வணக்கம் சிவகுருசிவசித்தனே,
இயற்கை தன்னிலை உணர்ந்தே செயல்படும்.
ஊருக்காக வாழும்
இவன்
தன்னை இழப்பான்.
பிற அகம் அமைதியடைய
அவர்
பாரம் சுமப்பான்
சுமந்தே வரும்
கண்ணீர் மறைப்பான்!
சுவாசம் நின்றால்,
உயிர் பிரியும்
என்று அறிந்தே
தூங்கும் போதும்
இயற்கை இயல்பாய்
சுவாசிக்கும் செயல் நடக்குதே!
சூரியன்
ஒளி இல்லாமல் போனால்,
உயிர்கள் வாழமுடியாது
என்று அறிந்தே
சூரியன்
தன்னிலை இருந்து
தன்னை எரித்து
ஒளி வெப்பத்தையே தருதே!
இயற்கை இயல்பான
சிவசித்தனும்
தன் உண்மை உணர்ந்து
தன்னிலையில்
இருந்து மாறாமல்
தன்செயல் செய்கிறான்!
நன்றி சிவகுருசிவசித்தனே!