தனியே தான்தோன்றிய வாசியோடும் இயற்கையோடும்

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

உருமாறிய கோலம்
உண்மை உயிர் உரையும் காலம்
பலருக்கு காலால் காலனை அழித்தவன்
இன்று காலனை எதிர்நோக்குகிறானோ?

உண்மை அன்பே அறிவே உங்களுக்காகவே
வந்தவன் இன்று உங்களாளே….

மனஎண்ணமதை எரியுங்கள்
அகத்தே சிவசித்தனின் நினைவை எண்ணுங்கள்
உங்களுக்காக அவன் அன்றும் இன்றும் படும் துயர் உணருங்கள்!
அன்பினை எங்களுக்கு உணர்த்தியவன் அன்றும் இன்றும் அன்பிற்காக ஏங்குகிறான்.

தூயவன் விழியில்
துயராய் கண்ணீர்
ஆதவனான முகத்தே
மயான அமைதியாய் இருட்டே
தனியே தான்தோன்றிய
வாசியோடும் இயற்கையோடும்
அகஅரசிகள் இல்லா
சிவசித்த தனியானவனே!

நன்றி சிவசித்தனே!!!

Previous Post
Next Post

Leave a Reply