சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

26. பித்தன் என்பாய்
சித்தன் என்பாய்
வாசியை ஏற்று , உன் உடல்
உண்மை என்பாய்
மரத்தின் உணர்வை உன்னுள் உணரும் போது
உடல் தான் உண்மை என்பாய்
எம் வாசியே உண்மைதான், உண்மை உணர்த்தும்
உன் அணுவை அறிந்து மெய்தான் மெய் என்பாய் – சிவசித்தன்.

27. மரம் தான் உன் வாழ்வில் வாசியாய்(காற்றாய்)
அதன் உணர்வை உணர்த்தி உடல் வளர்கிறது ,
உடலுக்கு சொத்தே இயற்கையான மரம் தானடா
மரமே மனிதனாய் படைத்தான் இறைவன் -உண்மைதான்
எம் வாசியை உன்னுள் உண்மையாய் ஏற்று உன்
உடல் உண்மையை உணர்த்தும் உன்னுள் – சிவசித்தன்.

28. பெருத்த உன் உடல் வாசியால் தானே குறையும்
உண்மையை நீ அறிவாய்….
இதுவரை
குறையும் என்ற எண்ணிய மனிதா – ஏன்
குறையவில்லை உன் அணுவை அறியாத நிலை உன்னுள்
அணுவை அறிந்தவன் உண்மையை உணர்வாய்
உனக்குள் உணர்த்துவான் – சிவசித்தன்.

29. கனத்த உன் உடலால் தனதுண்மை அறிய மானிடா
காணாத பேரின்பம் காட்டும் உன்னுடம்பு வாசியால் – சுளிமுனை
காட்சி உன் நெற்றிமையம் தானே கடக்கும் ஏழ்நிலை
உண்மை தான் என்பான் வாசி அறிந்தவன் – சிவசித்தன்.

30.காணாத உணர்வே காட்டும் உன்னுடம்பு
அறியாத உணர்வை உணர்த்தும் எம் வாசியே
உணராதவன் இதுவரையில்லை உனக்குணர்த்த
உண்மையே மெய்…
உன்மெய்யே வாசியான ஈசன் உன்னுள்தானடா…
இறக்கும் முன் அறிந்துஉணர், இதுவரை இறந்தவன் நிலையை உன் உடம்பே உனக்கு உணர்த்தும் எம் வாசி  – சிவசித்தன்.

Previous Post

Leave a Reply