‘ர’கர கவிகள்

சிவசித்தரே!
ரெட்டை கிளவி கூறும் தமிழும்
ரெட்டை துவாரம் உணர்த்தும் – வாசியும்
ரெட்டை பிறப்பும் உணரலாம் இப்பிறவியில்
ரெண்டாம் பிறப்பு பிராணனே
– இரட்டைகிளவி கொஞ்சும் தமிழும், வாசி உணர்த்தும் இரு நாசியும், நமக்கு உணர்த்துமே ஒரு புதுப் பிறவியை.. அது சிவசித்தர் உணர்த்தும் பிராண சக்தியே.

சிவசித்தரே!
ரேழி உணர்ந்து செல்வாரே மனிதர்
ரேகை பதித்து செல்வோரே – இறைவர்
ரேசகம் தவிர்த்து வெல்வாரோ எவரும்
ரேகை கூறுமே வாசியே
– நாம் செலும் பாதை உணர்ந்து செல்பவரே மனிதர், நல் அடையாளத்துடன் வளமோடு, நோயின்றி இறப்பவரே இறைநிலை கான்பவர், சுவாசம் தவறினால் எதனையும் வெல்ல முடியாது, ஜாதகம் கூறி பலிக்காத ரேகை கூட வாசியால் மாறுமே..

சிவசித்தரே!
அரை நூற்றாண்டு ஆணவம் கொண்டு
இரை தேடும் விலங்காநீ – மனிதா
உரை கொண்ட இறையை விலக்கி
தேரை கொண்டு வீழ்ந்தீரே
– எத்தனை வயதானாலும் திமிர் கொண்ட பலர் உணவு என்ற பெயரில் விலங்கை விட கேவலமாய் வாழ்ந்து., தன்னுள் உள்ள இறைமையை உணராமலேயே தேரை கொண்ட இளங்கன்றாய் கருகினீரே.

சிவசித்தரே!
ரொக்க மிருந்தால் உலகை வாங்கும்நீ
ரொக்க மிருந்தும் மருந்தை – வெல்ல
ரொக்க மிடறு விழுங்க முடியா
ரொக்க மேநின்னை விழுங்குமே
– பணமிருந்தால் உலகை வங்கலாம் என்று நினைப்பவரே, பணமிருந்தும் உன்னால் மருந்துகளை வெல்ல முடியவில்லையே உன்னால் பணத்தை விழுங்க முடியாது ஆனால் பணம் உன்னை விழுங்கிவிடுமே…

சிவசித்தரே!
ரோகி யானோம் எதனால் எண்ணடா
ரோக மதுவந்தது மலத்தால் – தானடா
ரோதி னம்நின்னை மாற்றாது உணரடா
ரோசனை வாசி மட்டுமடா.
– நோயாளியானது எதனால் என்று ஆராய்ந்து பார்த்தால் அது மலத்தால் என்று புரியும்… அழுவதினால் எந்த பயனும் இல்லை… நோயிலிருந்து விடுபட உனக்கான ஆலோசனை வாசி மட்டுமே.

சிவசித்தரே!
ரௌத்திரம் கொண்த மானுடர் கேளிர்
ரௌத்திரம் கொல்லும் மானுடர் – மூளையை
ரௌத்திரம் விரட்ட மருத்துவம் உதவா
ரௌத்திரம் துரத்தும் வாசியே
– கடுமையான கோபம் உடைய மனிதனே கேள்.. கோபம் உன் மூளையைக் கொல்லும், கோபத்தை விரட்ட மருந்தே கிடையாது: ஆனால் வாசியோகம் உன்னை அமைதியாக்குமே.

மானுடர்
வாழ
வழிகள்
பல..
தூய
வழி
உணர்த்துபவர்
சிவசித்தரே!!

Previous Post
Next Post

Leave a Reply