சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

71. உலகம் விரைவில் என்னை புரிந்து கொள்ளும்…. வாசியை உணர்ந்தவன். நல்ல வாழ்வை தருவேன் – சிவசித்தன்.
72. நீங்கள் அனைவரும் முதலில் உங்களை உணரும் தன்னறிவு நிலையை உணருங்கள்! உண்மை எது வென்றும் ,மனிதன் யார் என்றும் அறிந்தபின் , செயல்படலாம் . இறப்புக்கு முன் உடலை சுத்தம் செய்தும் ,உடலால் உன்னை அறிந்தும், உயிரால் உன் அறிவை அறிந்தும் வாழலாம் என்பதை நீ உணர் – சிவசித்தன்.
73. நலமாய் நலத்துடன் வாசியால்தான் உண்மை
வாழ்வாதாரம் உணர்ந்து வாழ்வாய் – சிவசித்தன்.
74. உண்மை உணர்,உன் நெற்றி பொட்டின் மையம் திறக்க தானாய் தன்னுள் நிலைபெறும் வாசியை ஈசனே என்று எண்ணம் உண்மையாய் என்னும் எண்ணத்தில்தான் உயிர் அணுவின் உண்மை புரியும் – சிவசித்தன்.
75. மனிதனே நீ இறக்கும் போது உன் பணம் உன்னை காப்பற்றுகிறதா? நீ வாழும் போது அதுதான் வாழ்கிறது , நீ அல்ல, அதை பார்த்துதான் உன்னை மதிப்பதாக நீ நினைப்பது தவறு .உண்மையில் மனிதன் பணத்தைதான் மதிக்கிறான் .மனிதனை அல்ல  – சிவசித்தன்.

Previous Post

Leave a Reply