‘ற’ கரக் கவிகள்

சிவசித்தரே!
எற்பாடு பயிற்சியும் எழுந்தவுடன் பயின்றால்
எற்று கூட்டும் உடல் – பார்த்தும்
எற்றைக்கும் அதுதரும் புதுமை என்றும்
எறுழ் வாசியால் என்றுமே
– சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னும், காலை விடியும் முன்னும் வாசியோகப் பயிற்சிகள் செய்தால் வியப்பு அதிகரிக்குமே நம் உடல் மாற்றத்தால், நிதம் ஒரு புதுமையான அனுபவமே, வாசி நம்முள் வலிமை கூட்டுமே.

சிவசித்தரே!
ஏறக்கட்டு னீரேஎம் நோய்எனும் பயத்தை
ஏற்றல் கொண்டோம் வாசியது – ஏற்றவாறு
ஏற்பாடு செய்கிறதே உடலுள் ஏற்கை
ஏற்படுத்து னீரேவாசி வழியில்
– முடிவுக்கு கொண்டு வந்தீரே எங்களை ஆட்டிப்படைத்த நோய் எனும் பயத்தை.. எங்கள் ஆழ் மனதிலிருந்து ஏற்றுக் கொள்கிறோம் வாசியை, எங்களுக்கும் இச்சமுகத்தில் மிகச் சிறப்பான அங்கீகாரம் தன்னை ஏற்படுத்தினீரே உம் வாசி வழியில் – “உணர்ந்தோர்”

சிவசித்தரே!
ஐம்பொறி யதுதன்மை காணும் வாசியால்
ஐம்பொறி யதுசீராய் இயங்கும் – வாசியால்
ஐம்பொறி யதுபாதை யாகும் சிவசித்தரால்
ஐம்பொறி சீர்கொண் டதே
– ஐந்து இந்திரியங்களும் உண்மை கண்டு சீராய் இயங்கி, கழிவுகளை வெளியேற்ற பாதை வகுக்குமே சிவசித்தரின் வாசி யோகமே.

சிவசித்தரே!
ஒற்றை நாடிதனை கொண்டேனே நின்னை
ஒற்றன் பார்த்தால் ஒற்கம் – கொள்வானே
ஒற்றை யேநீர் ஒற்று வாசி
ஒற்றுமை யானோம் ஒற்றைபோல்
– ஒல்லியான தேகம் கொண்டதால் தங்களை உணராமல் வேவு பார்க்கும் நபர் யாராயிருந்தாலும் வலிமை குறைந்து போவான். ஒப்பில்லாத தன்மை உடையவரான நீவிர் தீர்மானித்த வாசி எங்களை கழிவின்றி, ஒல்லியான, நோயற்ற மனிதராக்கி விட்டதே.. உமக்கு நன்றி

சிவசித்தரே!
ஓரை கண்டுணர உண்போல் யாருளர்
ஓர் உணர்ந்து நாடி – கூறினீர்
ஓராங்கு கழிவுகள் வெளியேற நீர்
ஓரம் பார்க்க வில்லையே.
– 2 ½ நாழிகை நேரம் நம் உடலில் என்னென்ன மாற்றம் விளைவிக்கும் உன்பதை ஆராய்ந்து எம் நாடிகளை உணர்ந்து கூறிய சிவசித்தரே ஒரு சேர கழிவுகள் வெளியேறினும் நீர் எங்களுக்கு பட்ச பாதம் பார்க்கலியே..

சிவசித்தரே!
ஔவி கொண்ட பெண்டிர் வாரும்
ஔவது விளக்கம் பொருள் – பாரும்
ஔவி நின்னை அழியச் செய்யும்
ஔவி அழிப் போனே
– பெண்களுள் அதிகமாக இருக்கும் பொறாமையை நீக்கு, பண்ணிரண்டாம் எழுத்து விளக்கும் பொருளைப் பாரும் பொறாமை நம்மை அழியச் செய்யும், பொறாமை அழியச் செய்ய சிவசித்தரால் மட்டுமே முடியும்.

Previous Post
Next Post

Leave a Reply