அனைத்து இடங்களிலும் அன்பாய், இன்பமாய், நல் உணர்வுகளாய் பரவி நிறைந்து

வணக்கம் சிவகுருவே!
காக்கும் சிவசித்தனே அன்பானவன்!

பௌர்ணமி நிலவில்,
தென்றலின் வருடலில்,
ஆதித் தமிழனை வணங்கி,
தொடங்கினேன் பயிற்சிகளை!

முழுநிலவின் குளுமையில்,
வாசியானது உட்சென்று,
இயற்கையை துணைக்கழைத்து,
வாசிநாதனை தரிசிக்க,
அனுமதி வேண்டி நின்று,
உள்ளே துடிப்புடன்
காத்து நின்ற போது,

அனைத்து இடங்களிலும்,
அன்பாய், இன்பமாய்,
நல் உணர்வுகளாய்,
வாசிதேகக் கண்ணன்
பரவி நிறைந்து,

ஓர் உருவாய்,
ஒருமை எண்ணமாய்,
பேராற்றலின் ஒரு துளியாய்,
பேரன்பின் ஒரு துளியாய்,
பேரறிவின் ஒரு துளியாய்,
பேரழகின் ஒரு துளியாய்,
பேரருளின் ஒரு துளியாய்,
ஒளிவெள்ளத்தின் ஒரு பொரியாய்,

வற்றாத இருப்பாக,
வாரிவழங்கும் வள்ளளாக,
வாசி நாதனாக,
எம் பெருமானாக,
இரு பெரும் சக்திகளோடு,
(இறையான்மாக்களோடு)
காட்சி தனை அருளும்,
வாசிதேகக் கண்ணனாக
மலர்ந்தருளும்
சிவசித்தனே!
நின் திருவடி சரணம்! சரணம்!
நன்றி சிவகுருவே!

Previous Post
Next Post

Leave a Reply