‘ண’ கரக் கவிகள்…

சிவசித்தரே!
அண்ட பகி ரண்டம் அண்
அணங்கு கொண்டு அண்டினவன் – அணுவுதல்
அண்ணிப் பானால் நடக்குமே சிவசித்தரே
அண்ட யோனியெனும் நெருப்பே
– பூமியும் அதனைச் சுற்றியுள்ள பெரிய கோளமும் நோய் எனும் பீதியால் நெருங்க நாம் தஞ்சமடைவது, மேல்நோக்கிச் செல்லும் இனியவரான சிவசித்தரிடமே, அவரே சூரியனுக்கு நிகரான ஒளியே…

சிவசித்தரே
ஆண்டகை யேநீர் ஆண் மரமேநீர்
ஆணவம் சிறிதும் தலைக்கேறா – ஆணிவேரே
ஆத்தம் யாம் உமக்களிக்கும் உண்மை
ஆண்டு கடந்தழியா உறுதியே
– மனிதருள் சிறந்தவரே நீர், உன்னுள் உயிர்பொங்கும் விருட்சமே நீர் எனினும் ஆணவம் ஏதும் நின் தலைக்கு ஏற்றாத ஆணிவேரே, உங்களுக்கு (குருவிற்கு ஆற்றும் கடமை) நாங்கள் செய்யும் தொண்டு உண்மையாய் இருப்பதே, ஆண்டுகள் பல கடந்தும் ஆழமாய் வேரூன்றிய வில்வமே நீர்.

சிவசித்தரே
இண்டை யேநின் இணை யடியே
இணை கோடில் ஒன்பது – கூறினீர்
இணை யாய் இருத்தலே இயலுமே
இணக்க மாம் வாசியே.
– தாமரை போன்று ஒன்றோடொன்று ஒத்திருக்கும் பாதங்களை உடையவரே இரு நாசியில் நவ துவாரங்களை விளக்கிய சிவசித்தரே, ஒரு போதும் மாறாத நிலையில் இருப்பது எப்படி இயலும் என்று கேட்டவருக்கு முடியும் என்று சம்மதம் கூறி உணர்த்தினீர் வாசியால்.

சிவசித்தரே
ஈண்டு சென்று அள்ளினும் ஈண்நீர்வற்றா
ஈண்டு நாம் மாறுவோம் – ஈண்டுநீர்
ஈண்டு மாறு மேசிவ சித்தரால்
ஈண்டை யன் சிவனே
– கடல்நீரை தூயநீராக மாற்ற நாம் ஒருவராக முயல முடியாது, எனினும் நாம் ஒவ்வொருவராக இம்பிறவியில் சிவசித்தர் கூறுவதை உணர்ந்தால், நம்மைத் தொடரும் மக்களும் உணர்வர், புரிந்து கொள்வரே, சிவனார் வசிக்கும் இடமே, அது சிவசித்தர் மனமே!

சிவசித்தரே
உணி உண் உணர் நேரங்கண்டு
உணர்வு உணரார் கூட – உணர்வார்
உணவால் சிவசித்தர் கூற்றறிந்து உண்ணீர்
உண்பாட்டு அல்ல உணர்
– உணவுதனை நேரம் அறிந்து உண்ணுங்கள் உணவுதனை சரியாக உண்டால் தெளிவு பெறாதவர் கூட தெளிவாய் இருப்பர், சிவசித்தரையும் அவர் கூற்றையும் உணர்ந்து உண்டால் நீங்களும் உணர்வீர்கள் விளையாட்டு அல்லவே உணர்வென்றும் உணவென்றும்.

Previous Post
Next Post

One thought on “‘ண’ கரக் கவிகள்…

Leave a Reply