‘அ’கரக் கவிகள்

5. சிவசித்தரே!
உகம் முழுதும் உம்மால் பரவும்
உகப்பு எம் உட்கருஉத் – கிருஷ்டம்
உத்தாரணமாக்க மானுடம் உசிதம் பெற
உஞற்று உய்கை பெறவே
– இந்த யுகம் முழுதும் உம்மால் பரவுகிறது மகிழ்ச்சியே! எம் உள்ளத்துள் பரவியிருக்கும் சிறந்த உயர்ந்த பொருளாம் வாசியை எம்முள் எடுத்து நிறுத்தி எங்களை தகுதியாக்கினீரே, பெருமுயற்சி எனும் விதை விதைத்து ஈடேற்றினீரே வாசியை..

6. சிவசித்தரே!
ஊழ்த்தலே உடம்புள் உள்நுழையும் ஊனுருக்கியென்று
ஊன்று உலகினுக்கு ணர்த்தியவா – உம்மால்
ஊக்கம் பெற்றுவாசி ஊடறுத் தெம்முள்
ஊர்ச்சிதம் உணர்த்தினீர் ஊழ்குவால்
– அசைவமே உடம்மை உருக்கும் க்ஷரோகம் என்று தீர்மானமாக உலகினுக்கு உணர்த்தியவரே, உம்மால் வலிமை பெற்ற வாசி எம்முள் ஆழமாக உணரச் செய்து நிலையான தன்னை உணர்த்தினீர் தியானத்தால்..

7. சிவசித்தரே!
எழுதாக்கிளவி வாசியாம் உணர எஞ்ஞான்றும்
எண்குணத்தான் வாசிகூற முடியா – எண்ணளவில்
என்றூழ் எங்கண் தேடுவார் தேடல்லார்
எங்கண் எம்மனோர் வாசியை.
– வேதங்கள் தாண்டி ஒன்றுண்டு எனில் அது எக்காலத்திலும் வாசியே, எம்பிரான் உணர்த்திய வாசியை அளக்க முடியாதே, ஒளிவெள்ளமாம் சூரியனைத் தேடுவோர்க்கு, முதலும், முடிவும், கிரகங்களையும், நட்சத்திரங்கலையும் மிதக்கவிடும் இயற்கை சூட்சுமமே வாசி என்று உணர்த்தினிரே.

8. சிவசித்தரே!
ஏமுறு கொண்டோம் உம்மிடம் ஏக்கறுவாய்
ஏந்தலாய் உணர்ந்தோம் ஏகதேச – உருவகமே
ஏட்டுக்கல்வி, ஏலாமை என்பர் அதுவும்
ஏதியே வாசியே ஏகம்.
– மகிழ்வுற்றோம் உம்மிடம் பணியும் போதே பெரியோனே உம்மிடம் உணர்ந்தோம் வாசியே உயரென்று – ஏட்டுக்கல்வியால் உணரமுடியாது – இயற்கையை உணர்த்தும் ஆயுதமே வாசி உணர்த்தினீரே.

9. சிவசித்தரே!
ஐயுரவு நீக்கியது வாசியே எம்மை
ஐவனம் ஆக்கியது ஐம்பொறி – கடந்து
ஐந்தவித்தல் உணர்ந்து ஐம்முகன் நோக்கி
ஐது நொய்தாக ஐக்கியமே.
– எங்கள் சந்தேகங்கள் நீக்கியது வாசியே, எங்களை மலைநெல் போல சத்தானவர்களாக்கி, மெய், வாய், கண், மூக்கு, செவி கடந்து, அவற்றை அடக்கும் முறை உணர்ந்து- எம்பெருமானை நோக்கி, உடல்கணம் மறந்து இரண்டறக் கலந்தோமே.

10. சிவசித்தரே!
ஒள்ளியனே ஒன்பதும் வெளிக் கொணர்ந்த
ஒளிக்கற்றையே காலம் மாற – ஒத்தாங்கு
ஒளியுடல் ஒருமுகப் படுத்த உம்மால்
ஒத்து அது வாசிஉயிர்
– அறிவுமிகுந்தவரே.. நவதுவாரங்கள் செயல் புரிய வைத்தீரே! காலங்களுக்கேற்ப எங்கள் உடல் மாற வைத்தீரே! உடல் ஒளியேற்றி வாசி ஒருமுகப்படுத்த உலகை உருளச் செய்வது வாசியே.

Previous Post

Leave a Reply