‘வ’ கரக் கவிகள்

சிவசித்தரே!
வெடூஉ கொண்டதனை தனக்குள் மறைப்பர்
வெதிர்ப்பு நீங்கும் வாசியால் – வெகுவாய்
வெகுளாமை ஏற்று வெள்ளனால் வெங்கதிர்
வெய்யோன் உம்மால் உணர்ந்தோம்.
– அச்சம் அதனை மறைத்து – தமக்குள் மறைத்து வாழ்வர், அவர்களின் கலக்கம் வாசியால் நீங்கும் அனேகமாய் கோபப்படக்கூடாது என்பதனை ஏற்று, பிரகாசமானவரால் (சிவகுருவால்), சூரியனின் கதிபோல் நாசிகளின் தன்மையை (சிவகுருவால்) உங்களால் உணர்ந்தோம்.

சிவசித்தரே!
வேரறுத்தோம் நோயெனும் வேதை யாலே
வேசமாய் கழிவகற்றி னோமே – வாசியால்
வேயனா னோம்சிவ குருவால் வேணவா
வேண்டு கிறோம் வேறூண்றவே
– அடியோடு ஒழிந்தோமே நோய் எனும் துன்பத்திலிருந்து … உக்கிரமாக கழிவுகள் அகற்றினோம்… வாசியால் பாடல் அமைத்தோமே சிவசித்தரால் மிகுந்த விருப்பத்தோடு.. உங்களை மன்றாடுகிறோம் – அதனை (எழுதுவதை) உறுதியோடும் தொடர்ந்தும் செய்ய ஆசிர்வதியுங்கள் குருவே..

சிவசித்தரே!
வைரி யாக்கி னீரேஎம் போன்றோரை
வைபவம் நின்னால் கிட்டியதே – யோகத்தால்
வைதருப்ப நெய்தோம் நின்தன் பாக்கியத்தால்
வைகள் கண்டோம் தமிழால்
– எங்கள் மனஉறுதியை அதிகமாக்கினீரே உங்கள் மகிமை எங்களுக்கு கிட்டியதே.. நீர் உணர்த்திய வாசியால், உம் பிள்ளைகள் எனும் யோகத்தால், செய்யுள் நடையில் கவிகள் எழுதினோமே, நீர் உணர்த்திய தமிழ் மந்திரத்தால் விடியல் கண்டோம்.

சிவசித்தரே!
ஒவ்வாமை எனும் கொடுமை மானுடனை
ஒவ்வொரு உடலுறுப் பிலும் – புகுந்து
ஒவ்வொன்று மேதொடர் நோயால் கெட்டுப்போக
ஒவ்வாமை ஓட்டுவார் சிவகுருவே..
– உடலுக்கு ஏதோ ஒன்று பொருந்தாமல் போவதால் அது தனித்தனியாக எல்லா உறுப்புகளிலும் நுழைந்து, ஏதோ ஒரு நோயைக் கொண்டு உடல் பாதிக்க, அந்த பொருந்தாத ஒன்று (வைப்பு) நீக்குவது சிவசித்தரால் மட்டுமே முடியும்.

சிவசித்தரே!
ஓவாமுயற்சி தந்தது சிவசித்தர் வாசி
ஓவாத ஓவமா – னோம் – சிவகுருவால்
ஓவர் எம்எழுத்துகள் ஓவாப் பிணி
ஓவகுத்த சிவசித்தருக்கு சமர்ப்பணம்
– இடைவிடாத முயற்சி தனை தருகிறது சிவசித்தர் அருளும் வாசியோகம்: இடைவிடாத எழுத்துகளின் கோவைகளானோம் சிவகுருவால்: சிற்பிகளாக்கு எங்கள் எழுத்துகளுக்கு வடிவம் கொடுத்து, தீராப்பிணி ஒழித்த சிவசித்தருக்கு அனைத்தையும் சமர்ப்பிக்கிறேன்.

சிவசித்தரே!
வௌவம் தனை அகத்தில் கொண்டவர்
வௌவு கூறதகுதி யில்லை – எமக்கு
வௌவ மாயெம் குறைதனை ஏற்றும்
வௌவு அதுநின் பொறுமையே..
– தாமரைபோன்ற நெஞ்சம் கொண்ட சிவசித்தரே, உம்மை எதனுடனும் ஒப்பிடும் தகுதி எங்களுக்கு இல்லை: தாமரையாய் மலர்ந்து எங்கள் குறை தீர்க்கும் ஏந்தலே, மேற்கோள் காட்டலாம் நின் பொருமையை…

வாடும்
மலரல்ல
வாசி..
வாடா மலராய்
மணமும்,
ஒளியும்,
அனைத்தும்
உணர்த்துவதே
வாசி

– சிவசித்தரின் வாசி…

Previous Post
Next Post

Leave a Reply