சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

21. இனி யாரும் இறக்கும் போது உடல் உண்மையை அறிந்து, உடல் நலத்தோடு இறைவுணர்வோடு, உண்மையாக, உலக உண்மையை அறிந்து இறக்க வேண்டும் என்பதே என் எண்ணம், இதை செய்ய எம்மால் முடியும், மனிதனே நீ சிந்திக்க வேண்டும். உண்மைதான் உன் உடல் அணு சொல்லும் உண்மைதனை  – சிவசித்தன்.

22. வாசியை உணர்.
மரம் போல் வாழ்.
வாசியே இயற்கை.
இயற்கையே இறைவன் – சிவசித்தன்.

23. கண்ணல்ல வாசியின் உண்மையை உடல் வெளிப்படுத்தும் உணர்வு மனித பேராற்றலின் ஒளி வடிவம்  – சிவசித்தன்.

24. பொய் சொல்ல தேவையில்லை, உண்மையாக சொல்லவேண்டும், உண்மையாக சொல்கிறேன் என்று சொல்வது உண்மையில் அது உண்மை கிடையாது, உன் உடல் அணு அறியும் எம் சொல்லை உண்மையாய் உணர்த்தும் உன் உண்மை உடல்…கோவில் நீ உண்மையாகவா வேண்டுகிறாய் இல்லை,அதனால்தான் நீ சிரமப்படும் உன் உடல் நோய் இன்னும் தீரவில்லை ,பிறகு ஏன் அங்கு செல்லுகிறாய் , இந்த வார்த்தை படித்தவுடன் சிலருக்கு வரும் , அதை உன் அகம் சொல்லுமடா – சிவசித்தன்.

25. மலசிக்கல் எல்லா மனிதனுக்கும் உண்டு , மனிதன் நான் இன்று காலை மலம் போயிட்டேன் என்று விரைவாக சொல்வான்.அது உண்மையல்ல ,அவன் அப்படி சொல்லகாரணம் அவன் உடல் அணுவில் உண்மையில்லை ,உடல் முழுவதும் மலம்சலம் நிறைந்து உள்ளது , அணுவின் செயல்பாடு இல்லாமல் இருப்பதுதான் காரணம் – சிவசித்தன்.

Previous Post

Leave a Reply