‘க’கரக் கவிகள்

‘க’கரக் கவிகள்
13. சிவசித்தரே!
கடம்பவனத் திலுரைக்கும் கங்காதரனே எல்லாமே
ககனமே அதுநிரைக்கும் வாசியே – கசரத்து
கசிவெளி யேற்றும் கங்காபத்திரமே வாசி
கட்புலனால் கடாட்சம் உணர்த்தியவா
– மதுரையில் வசிக்கும் சிவனின் அம்சமே, ஆகாயம் முழுதும் நிரம்பிய வாசியை உணர்த்த, கழிவுகள் வெளியேற்ற, நீர் விடும் அம்பே வாசியே, உம் பார்வையால் மோட்சம் பெறுவோம்.

14. சிவசித்தரே!
காத்திரந் தனில் காந்திகூட் டியவா
காசினியை நின்காலாடி தன்னால் – காப்புநாண்
காணார் காச முற்றார் உம்மை
காயசித்தி கூறும் காரகனே
– உடல் ஒளியைக் கூட்டியவரே, பூமியைத் தீயவற்றிலிருந்து மீட்க முயர்சிப்பவரே, சளியை உடம்புள் கொண்டவரே குருடர்- அவர்தம் உடல்தனை நல்லுடலாக்கும் சித்தி அறிந்தவரே.

15. சிவசித்தரே!
கிடக்கை யோகிரப் பெயர்சியோ மாற்றாது
கிரகபதி யோகிருத் தியம்கொடா – கிருபை
கிரமம் உணர் வாசியை அது
கிரகிக்குமே வாசி கிளப்புமே
– மனிதனின் உடல் மாற்றம் தன்னை பூமியோ, மற்ற கிரகங்களின் பெயர்ச்சியோ நிர்ணயிப்பதில்லை, சிவசித்தரே – உம்மை பின்பற்றி ஏற்றால் உம்முளிருந்து எம்மை அறியச்செய்து, எம்முள் வாசி கிளம்புமே.

16. சிவசித்தரே!
கீழ்மடை நிலமே நாம்வாசி யறிவா
கீழ்மக்கள் ஒருபெற்றோமே உம் – அணுக்
கீறுவென் றதால் கழிவேஉம் கீல்வாயு
கீழ்கணக்கு உணர்த்திய வா
– அற்பராய் இருக்கிறோம் நாம் வாசியை உணராத போது- தண்ணீரில்லா நிலமதனைப் போல. ஆம், சிவசித்தர் உணர்த்திய வாசி நம் அணுக்களின் பிளவை உணர்த்துகிறது. நம் உடலில் அதிகமாகும் வாதமும் கழிவே என்று அகம், பொருள், இன்பம் அனைத்தையும் வாசி மூலம் உணர்த்தினீரே!

17. சிவசித்தரே!
குபதர்காள் குழீஇ அடைந்து நின்னை
குடந்தாள் நாம் குச்செறிந்தோம் – குசலம்
குதுகலித்து குடும்பியா னோமே குடிகொள்
குடர்குறை சேர்நின்னை குவி
– தீயவற்றை உடலில் கொண்ட நாங்கள் ஒன்றுசேர்ந்து வந்தடைந்தோம் நின்னை, உம்மை வணங்கியதால் உடல் சிலிர்த்தோம் நாங்கள், நலம்பெற்று மகிழ்ச்சியுற்று எங்கள் சுற்றத்தை நன்றாய் கொண்டு செலுத்துகிறோம், எங்கள் குடலிலுள்ள கழிவுகளை நித்தம் வெளியேற்றும் வித்தை உணர்த்திய உம்மைக் கைகூப்புகிறோம்.

18. சிவசித்தரே!
கூழனா யிருந்தோம் கூசிநின் றோமே
கூடகம் நீக்கிஎம் வாசிகூட்டி – யுணர்தியவா
கூர்ப்பு அதூவும் வளர்த்தீரே எம்முள்
கூற்றுவன் தோற்றாலே கூற்றிடமே
– தெளிவில்லாதவர்களாய் வெட்க ஜீவன்களாயிருந்தோம், எம் வஞ்சகம் நீக்கினீர், எங்கள் பிறாணனை உணரச்செய்து, எங்கள் நுண்ணறிவு வளரச்செய்து உணரச் செய்தீரே.. – சிவசித்தரே – இதனால் எங்களின் இறப்பு (மடிந்த அணுக்களின் வெளியேற்றம்) வென்றது யமனையே.

Previous Post
Next Post

Leave a Reply