சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

108. கடைபிடிக்க வேண்டியது :
1. உள்ளூர் வாசியோகப் பயிற்சியாளர்கள் தினமும் பயிற்சி செய்ய மையத்திற்கு ஒரு வருட காலம் வர வேண்டும் அதன்பின்னரே ,வாரம் இருமுறை ,ஒருமுறை என்ற சலுகைகள் பரிசீலிக்கப்படும் .(திருமணம் மற்றும் விசேஷ காலத்திற்கு அமைதியின் பேரில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்)
2. வெளியூர் வாசியோகப் பயிற்சியாளர்கள் வாரம் ஒருனால் சனி,அல்லது ஞாயிறு (ஒருநாள்) கட்டாயம் வரவேண்டும்.ஆறு மாதங்களுக்கு பின்னரே சலுகைகள் பற்றி பரிசீலிக்கப்படும் .இரண்டாம் நிலையாக மேலும் ஆறுமாத காலத்திற்க்கு 15 நாள்களுக்கு ஒருமுறை கட்டாயம் மையத்தில் வந்து பயிற்சிகள் செய்தல் வேண்டும். மூன்றும் நிலையாக ஒரு ஆண்டுக்கு பின்னரே மாதம் ஒருமுறை மையத்திற்கு வந்து கட்டாயம் பயிற்சிகள் செய்ய வேண்டும்.
3. வாசியோகப் பயிற்சியாளர்கள் தங்கள் பயிற்சியும் ,உணவு முறையும் முறையாக கடைபிடித்தால் உடல் உபாதை எதுவும் வரது.மீறி தொந்தரவு தரும் என்றால் சேவையாளர்கள் அவரின் பயிற்சியையும் .சுவாசத்தையும் நன்கு பரிசோதனை செய்து மீண்டும் ஒருமுறை பயிற்சியை தொடர வேண்டும். சிவகுரு சிவசித்தர் அவர்கள் தங்களின் பயிற்சியை கண்காணித்த வண்ணம் களத்தில் இருப்பார் . எனவே தீர்வு என்று கேட்டு யாரும் அணுக வேண்டாம் . பயிற்சியை நல்ல முறையில் ஆழ்ந்து மூச்சுடன் தொடர வேண்டும்.
4. கண்டிப்பாக இரவு 10-11 மணிக்குள் உறங்க துவங்கி விடவேண்டும் . அதிகாலை 3.30க்கு எழுந்து 1-20 லிட்டர் (டம்ளர்)தண்ணீர் பருகினால் மட்டுமே மலம் சிக்கலின்றி வெளியேறும். 

Previous Post

Leave a Reply