சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

46. தமிழனுக்கு தமிழ்தான் தெரியும், தமிழ் எழுது, தமிழே உன் உயிர் உணர்வை உணர்த்தும்,வேறு எந்த மொழியாலும் உன் உள் உணர்வை உணர்த்தமுடியாது – சிவசித்தன்.

47. இனி மனிதன் ஒருவன் தான் இருப்பான். உணராமல் இதை எல்லோரும் சொன்னாங்கள் இன்னும் அப்படியே தான் இருக்கு என்று சொல்லுபவன் உன் உடல் முழுவதும் உள்ள மலம் சலம் நீக்கு உண்மை பொருள் ஈசன் ஒருவனே என்று தெரியும் . பணத்தை வைத்து விளையாடாதே , அது முடிவில் உன்னை பிணமாக்கும் . உன் எண்ணம் உன் உடலில் அணுவின் செயல் யாம் , முடிந்தால் உன் உடலை அறிய முற்படு .உன் உடலே உண்மையை உனக்கு உணர்த்தும்  – சிவசித்தன்.

48. உள்ளம் உண்மை சொல்லும் உன் எண்ணம் உண்மையாய் இருந்தால், எண்ணத்தை உன் உடலில் தேடு, விடையாய் யாம், உன் எண்ணமே யாம்  – சிவசித்தன்.

49. உன்னை உனக்குள்ளே உன்னை உணர்ந்து உன்னால் உண்மையை உனக்குள்ளே உணரும் போது உன்னை உன்னாலே அறியமுடியும் என்பதை உணர்த்தும் உன் உள்ளம் – சிவசித்தன்.

50. வழிகாட்டி இல்லாத நிலை தான், மனிதன் அறியாமைக்கு உண்மையான காரணம், அறியாமை என்றால் சொன்னால் சிலர் எனக்கு எல்லாம் தெரியும் என்பான். ஆனால் உனக்கோ உண்மையை உணர தெரியவில்லையே – சிவசித்தன்.

Previous Post

Leave a Reply