கண்ணொளியால் கருணை காட்டுகின்ற சிவசித்தன்… ஒன்றுமில்லாதவனாய்

சிவகுரு சிவசித்தன் திருவடி சரணம்!

ஒன்றுமில்லாத ஆதிமூலமே!

கண்ணொளியால் கருணை காட்டுகின்ற சிவசித்தன்…….
ஒன்றுமில்லாதவனாய்;

தேகத்தில் தனதருள், தனதன்பை
தந்திடும் சிவசித்தன்……..
ஒன்றுமில்லாதவனாய்;

அகத்தில் அன்பை அம்சமாய்
அருளிடும் சிவசித்தன்……….
ஒன்றுமில்லாதவனாய்;

எண்ணத்தில் நல்எண்ணமாய்
நலமருளும் சிவசித்தன்……..
ஒன்றுமில்லாதவனாய்;

செந்நீர் முழுவதும் நிறைந்திருக்கும்
சிந்தாமணி சிவசித்தன்……..
ஒன்றுமில்லாதவனாய்;

நரம்புகள் அனைத்திலும்
உணர்வாய் சிவசித்தன்………..
ஒன்றுமில்லாதவனாய்;

நாடியின் நலமிகு தன்மைகள்
அனைத்தும் சிவசித்தன்………..
ஒன்றுமில்லாதவனாய்;

வாசியாய், இயற்கையாய்
அனைத்திலும் சிவசித்தன்……..
ஒன்றுமில்லாதவனாய்;

அணுவும், அதன் மையமும் இயக்குவதும், இயங்குவதும்சிவசித்தன்……..
ஒன்றுமில்லாதவனாய்;

ஒன்றுமே இல்லாத வெற்றிடமே!
ஒன்றை உணர்த்தும் சிவசித்தன்…..
ஒன்றுமில்லாதவனாய்;

ஒன்றுமில்லாத உன்னிடமிருந்து
படைக்கப்பட்ட நாங்களும்
ஒன்றுமில்லாதவர்களாய்
ஆக வேண்டும்.

ஒன்றுக்குள் ஒன்றாய்;
ஓர் உருவமாய்;
ஒன்றிப் பிணைந்து;
ஒன்றுமில்லாதவர்களாகி;
ஒன்றுவோம்…. சிவசித்தனிடம்;

உன்னை உணர்ந்தவர்கள்
பின் தொடரட்டும்;
உன்னை உணராதவர்கள்
பின் வாங்கட்டும்;
நமக்கென்ன வருத்தம்?

நாம்தான் ஒன்றுமில்லாதவர்கள்
ஆயிற்றே!!!!!

நன்றி சிவகுருவே!

Previous Post

Leave a Reply