சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

91. தேங்கும் மலத்தை உணர்த்தும் உன் உடம்பின் அணுவை மனிதனே வாசியால் அறிந்துக்கொள்.
92. உடம்பில் கழிவுகள் இருக்கும் வரை குருவை உணர முடியாது .குருவை அறியும் வழி வாசியே.
93. அணுவைப் பிளந்து வாசியால் அறிவை அறிந்து உடம்பில் உணரலாம்.
94. ஒழுக்கம் என்பது உடலின் செயல்பாட்டை அறிந்து அதன் அனுவிற்கு தேவையான வாசியோகப் பயிற்சியில் (உடல் நலம் பெறும்) நம்மை வழிநடத்துவது.
95. குருநாதர் உனது நாடியை பிடித்துவிட்டால், வாசியின் அணு உன்னுள் வந்துவிடும் .ஆகவே இடைநில்லாது தொடர் பயிற்சி செய் இல்லையேல் தொடர் வருத்தம் உடன் வரும்.

Previous Post

Leave a Reply