‘ள’ கரக்கவிகள்

சிவசித்தரே!
ஊளைச் சதை குறைக்கும் வாசியே
ஊளைச் சதை மறப்போம் – வாசியால்
ஊளை அதை மறந்தோமே வாசியால்
ஊளை அது மடிந்ததே
– உடலின் தேவையற்ற கொழுப்புகளை குறைக்கும் வாசியே, அதனை மறக்கவும் செய்யும் ( நாம் பட்ட உடல் வேதனைகளை) தீய நாற்றத்தையும் நம்மிடமிருந்து மடியச் செய்தவர் சிவசித்தரே..

199. சிவசித்தரே!
எள்ளு வாரும் எள்கு வோரும்
எள்ளளவு நினைப் பாரோ – பாவத்தை
எளிவரல் கூட்டுமே முதுமை எளிமையாய்
எளிதான எள் வாசியே
– ஏமாற்றுவோரும் பரிகாசம் செய்வோரும் சிறிதளவேனும் தங்கள் பாவங்களை நினைக்காவிடினும் முதுமை எனும் கொடுமை எளிதாய் இழிவுதனை அடைய வைக்குமே, இதிலிருந்து மீள்வதற்கு எளிதான ஒரு வழி வாசியே.

சிவசித்தரே!
ஏளனம் ஏற்று ஏமாப்பு தொலைத்து
ஏளனம் தூற்றும் ஏலுலகும் – யாவரையும்
ஏளனம் பாரா மனிதனாய் மாற
ஏளனம் விரட்டு வாசிவழி
– எப்போது பார்த்தாலும் பிறரை இகழ்ந்து பேசும் மக்கள் இவ்வுலகைத் தாண்டி ஏழுலகம் இருந்தாலும் அங்குள்ளோரையும் இகழ்ந்து பேசுவர். வாசியோகம் கற்போரால் பிறர் மனதை புரிந்து கொள்ள முடியும். எனவே அவர் யாரையும் இகழ மாட்டார். அப்படி யாரையும் இகழ்ந்தால் அவர் வாசி உணராதவரே..

சிவசித்தரே!
ஐராவனம் மேறிய நின்வாசி பயணம்
ஐயே நின்னை வான்புகழ் – காட்ட
ஐராவனம் தேவை யில்லை துறந்தீர்
ஐயனே மக்கள் சேவைக்காக
– உங்கள் வாசியோகப் பயணம் உலகப்புகழ் பெற்று சிவபெருமானின் வாகனம் போல் உயர்ந்து சென்றாலும், அத்தகைய புகழ் தேவையில்லை என்று இவ்வுலகினுக்காக வாசியே சேவை என்று வீற்றிருப்பவரே

சிவசித்தரே!
ஒளி காட்டும் வாசி எம்முள்
ஒளிறு கூட்டும் வசி – உம்மால்
ஒள் கொண்ட கொற்றவா நீவிர்
ஒள்ளி யன் தானே
– ஞானம் பெற்றோம் நாங்கள் வாசியால் அனைத்தையும் விளங்கிக் கொண்டு பிரதிபலிக்கிறோம் உம்மால் ஒளியுள்ள வேந்தனே நீர் அறிவுடையவரே.. (அறிவு என்பது அனைத்துமாகுமே)

சிவசித்தரே!
ஓளியைப் பெற்றோம் நின்தன் பயிற்சியால்
ஓளியாய் திகழ்ந்தோம் நின்தன் – பார்வையால்
ஓளியது சிதறாது நின்தன் அருகிருந்தால்
ஓளியினை உட்கொண் டோமே.
– நீங்கள் அழித்த (வாசியின்) கழிவுகளும் நீங்கள் அளித்த பயிற்சியும் எங்களுக்கு ஒழுக்க மூட்டியதே, உங்கள் பார்வை எங்களை ஒழுக்கமானவர்களாய் பிறர் பார்வையிலும் காட்டிய குருவே.. உங்கள் அருகில் இருந்தால் ஒழுக்கம் என்றும் சிதறாதே, ஒழுக்கம் என்பதை எங்களுள் புகுத்திய உமக்கு நன்றி..

சிவசித்தரே!
ஔவை உணர்த்திய சூடிகள் எல்லாம்
ஔவை பாட்டில் மட்டும் – படித்தும்
ஔவை சொல்லை உணரார்கூட சிவசித்தரின்
ஔவை கூற்றை உணர்ந்தனரே
– ஔவையார் அருளிய ஆத்திச்சூடியை அனைவருமே பாடங்களுக்காக மட்டுமே படித்தும், அவற்றின் பொருளை உணராதவரைக்கூட சிவசித்தர் இன்று ஔவைப் பாட்டையும் வாசிக்கும் அளவிற்கு கொண்டு வந்துள்ளாரே (தமிழ் வெளிக்கொணரல்)

Previous Post
Next Post

Leave a Reply