‘ழ’ கரக் கவிகள்

சிவசித்தரே!
எழுத்தறிவு எழல் கொண்ட தெம்முள்
எழிலியாய் எழில் உணர்தேன் – உம்மால்
எழுச்சி கூட்டியவா எழுதாக் கிளவி
எழினி வாசி வாசிப்பவரே
– எழுதவும் படிக்கவும் தெரிந்து கொள்ளும் அறிவினை எங்களுள் இருந்து எழும்பச் செய்தீரே, அறியாமை நீங்கிய மேகமாய், குறிப்புப் பொருள் உணர்ந்தோம் – உங்களால் உயர்ந்தோமே: மனனம் செய்யப்படும் இறைபாடல்களை திரையிட்டீரே.. நாங்கள் வாசி வாசித்தோமே..

சிவசித்தரே!
ஏழைமை எனும் ஏலாமை விஞ்ச
ஏழ்பிறப்பு எனும் ஏய்ச்சல் – விரட்ட
ஏழகம் போல் அறிவு கெட
ஏழை ஏற்றார் சிவசித்தரே!
– எங்களை அறியாமை என்னும் ஏதும் செய்ய முடியாத நிலை எட்ட, ஏழுபிறவிகள் மீது கொண்ட மூட நம்பிக்கை விரட்ட, ஆடுமாடு போல சிந்திக்கும் திறன் கெட்டு அறிவிலியாய் திரியும் ஏளனம் சிரிக்க, அனைத்தும் மறந்து ஏற்றார் சிவசித்தரே!

சிவசித்தரே!
அழல் கொண்டோம் சிவசித்தர் வாசியால்
இழைபு செய்தோமே சிவசித்தர் – வாக்கால்
உழுவன்பு பாத்தோம் சிவசித்தர் கண்டிப்பால்
எழில் களானோ மேநாம்
– அழகு கூடினோம் சிவசித்தர் பயிற்றுவித்த ஆசனங்களால், பாடல்கள் எழுதினோம் சிவசித்தர் உதிர்க்கும் சொற்களால், எல்லாப் பிறப்புகளுக்கும் அன்பு ஒன்றுதான் என்றுணர்ந்தோம் சிவசித்தர் கண்டிப்பால், மெகங்களானோம் வழிநடத்தும் சிவசித்தரால்…

சிவசித்தரே!
ஒழுக லாறுவே நின்தன் வாசியே
ஒழுக்கம் கற்பித்த தேஅதுவே – ஒழிவு
ஒழிப்பு கழிவுகளே சிவசித்தர் ஆசியால்
ஒழியாமை இன்றியும் மிளிர்ந்தோம்
– நல்லொழுக்க நெறி அருள்கின்றதே நீர் அளிக்கும் வாசியோகமே.. முறைப்படி வாழ கற்பித்தது அதுவே… கழிவுகள் இல்லாத நிலையைப் பெறுகிறோம் சிவசித்தர் அருளால்.. ஓய்விற்கு நேரமே ஒதுக்காமல் இருந்தும், சோர்வுறாமல் மிளிகிறோமே வாசியால்.

சிவசித்தரே!
கோழை யாகிநின் வாசல் வந்தோம்
கோழை படுதல் கொண்டோம் – சிவசித்தரால்
கோழை நீக்கி நிமிரச் செய்து
கோழை யாக்கி னாரே..
– மனவுறுதி தொலைத்து தாழ்வடைந்து சிவசித்தரிடம் வந்தோம். எம் உடலில் உள்ள கபம் போன்ற கழுவுகளை நீக்கி எங்கலை பாவல் செய்யாத சிறு பிள்ளைகளாய் மாற்றினீரே..

சிவசித்தரே!
ஆழ்அது கண்டு அழியும் மனமே
ஈழமாய் மாற்றி மிளரச் செய்து
ஊழ்கு கூட்டிய சிவசித்தர் நம்மை
ஒழுக்கம் உணர வைத்தாரே
– மனச் சிதறல்களால் கலங்குவது எங்கள் உடலும் தான்.. எனினும் எங்களைத் தங்கம் போல மிளிரச் செய்யும் குருவே.. உண்மயான ஒழுக்கம் உணர வைத்த ஆசானே.
அன்பு,
ஆலயம்
இயல்பு,
ஈதல்,
உடல்,
ஊன்,
எதுவோ
ஏற்றீர்…
ஐங்கரனாய்..
ஒழுக்கமே,
ஓதமாய் (தீட்சையாய்) ஔதீரே. (பிரகாசித்தல்)

Previous Post
Next Post

Leave a Reply