சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

41. தீபநாளில் உடல் உண்மை, என்பதை அறிந்து ஈசனின் திருவருளால் தீப ஒளியை உன்னுள் காண்.

கனத்த உடலால் உணர்வை அறியாத
உம்தேக ஒளி அடையாதே .

வாசியோக அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீப திருநாள் வாழ்த்துக்கள் . 2013 – சிவசித்தன்.

42. நீ என்னும் எண்ணம் உண்மைதான் என்றால் உனக்கு நன்மையே .அப்போ உலகில் நன்மை ஓன்று தான் உள்ளது .உலகை இயக்குவது வாசி என்ற ஓன்று தான். அவ்வாசியே ஈசன் .வாசியை உண்மையை உணர் உன் உடலில் உண்மை என்பது உன் உடம்பில் வெளிவரும் .அப்போ உண்மை என்ற ஓன்று தான் உலகில் உண்டு . இது போல் எல்லாம் ஒன்றுதான் . உணர்ந்து பார் உண்மை உன் உடம்பில் – சிவசித்தன்.

43. உண்மையை உணர், உன் உள்ளம் உண்மையை உணர்த்தும் உள் இறைவனால் (உண்மையால்) உன் உள்ள உணர்வுக்கும் உணர்வின் சக்திக்கும் வேறாக உலகில் எந்த சக்தியும் இல்லை – சிவசித்தன்.

44. உண்மை எது வென்று தெரியாமல் பேசுகிறான் .உன்னை அறி, நீ படித்த புத்தகம் உண்மையில்லை உன்னுள் தான் உன் அகத்தில் தான் உண்மை எண்ணம் எழுத்து செயல் அனைத்தும் உள்ளது – சிவசித்தன்.

45. என் உடலில் உள் உண்மையை நானே அறிந்தவன் .என்னுள் செயல்படும் வாசியே இறைவன் .நான் உணர்ந்ததை மக்களுக்கு சொல் நினைத்தேன், அனைவரும் என்னிடம் உண்மையாக இருப்பதாக சொல்லி என்னிடம் சில சூட்சம விஷயங்கள் கேட்பதை அறிந்து அவர்களிடம் சொல் மறுத்து விட்டேன் .நான் அறிந்து உணர்ந்த இறை பேராற்றல் சக்தியை உணர் வைப்பதே என் எண்ணம். இனி உலகம் முழுவது என் எண்ணம் முழவதும் செயல் படும் , தவறாக நினைப்பவன் உடலில் என் எண்ணத்தின் அணு செயல்படும் நிலையில் உன் உடல் நடுங்கும் உண்மையடா – சிவசித்தன்.

Previous Post

Leave a Reply