சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

31. உடம்பெல்லாம் சளி
வாசியால் சளி நீக்க
பாசம் இல்லை என்பாய்
உன்னுள் உண்மையை உணர்வாய்
வாசியை ஏற்று,
உண்மைதான் அகமே ஈசன் இருக்குமிடம்
யாம் பாசம் அற்று நீக்கமற நிறைந்தவன்உணர்வை
உணர்த்தி உன்னுள் உணர்வாய்வாழ்வேன் – சிவசித்தன்.

32. மனிதனே நீ இறக்கும் போது உன் பணம் உன்னை காப்பற்றுகிறதா? நீ வாழும் போது அதுதான் வாழ்கிறது, நீ அல்ல, அதை பார்த்துதான் உன்னை மதிப்பதாக நீ நினைப்பது தவறு .உண்மையில் மனிதன் பணத்தைதான் மதிக்கிறான். மனிதனை அல்ல  – சிவசித்தன்.

33. காணாத காட்சி காட்டும் இருவழியில்
ஒரு ஒளியை….
எம் வாசிதான் உன்னுள் -பாரடா
எம் நெருப்பான ஒளிதனை
உம் உடல் அணு தானே உன்
முகக்கண்ணில் உணர்த்தும்
எம் (ஒளி)கண்ணொளி …
உன்னுள் ,உன்னுள் அணுவின் உணர்வு உன்னுள் …
உண்மைதான் உன்னுள் உணர் ந்து பாரடா – சிவசித்தன்.

34. மரமே மனிதன்
மனிதனே மரம்
மனிதனின் பேராற்றலை
உணர்த்தும் மகத்துவமடா
உடல் அணு உணர்த்தும் வாசியே
எம் சிவசித்தனடா – சிவசித்தன்.

35. நெருப்பானவன்
நெருப்பால் உருவானவன்
உன்
அணுவைப் பிளந்து உண்மையை
உன்னுள் உணர்த்துபவன் – சிவசித்தன்.

Previous Post

Leave a Reply