‘அ’கரக் கவிகள்

11. சிவசித்தரே!
ஓவாப்பிணி தீர்த்த எங்கள் ஓகையே
ஒங்கரா மெனும் மெய்ஞானம் – ஓத
ஓவா முயற்சி அதுவே ஓத்து
ஓசனித்தோம் வாசி ஓச்சால்
– தீராப்பிணி தீர்த்த எங்கள் மகிழ்ச்சியே, பிரணவம் எனும் உண்மை கூற வைத்த உண்மை குருவே – இடைவிடாத பயிற்சியை உரிய இடைவெளியில் முயற்சி செய்து பெறும் பலனே வேதம் என்றுணர்தினீர் – வாசியை உட்செலுத்தி சிறகடிக்கிறோம்.

12. சிவசித்தரே!
ஔவை நோன்பு ஓதும்மகளிர் உம்முள்
ஔவியம் இல்லை உள்ளது – வாசியே
ஔடதம் வேண்டாம் சிவசித் தரிடம்சேர்
ஔதரியம்காண் வாசி.
– பெண்களுக்குத் தேவை நோன்பில்லை வாசி உணர்வே, அது மருந்தினின்றும், பொறாமையினின்றும், உதாரகுணத்தினின்றும் உங்களை மீட்டுக் கொடுக்கும், அதுவே சிவசித்தர் உணர்த்தும் வாசி…பெயர் : பிரதீபா செந்தில்குமார்

வாசியோக வில்வம் எண் : 12 04 306.

Previous Post

Leave a Reply