சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

6. காட்டில் இல்லை இறைவன், மலையில் இல்லை இறைவன், உன் அகமே, என்றால் கேட்காமல் செல்வது எதற்கு தெரியுமா இது வரை எவனும் அகத்தில் இருப்பதை உணர்த்தவில்லை, உண்மை. வேண்டுமானால் அவ்விடம் செல்வோர்களுக்கு
உண்மை தெரியும். உண்மையை உணர், உன் அகத்திலே இறைவன் இருப்பதாய் நீயே உணர்வாய் – சிவசித்தன்.

7. ஈசனின் பக்தன் என்றால், நீ அமாவாசை, பௌர்ணமி என்றவுடன் கோவிலை சுற்றுகிறாய், எதற்கு வீட்டுக்கு வந்தவுடன் கால் வலிக்கிறது என்கிறாய். ஈசன் பக்தனே காலை உள் ஏற்று வலி இல்லாமல் ஈசனை அறிவாய் உன் அகத்தே. (உன் வீட்டிலும் இருந்தே) – சிவசித்தன்.

8. உண்மை எது வென்று தெரியாமல் பேசுகிறான். உன்னை அறி, நீ படித்த புத்தகம் உண்மையில்லை. உன்னுள் தான், உன் அகத்தில் தான் உண்மை, எண்ணம், எழுத்து, செயல் அனைத்தும் உள்ளது – சிவசித்தன்.

9. பணம் நீ படைத்தது, உன் அக அணு உணர்வை படைத்தவன் யாம், முடிந்தால் உன் பணம், உன் புகழ், உன் செல்வாக்கு, இன்னும் எதுவாக இருந்தாலும் விட்டுவிட்டு வா, உன் அகமே இறைவன் என்பதை நான் உணர்த்துகிறேன், எனக்கு நான் என்ற அகந்தை இல்லை, நீ விட்டு விட்டு வரமுடியாது என்று சொல்லும் போதுதான் நான், அகந்தை உன்னிடம் உள்ளது. உண்மை உணர் உணரவைப்பேன் – சிவசித்தன்.

10. உடல் உணர்வை அறிந்து, உண்மை புரியாத நீ, உன் உடல் கழிவு அகன்றாலும் நடுநாடி தன்னை உணர்த்துவது முன் வெளிசென்றால் மற்ற கழிவு வெளிசெல்லாது. உணர்துமடா எம் வாசி, இயற்கையாய் உன்னுள் நிலைபெறுவேன் – சிவசித்தன்.

Previous Post

Leave a Reply