக்கும் வாசியே
போதுமின் போகம் பெற
– அடுத்தடுத்தாக அனைத்துப் பொருள்களும் நாளடைவில் நம்மை விட்டு நீங்கும் போதும் புகலிடமாய் இருந்து ஞானம் போதிப்பவர் சிவசித்தரே… அனுபவப்பொருள் இல்லறவாசிகளுக்கும் உண்டு – அது வாசியே என்பதை உணர்த்தியவரை நோக்கி ஒன்றுகூடி வாருங்கள் அனுபவம் பெற..

சிவசித்தரே!
பௌருஷம் பரவ தீமைத்தேடும் மூடம்
பௌவம் அடையும் வயதிற்கல் – வாசியை
பௌர்ணமி யாய் மிளிரும் நின்பௌருஷம்
பௌதிகம் அறிவாய் சிவசித்தரால்..
– ஆண்மை நிரூபிக்க தீய வழிகளைத்தேடும் அறிவற்றவரே, பருவம் அடையும் வயதில் வாசி கற்க ஆரம்பித்தால் நிறைமதியாய் மிளிரும் நின் ஆண்மை.. புலன்களுக்கு அப்பாற்பட்ட்தை உணர்வாய் சிவசித்தனா(ரா)ல்.
வாசியுந்
தமிழும்
கவியும்
நடையுமாயின
சிவசித்தர்
பார்வையால்..

Previous Post
Next Post

One thought on “‘ப’-கரக் கவிகள்

  1. நோய்கள் என்று தீர்வு தெரியாமல் தவித்த எங்களுக்கு கழிவுகள் என்று உணர்த்திய சிவகுருவிற்கு நன்றிகள் பல!

Leave a Reply