‘ண’ கரக் கவிகள்…

சிவசித்தரே
ஊண் உங்கள் உயிர் கூட குடிக்கும்
ஊண் உங்கள் உயிர்கூட – வளர்க்கும்
ஊணன் பெருப்பான் உண் உண்டு
ஊணன் மாற்றுவான்(ர்) சிவசித்தரே
– உணவு அதிகமானால் அது உங்கள் உயிரைக் கூடக் குடிக்கும், அதே உணவு அனுபவமானால் அது உங்கள் உயிர் வளர்க்கும்… அதிகமாக உண்பவன் உடல் பெருப்பான், அவன் உடல் பழைய நிலைக்கும் கொண்டு வர சிவசித்தரால் மட்டுமே முடியும்.

சிவசித்தரே
எண்ணலர் பலர்கூட எண் அடங்காது
எண்சாத்திரம் எண்ணப் பட – எண்ணல்
எண்குணத்தான் கூறும் ஆதாரமே எண்ணிலி
எண்பித்த எண்மை சிவசித்தரே
– பகைவர் பலரும் மதிப்பிட முடியாத ஆதாரங்களை கணிதம் கூட கணக்கிடமுடியாது நம் உடல் துடிப்புகளை, சிவபெருமானார் உணர்த்திய ஆதாரங்களை என்னுள் எண்ண வைத்து, நிரூபித்த எளிமையே.. சிவசித்தரே

சிவசித்தரே
ஏணை ஏற்றம் எரிந்தோம் மக்களால்
ஏண் இழந்தோம் ஏண் – தொலைத்தோம்
ஏணமாய் வாசி செழிக்க சிவசித்தரே
ஏணி யாய் ஆனாரே
– தூளியில் தூங்கியபோது இருந்த உண்மை குணம், ஏற்றம் அனைத்தும் மக்களோடு பழகும் போது மாறுகிறதே… வலிமை இழந்தோம், பெருமை தொலைத்தோம்.. சுவாசம் தனை நிலைபெறச் செய்து நம்மை மீண்டும் செழிக்க வைக்க சிவசித்தர் ஒருவரே நமக்கு ஏணியாய் ஆனாரே.

சிவசித்தரே
கண்டீரே ஐங்கு ணமெனும் கண்டை
சண்டன் கூறும் ஐங் – கழிவும்
தண்டாது வெளி யேறும் ஐயமின்றி
பண்டிகை நித்தம் வாசியால்
– எங்களுல் இருக்கும் ஐந்து நற்குணங்களையும் கற்கண்டு போல் உணர, சிவபெருமானார் கூறும் ஐந்து கழிவுகளும் தடையின்றி வெளியேறினால் மட்டுமே முடியும் என்றும்., சந்தேகமேயின்றி அவற்றை வெளியேற்ற உதவும் வாசியால் நித்தமும் மகிழ்ச்சியே..

சிவசித்தரே
ஒண்மை ஓதுவதால் ஒன்றாது என்றுமே
ஒண்டி யாய்வாழ் உண்டோ – இல்லை
ஒண்ணாது ஒன்பதும் இயற்கை உணர்தல்
ஒண் உணர்வாய் வாசி
– நுண்ணறிவு என்பது ஏட்டுக்கல்வியால் என்றுமே கிட்டாது..தனித்திருக்கிறோம் என்று என்றுமே எண்ணவேண்டாம்…. இயற்கை தம்மோடு பொருந்துமாறு வாழ்ந்தால் ஒன்பதும் உணரலாம் நம்முள், பொருத்து உணர் நீ வாசியை, அது உன்னுடன் என்றும் நிழலாய்த் தொடரும்.

சிவசித்தரே
ஓணம் அது நாசி வழி
ஓணம் அது வாசி – காட்டும்
ஓணம் அது ஒன்றில் நிறுத்த
ஓணம் நிற்குமே சுழுமுனையில்
– நதி போல ஓடும் சுவாசம் நம் நாசி வழியே, நதி போல ஓடி, அது காட்டும் வாசி எனும் வழி, நதி போல ஓடி அது ஓரிடத்தில் வந்து நிற்குமே. அதுவே சுழுமுனையே… வழிகாட்டிய சிவசித்தருக்கே நன்றி.

சிவசித்தரே
அண்டயோனி அது கூடுமே ஒளியாய்
இண்டை யாய்நீர் உணர்த்த – இயற்கை
உண்ணர் மூலம் உணர்த்தி நீவிர்
எண்ணில் என்னை காட்டினீரே
– சூரியனை நமக்குக் காட்டுவதும் ஒளியே தாமரை போன்ற சாந்தமான ஒளி கொண்டவரே, நீர் இயற்கையாய் உணவும் மூலம் எண்ண முடியாதவற்றைக் கூட என்னுள் (ஆதாரமாய்) காட்டினீரே!
உண்மை
உணர்ந்தும்
உத்தமரே
உம்மிடம்
உண்மை
உடையோர்
உறைய
உற்றாரே!

Previous Post
Next Post

One thought on “‘ண’ கரக் கவிகள்…

Leave a Reply