சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

51. உன்னை அறியும் வரை உன் உணர்வே உன் அனுபவ இறைவன், உணர்ந்து பார், உன் காலம் உள்ள வரை – சிவசித்தன்.

52. சம்பளம் வாங்கியது உண்மை உழைப்பா, என்று யோசி மக்களுக்கு சேவை செய்ய தருவது. எந்த பணியும் செய்யாமல் வாங்கும் சம்பளம் , உன் உடலை கழிவுகளால் மூடி அழிக்கிறாய்.

உண்மையை உணர்ந்து பார், மக்களை நினைத்து பார், இறைவன், நாம் தவறு செய்தால் விட்டுவிடுவான் என்று நினைக்காதே, நடக்கும் .உண்மையா இதெல்லாம் என்று நினைப்பவன் , வந்து உணர்ந்து பார்………..உலகம் என்றும் நிலையானது ,வாசி என்றும் நிலையானது , மனிதன்தான் விரைவில் மாறப்போகிறான் – சிவசித்தன்.

53. தன்னை உணர்ந்து நல்ல வழியை மனிதனுக்கு சொல்லி கொடுத்து இறப்பு எய்தும் வரை மனிதன் நன்றாக வாழ வேண்டும். அவரே நல்வழி காட்டும் மனிதர் – சிவசித்தன்.
54. இறைவன் உன்னுள் இருக்கும் போதே தேடி அலையாதே, எங்கும் இல்லை, அவன் உள்ளிருக்கும் போதே உன் உடம்பின் உண்மையை அறியவேண்டும் மனிதா – சிவசித்தன்.
55. மனிதன் தன்னை உணர்ந்தால் அறிவை அறிவான். அறிவை உணர்ந்தால் தலையில் இருப்பதை அறிந்து அறியாமையை போக்குவான்  – சிவசித்தன்.

Previous Post

Leave a Reply