சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

16. நலமென்னும் உண்மை வாசியால் தான் உணர்வு, மற்றவை எல்லாம் அழிவே – சிவசித்தன்.

17. நெற்றி பொட்டின் உண்மையை அறியாதவன், சொல்வதெல்லாம் உண்மைஎன்றால் உன் உடல் நலமாய் இருக்க வேண்டும். நீ வணங்கும் ஈசனிடம் கேள் எது உண்மை என்று. உண்மையான ஈசன் பக்தன் என்றால் உன் உடலை சரிசெய்ய சொல். யாம் சொல்லும் ஈசனே உண்மையானவன். அவனின்றி ஒரு அணுவும் அசையாது என்பது உண்மை என்றால், உன் ஈசனிடம் கேள், யாம் யார் என்பதை, எம் சொல்லை தவறாக நினைக்கும் உன் உடல் அணுவே துடிக்கும் நிலையை உணர்த்தும் என் சொல்லின் உண்மையை – சிவசித்தன்.

18. நலமாய் நலத்துடன் வாசியால்தான் உண்மை
வாழ்வாதாரம் உணர்ந்து வாழ்வாய்  – சிவசித்தன்.
19. உண்மை உணர், உன் நெற்றி பொட்டின் மையம் திறக்க தானாய் தன்னுள் நிலைபெறும் வாசியை ஈசனே என்று எண்ணம் உண்மையாய் என்னும் எண்ணத்தில்தான் உயிர் அணுவின் உண்மை புரியும்  – சிவசித்தன்.

20. உண்மை உன் மெய்க்கு தெரியும், உணர்வு உன் உடல் அணுவே அறியும், தானே ஒளிரும் உன் அகமான ஒளி வாசியால்  – சிவசித்தன்.

Previous Post

Leave a Reply