முழுவதுமாய் நம்பி வந்தால், மூழ்காமல் கரை ஏற்றுபவனாம்!

வணக்கம் சிவகுருவே!
சிவகுரு சிவசித்தன் திருவடி சரணம்
…………………………………………………………….
மூலவனாம்,
மூலப்பொருள் ஆனவனாம்;

முதலும், முடிவும் இல்லாதவனாம்;
முழுமுதற் பொருள் ஆனவனாம்;

மூவுலகை இயக்கி ஆள்பவனாம்;
மூன்றும் ஒன்றே என ஆனவனாம்;

முக்கண்ணனாம்;
முப்பொருள் உணர்த்தியவனாம்;

முக்காலமாய் இருப்பவனாம்;
முடியா முதலானவனாம்;

முறையாக வாசியை உட்செலுத்தினால்
தேகம், அகம் உணர்த்துபவனாம்;

முயற்சியுடையோரைக் காப்பவனாம்;
முப்பால் கடந்தவனாம்;

முழுவதுமாய் நம்பி வந்தால்,
மூழ்காமல் கரை ஏற்றுபவனாம்!

முழுமை அறிவைக் கொடுப்பவனாம்;
முழுமையாய் நமைஆட்கொள்பவனாம்;

மூவுலகும் தொழ வேண்டியவனாம்;
மூன்றும் ஒன்றாகத் தெரிபவனாம்;

ஒளிப்பிழம்பான பேரொளியில்,
சிறுபொறியாய் நமை இயக்குபவனாம்;

அவனே சிவசித்த ஒளிப்பேராற்றலாம்;
அவனே அன்புகாட்டும் வாசிதேகக்
கண்ணனாம்;

அவனே சிவகுரு சிவசித்தனாம்;
அவனே ஆதிமூல அருட்ஜோதி
வடிவானவனாம்;

சிவகுருவே சமர்ப்பணம்!
சிவகுரு சிவசித்த திருவடிகளேசரணம்!

நன்றி சிவகுருவே!

Previous Post
Next Post

Leave a Reply