சிவசித்தன் செவ்வானப் பிரபஞ்சக்கலை ஆன்மா உணர்ந்தவை 008

சிவசித்தனை வணங்குகிறேன்

பெயர் : R. பரணி,
வயது : 38
வில்வம் எண் : 14 04 204
ஊர் : கோயம்புத்தூர்,
அலைபேசி : +91 76677 64855,
தொழில் : தங்கநகை தொழில் (உற்பத்தி பட்டறை),
படிப்பு : 8ஆம் வகுப்பு,
எடை : 45 கி

சிவசித்தனின் செவ்வானப் பிரபஞ்சக்கலைக்கு வந்த காரணம் :

சரியாக சாப்பிட முடியாத நிலை, செரிமான கோளாறு, இடதுபக்கம் மூச்சுப்பிடிப்பு, தலைஅழுத்தம், வயிற்றுப்புண், எது சாப்பிட்டாலும் ஏப்பமாக வரும், பசியின்மை, போன்ற காரணங்களுக்கு தீர்வு வேண்டி வந்தேன்.

சிவசித்தன் நாடி பார்த்த பின் ஏற்பட்ட உடல் மாற்றங்கள் :

நேரத்துக்கு பசி எடுக்கிறது, உணவு ஆரம்பத்தில் கொஞ்சமாக எடுத்து கொண்டேன். இப்போது சிவசித்தன் கூறிய சரியான அளவாக எடுக்க முடிகிறது.

காரம் சேர்த்தால் உடல் தொந்தரவு வருகிறது. காரம் உணவில் சேர்ப்பதில்லை. உடலை பற்றி நல்ல விழிப்புணர்வு கிடைத்திருக்கிறது. மருந்து மாத்திரை இன்றி நிம்மதியாக இருக்கிறேன்.

சிவசித்தனை காணும் முன் வெளியுலகில் எடுத்துக் கொண்டவைகள் :

ஆறு மாதத்திற்கு மருந்து மட்டும் ரு. 1500 வரை செலவு செய்தேன். தற்பொழுது எடுத்துக்கொள்வது இல்லை. அக்குபஞ்சர் பார்த்தேன் ஆறு மாதமாக 1000ரூ வரை செலவு செய்தேன்.

பல யோகப்பயிற்சி செய்து பலன் எதுவும் அளிக்கவில்லை. வர்மசிகிச்சை, எண்ணெய் சிகிச்சை பார்த்தேன் சரியாகவில்லை.

சிவசித்தனிடம் வந்த பின்பு எந்த மருத்துவம், எடுக்காமல் எதுவும் செய்யாமல் இயற்கையாக என் உடல் இயல்பு நிலைலக்கு மாறுவதை உணர்கிறேன்.

பூரண குணம் அடைவேன் என்பதில் நம்பிக்கை இருக்கிறது.ஒரு நாளைக்கு சிவசித்தன் திருநாமங்கள்
6 முறை உச்சரிக்கின்றேன்.

உடல் தொந்தரவு இருக்கும் போது சிவசித்தன் திருநாமங்கள் உச்சரித்தால் உடல் இயல்பு நிலைக்கு வருகிறது.
சிவசித்தன் திருநாமங்கள் நின்று உச்சரித்தால் உடலினுள் சுழன்று கொண்டே இருக்கும்.

தேகசற்ப இறைஉணர்வை உணர முடிகிறது. பல்வேறு கோணங்களில் உடல் வளைந்து நெளிந்து ஆடுகிறது. என் உடலில் இருக்கும் கழிவு வெளியேறுவதை நன்கு உணரமுடிகிறது.

வெளியில் செல்லும் போது திருநாமங்கள் கூறிவிட்டு செல்வதால் அந்த செயல் நன்மையாகவே நடைபெறுகிறது. முன்பு இரவு வேலை பார்ப்பேன்.

சிவசித்தன் கலையை கற்றபின் அதிகாலை சீக்கிரம் எழுவதால் பணியை காலையில் துவங்கிவிடுகிறேன். நேரத்திற்கு பசிக்கும் உணவு உண்டு கடைபிடித்து வருவதால் வயிற்றுப்புண் தற்போது வருவதில்லை.

சரியாக இரவு 10 மணிக்குள் பணிகள் முடித்துவிட்டு உறங்கச் சென்றிடுவேன். நல்ல ஆழ்ந்த உறக்கம் கிடைக்கிறது.

உண்மைசிவசித்தன்.

Previous Post
Next Post