சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

36. இனிவரும் எம் காலம் உனக்குள் உன் அணுவால் உனக்குள் யாம் உணர்த்துவோம்

.I “உண்மையை உணர்த்த காலம் தேவையில்லை”

ii” உணர்த்தும் காலம் எல்லாம் ஒன்றே வாசியும் ஒன்றே ”
. iii” உண்மையில்லை உன்னுள் மலம்சலம் உணர்த்தும் அதையே”

iv ” வாசிஒளி தானேஉணர்த்தும் வாசியின் பொருளை உன் அகத்தே”

v “வாசியே உணர்த்தும் “நான் என்ற சொல்லின் அகந்தை” உணமையாய்”
VI” உண்மையை அறியாத மனமே வாசியை அறி ”
vii” உணர்த்தும் உண்மை உன்னுள் உண்மைதான் “.
Viii” உண்மையில்லை என்றால் வாசி உன்னுள் இல்லை ”
ix” வாசியில்லையேல் உன் அகத்தே ஈசனில்லை”
x” உடம்பே உண்மை,வாசியால் உண்மை நாம ஒலியே ஈசன் ஒளி”
xi”வாசியோகமே வாழ்வின் வாழ்வாதாரம் ”
xii”வளமாக வாழ வாசியே ”
xiii”உண்மையும் உணர்வும் வாசியால்தான் ”
xiv”உனக்குள் தானே உணர்வாகும் ஒளியே ஈசன் ”
. Xv”உன்னை அறிந்து உயிர் வந்து வாசி அறி மனமே”

37. உண்மையான உணர்வு உனக்குள் தான் உண்டு .அந்த உண்மை பற்றி பேசினால் உனக்குள் ஏன் பயம் வருகிறது .உண்மை உன்னை அழித்து விடும் என்ற எண்ணமே, காரணம் உன் அகத்தில் உண்மையில்லை, தண்டிக்க கடவுள் இல்லை, கடவுளை காணவில்லை என்ற எண்ணம் உனக்குள், மனித இறைவன் உனக்குள்தான் உண்மையாக இருந்து பார், படைத்தவனை உன்னுள் காணலாம்உண்மையாய், உணர்வாய் – சிவசித்தன்.

38. உன்னையே நீ உணரவில்லை, இது வரை வந்த, சொல்லிய, செய்திகள் உன்னை உணர்ந்தால் எது உண்மை என்று தெரியும் .உன் காலம் உனக்குள் உன் அணுவால் யாம் உன் உள்ளிருந்து செயல் படும் நிலையை நீ உன்னுள் உணரப்போகிறாய், எக்காலத்திலும் உன்னுள் நிலைத்திருப்பவன் – சிவசித்தன்.

39. உடல் உணர்வை அறிந்து, உண்மை புரியாத நீ, உன் உடல் கழிவு அகன்றாலும் நடுநாடி தன்னை உணர்த்துவது முன் வெளிசென்றால் மற்ற கழிவு வெளிசெல்லாது .உணர்துமடா எம் வாசி, இயற்கையாய் உன்னுள் நிலைபெறுவேன்  – சிவசித்தன்.

40. இதுவரை காலம் (ஆயுள்)சென்றது, உணர்த்தியவன் உண்மையை உன்னுள் உணர்த்தவில்லை , உடம்பு உண்மை என்று நினை , உன் அகமே உணர்வால் உண்மை உன்னுள் வெளிப்படும்.இயற்கை தான் உன் உடம்பின் பேராற்றல் உணர்த்தும் உன் உடம்பு – சிவசித்தன்.

Previous Post

Leave a Reply