‘ன’ கரக் கவிகள்

சிவசித்தரே!
ஊனக் கண் கொண்ட இவ்வுடலில்
ஊனம் குடி கொண்டதும் – வினையால்
ஊன் உண்டு இறைமை தொலைத்தும்
ஊன்று வாசி ஊனத்தை
– உடலின் உள்ள கண் போன்ற உறுப்புகளில் உள்ள குறைபாடுகள் கூட நமது வினைபயனாக இருக்கலாம், அத்தகைய வினையை அதிகரிக்கின்றது நாம் உண்ணும் இறைச்சி, இப்படி உடலை மோசமாக மாற்றி வைத்திருக்கும் மன ஊனம் கொண்ட நம்மை நிலையாக மாற்றுகிறதே சிவசித்தரின் வாசி.

சிவசித்தரே!
என்னே நின்தன் திருஉரு கண்டு
எனை வரும் வியப்பர் – என்னர்
என்னதும் மாகி என்பு மாகினும்
என்றூழ் போல் ஒளியானீரே.
– சிவசித்தரின் திருஉரு வத்தினை முதலின் காண்போர் எப்படிப்பட்டவராயிருந்தாலும் வியப்பர். ஆம், மிகச் சிறிய வயதுடையவராகவும், ஒல்லியான தேக முடையவராகவும் தெரிவதனால்… ஆனால் அவர் அருகில் சென்றால் அவருடைய முகத்தில் சூரியனின் ஒளியைவிட நிலையான ஒரு ஒளியை (இரவும் பகலும்) எக்கணமும் காணலாம். அது பெரும் வியப்பைத் தருமே

224. சிவசித்தரே!
ஏனம் தொலைக்க வழியே தேடினும்
ஏனு கொள்வோம் வழியாம் – வாசியே
ஏனல் போன்று நம்மை புதிதாக்குவார்
ஏனாதி யானசிவ சித்தரே.
– நம் பாவங்களை உணரும் நிலை வரும் போது அவற்றை எங்கே போய் கரைப்பது என்று குழப்பிப்போய் கடைசியில் வாசி எனும் உண்மை வழியை ஏற்றுக் கொண்டோமானால் மந்திரி போன்ற சிவசித்தர் நம்மை புத்தம் புதிய தானியக் கதிர் போல் புதிதாய் பிறக்க வைப்பார்.

சிவசித்தரே!
ஐயனே நீவீர் வாசிகற் போர்க்கு
ஐயனே நீவீர் கழிவகற் றினோர்க்கு
ஐயனே நீவீர் இறைதேடி னோர்க்கு
ஐயனே நீவீர் வாசிக்கு
– தந்தையானீரே உங்களிடம் வாசி கற்றோருக்கு, பெரியவரானீரே உம்மால் கழிவு வெளியெற்றினோருக்கு, முனிவரானீரே நீர் உம்மால் இறை உணர்ந்தோர்க்கு, எஜமானரே நீர் வாசிக்கு.

சிவசித்தரே!
ஒன்பான் துவாரமும் சீழ்பட்டு வந்தோம்
ஒன்பான் துவாரமும் அறியச் – செய்தீர்
ஒன்பான் துவாரமும் சீராய் இயங்கியது
ஒன்பான் தாண்டி பத்தடைந்தோம்.
– நவதுவாரங்களிலும் நம்மை அறியாமலேயே நோய்வாய்ப்பட்டு அது குணமாகாமல் சிவசித்தரை வந்து அடைந்த பின்னே, நவதுவாரங்களைப் பற்றி அறிந்து, பின்னர் படிப்படியாக அவற்றை சீராக இயங்கச் செய்து பத்தாம் துவாரத்தை அறியும் நிலை அறிந்தோம் குருவே..

சிவசித்தரே!
ஓம் அது உடலுள் நுழையுமே
ஓம் அது உயிருள் – கலக்குமே
ஓம் அது பூராணம் ஆகுமே
ஓம் அது ஆன்மமே
– ஓங்காரத் தத்துவத்தை ஒரே வரியில் உடலும், உயிரும், பூரணமும் ஒன்று சேர்ந்த ஆன்மா என்று விளக்கிய சிவகுருவிற்கு கோடானு கோடி நன்றிகள்.

சிவசித்தரே!
ஔ அது உரைத்தால் கௌசல்யமே
ஔ அது என்றும் – கௌடமே
ஔ அது வெளிப்படும் கௌவையே
ஔ அது கௌவுமே
– ஔ எனும் எழுத்து தணை உணர ஒரு சாமர்த்தியம் (கௌசல்யம்) கொடுத்த சிவசித்தருக்கு நன்றி. ஔ எனும் மொழியின் கடின எழுத்தை (கௌடம்) புரிய வாய்ப்பு கொடுத்த சிவசித்தருக்கு நன்றி. ஔ எனும் எழுத்தை கவிதையாய் ஒலிக்கச் (கௌவை) செய்த சிவசித்தருக்கு நன்றி. ஔ எனும் எழுத்தை கவிதையாக்கி பிறர் மனதைக் கவரச் செய்த (கௌவு) சிவசித்தருக்கு நன்றி.

Previous Post
Next Post

Leave a Reply