சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

76. உன்னையே நீ உணரவில்லை,இது வரை வந்த, சொல்லிய, செய்திகள் உன்னை உணர்ந்தால் எது உண்மை என்று தெரியும் .உன் காலம் உனக்குள் உன் அணுவால் யாம் உன் உள்ளிருந்து செயல் படும் நிலையை நீ உன்னுள் உணரப்போகிறாய், எக்காலத்திலும் உன்னுள் நிலைத்திருப்பவன் – சிவசித்தன்.
77. உண்மையை ஏற்றகொள்ளாத மனிதனே , உன் உடல் மலத்தின் வண்ணம் அறிந்தது உண்டா , எதற்கு கோவிலுக்கு செல்லுகிறாய் , உடலே ஆரோக்கியமில்லை ,வீட்டிற்கு வந்தவுடன் மன நிம்மதில்லை , தூக்கம் இல்லை ,தினந்தோறும் கவலை உடலில் உண்மையில்லைஉன் அகமே இறைவன் ,உணர்வும் அங்கே தேடி செல்லாதே , இருப்பதை அறி,காணாத இன்பம் காண்பாய்  – சிவசித்தன்.
78. இறைவனுக்கு அதிகாலை செய்யும் இறைபணியில் உன் உடல் மலம் போனால் ,உனக்கு உடலால் உண்மை விளங்கும் .உண்மை உணர்த்துவது உன் உடலே , உடலில் தான் உண்மை இறைவன் உண்டு உடலை சுத்தம் செய் ,உன்னுள் இறைவன் செயலாகும் – சிவசித்தன்.
79. யாம் கூறும் எல்லாம் உணர்வின் உண்மை,உணர்வால் உன் உடல் உண்மையாகும் போது, அதிகமான உணவு உடலுக்கு தேவை இல்லை , உன் (ஆண் பெண் )அதிகமான உறவும் கூட தான், உண்மைதான் , உன் உடல் அழியும் முன் உண்மை எது என்று உணர், மனிதா, இதெல்லாம் உண்மை என்று நீ நினைத்த அனைத்தும் உண்மை என்று உன் உடலுக்கு வாசியை இருவழி ஏற்று, ஒரு வழி நிலையாகும் போது உண்மை உன்னுள் நிலைபெறும்  – சிவசித்தன்.

80. பெண்ணே உன் உணர்வு உனக்குள் இருக்கும் உன் அகமறியும், அதை வெளிக்கொண்டுவா அதுவே உண்மை .உண்மையாய் இரு, உன் அகமே இறைவன் இருக்கும் இடமென்று இரு – சிவசித்தன்.

Previous Post

Leave a Reply