கேளிக்கை, படாடோபம் எங்களுக்கில்லையே, எளிமையான சிவசித்தன் உள்ளிருக்கையிலே

சிவகுரு சிவசித்தன் திருவருளால்;
………………………………………………………………..

நாளும், கிழமையும் நமக்கில்லையே,
நாதன் உள் இருக்கையிலே;

நவகோள்கள் எதுவும்
பார்ப்பதில்லையே,
நவசிவசித்தகன்
உள் இருக்கையிலே;

சாதகம்,கட்டம் தேவையில்லையே,
சற்பத்தலைவன் உள்ளிருக்கையிலே;

வாஸ்து, பரிகாரம் செய்வதில்லையே,
வாசித் தலைவன்உள்ளிருக்கையிலே;

கோவில்,குளம்,மலை சுற்றத்
தேவையில்லையே,
அக்னி தற்பரண் உள்ளிருக்கையிலே;

செய்வினை எதுவும் எமக்கில்லையே,
எங்கள் சிவகுரு நிறைந்திருக்கையிலே;

பயம்,கவலை எதுவும் எமக்கில்லையே,
பங்கயக் கண்ணன் வாசிதேகக்
கண்ணன் இருக்கையிலே;

கேளிக்கை, படாடோபம்
எங்களுக்கில்லையே,
எளிமையான சிவசித்தன்
உள்ளிருக்கையிலே;

யாரிடமும் எதிர்பார்த்தல்
எங்களுக்கில்லையே,
எல்லாம் சிவசித்தன் கொடுப்பதாலே;

அன்பு, இன்பம், ஆனந்தம், ஆழ்துயில்
அனைத்தும் எங்களுக்குண்டே,
தூய அன்பாய் அவனை
பக்தி செய்வதினாலே;

வேறு என்ன வேண்டும் இப்பிறவியிலே
நிறைவாய் நிறைந்திருக்கும்
சிவசித்தன் உள்ளிருக்கையிலே!!!!!

சிவகுருவின் திருவடிகளில் சமர்ப்பணம்!
நன்றி சிவகுருவே!

பூஜை, புனஸ்காரம் செய்வதில்லையே,
முல்லை நீரானவன்
உள்ளிருக்கையிலே;

சாத்திரம், சம்பிரதாயம் எதுவும்
கடைபிடிப்பதில்லையே,
சிவகுரு சிவசித்தன்
உள்ளிருக்கையிலே;

Previous Post
Next Post

Leave a Reply