சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

11. இனிவரும் எம் காலம் உனக்குள் உன் அணுவால் உனக்குள் யாம் உணர்த்துவோம்

” உண்மையை அறியாத மனமே வாசியை அறி ”
” உணர்த்தும் உண்மை உன்னுள் உண்மைதான் ”
” உண்மையில்லை என்றால் வாசி உன்னுள் இல்லை ”
” வாசியில்லையேல் உன் அகத்தே ஈசனில்லை”
” உடம்பே உண்மை, வாசியால் உண்மை நாம ஒலியே ஈசன் ஒளி”
மரமே மனிதன்
மனிதனே மரம்
மனிதனின் பேராற்றலை

உணர்த்தும் மகத்துவமடா
உடல் அணு உணர்த்தும் வாசியே
எம் சிவசித்தனடா – சிவசித்தன்.

12. காலம் எப்பொழுதும் உண்மையை உணர்த்தும். உணர் மனிதா. உண்மை எப்பொழுதும் உன்னுள்தான் இருக்கிறது -சிவசித்தன்.

13. “நான் என்னும் அகந்தை” உள்ளது என்று சொல்லும் மனிதா, உண்மையான பொருளை யாரவது உணர்த்த முடியுமா? அதற்கு முன் சில வரிகள் 1. இதுவரை உன்னை உணர்த்தி உடலுக்கு உயிர் பெற வைத்து வாழ்நாள் முழுவதும் உயிர் என்ற நிலை உடலுக்கு தந்து உணரவைத்து இறைவுணர்வோடு உன் உடலை உணர்த்திய மனிதன் எவனோ அவன் தான் உண்மையானவன் 2.அது மட்டுமா உடல் ஆரோக்கியம், குடும்பம் ஆரோக்கியம், எல்லா நலத்துடன் நீ வாழ்கிறாயா? சிந்தித்து பார் மனிதனே! 3. பிறகு தெரியும் யாருக்கு அகந்தை இருக்கு என்று. உண்மையாய் இருந்து பார் எது யார்க்கு இருக்கு என்று உன் உள் அணு சொல்லும் மனிதா! – சிவசித்தன்.
14. உண்மை எதுவென்று உணர்த்த உண்மையில்லை
உணர்த்த உடலறியும் எம்மை – சிவசித்தன்.
15. நெற்றி வழி தன்னை உண்மைதான் என்றுரைக்கும் உன் அணுவின் சொல்லே எம் எண்ணம், உணரடா! உண்மையாய் உண்மையை உன்னுள் உணர்த்துபவன் யாரடா? கேளாத உன் உடல் அணு கேட்டும் எம் சொல்லை, உணர்த்தும் எம் வாசியே உண்மை ஈசனை உன்னுள், உணர்வை உணர்வாய், இயற்கையாய் உணர்த்தும் எம் சொல் – சிவசித்தன்.

Previous Post

Leave a Reply