சிவசித்தன் திருநாமம் அணுவிற்கு அணு மொழிந்தே ஆற்றல் பெருகுதே!

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

பாமரன் அகத்தில் உண்மை உணர்த்தும் சிவசித்தனே,

அமுதே தமிழே!
நின் உண்மை சுவைதனை உணர்ந்தேன்!
மெய்யான சிவசித்தனின் திருநாம மந்திரம் உரைக்கையிலே!
சிவகுரு சிவசித்தன் திருநாமம் உரைக்கையிலே
முத்தமிழே முழுநிலவும் என்முன்னே
செங்கதிரின் செஞ்சுடரை தெளிக்குதே!
தேனாய் அகத்தில் திருமுகம் சிவசித்தமுகம் தெரியுதே!

சிவகுரு சிவசித்தன் நாமம் உரைக்கையிலே…….
பனியின் குளிரையும் கதிரின் வெப்பத்தையும்
ஒரே நிலையில் எம் தேகமதில் உணர்த்தி
எம் மெய்யோடு மெய்யாய் வந்து
மெய்யை உணர்த்திய சிவசித்த வில்வச்சந்திர ஆத்மஅகனே…….
மெய்யாய் நின் தமிழை
மெய் மொழிந்தேன் நீர் உணர்த்திய மெய்யால்….

சிவகுரு சிவசித்தன் திருநாமமதை உரைக்கையிலே!
உயிரின் உரையில் இருந்த வெப்பம்
வெண்மையாய் எம்முள் பரவி தேகத்தில்
ஆங்காங்கே நெருப்பு பொறியாய்
சுட்டெரிக்க! ஆற்றலின் ஆட்டம்
சுளுமுனையில் சீர் தூக்கி சர்ப்பத்தை
சாய்ந்தாடச் செய்யுதே! சரீரம்
தன் மெய்யுணர்ந்த அகமனனை அகத்தே கண்டவுடன்……

அழியா தமிழுக்கு கழிவை அழிக்கும் ஆற்றலை
நின் நாமத்தால் அருளிய சிவசித்த சொற்பிரகாசனே!

சிவகுரு சிவசித்தன் திருநாமமதை உரைக்கையிலே!
கழிவுநீங்கிய தேகமதிலே!
வாசி நெருப்பின் செயலினாலே!
சிவசித்தனின் செயலதுவாய்
சிற்றறிவு சிதைந்தோடி
பேரறிவு வெளிப்பட்டு பேரின்பம் காணுதே!
அகத்தே பேரொளியான் மொழியாய்

சிவசித்தன் திருநாமம் அணுவிற்கு அணு
மொழிந்தே ஆற்றல் பெருகுதே!
சிரசில் உள்ளே மூச்சு இரண்டரக் கலக்குதே!
உள்ளிருக்கும் அகமன் உயிரின் மறையாய்
இருக்கும் அற்புதம் அளப்பரிய ஆனந்தமாய்
அகத்துள்ளே நான் உணர்ந்தேன்!

உள்ளிருந்து உணர்த்தி உன்னதம் அகத்தே
காண்பித்த சிவகுருவிற்கு நன்றி!!!

Previous Post
Next Post

One thought on “சிவசித்தன் திருநாமம் அணுவிற்கு அணு மொழிந்தே ஆற்றல் பெருகுதே!

Leave a Reply