வாழ்க்கையை புதிதாக வாழ ஆரம்பித்திருக்கும்

சிவகுரு சிவசித்தனே சரணம்!

உள்ளத்தை தெளிவடையச் செய்து,
உணர்வுகளைத் தூய்மை செய்து,
எண்ணத்தை ஏற்றம் பெற வைத்து,
ஏகாந்தமாய் இருக்க வைத்து,
அன்பை உள்ளுக்குள் உணர்த்தி,
ஆருயிர் தலைவனை நேசிக்கவைத்து,

…..அடங்காமல்……
…..ஆணவத்துடன்….
…..அடிப்படைப் பண்பு இல்லாமல்….
…..கீழ்ப்படிதல் இல்லாமல்…..
…..தவறான எண்ணம் கொண்டு…
…..சிவசித்தனை நினைத்த என்னை…

…..மிகுந்த கருணையுடன்,
தவறைச் சுட்டிக் காட்டி,
நல்எண்ணமாக மாற்றி அமைத்து,
கணவருடன் ,குழந்தைகளுடன்…
ஒற்றுமையாய் வாழ வாழ்வியல்
அறிவைப் புரிய வைத்து,

அடக்கமாய் வாழ்வதன் உன்னதத்தை,
அன்பின் மகத்துவத்தை,
விட்டுக் கொடுத்தலின் உயர்வை,
அனுசரித்தலின் பண்பை,

எனக்குள் புரியவைத்து உணர்த்தி,
வாழ்க்கையை புதிதாக வாழ
ஆரம்பித்திருக்கும் என்னை
தனது தூய அன்பால்
தூய்மையாக்கிக் கொண்டிருக்கும்
சிவகுரு சிவசித்த வாசிதேகக்
கண்ணனின் திருவடிகளில்
சமர்ப்பிக்கின்றேன்!

நன்றி சிவகுரு! நன்றி சிவகுரு!

Previous Post
Next Post

Leave a Reply