கழிவகற்றும் காலே சிவசித்தன்
அங்கப்பிணி அறுந்து அலறியடித்தோட
உளப்பேயது ஓலமிட்டு புறமோட
ஓர்அறிவை உட்புகுத்தியே இச்செயலைச்செய்த
சிவசித்தனை எக்காலமும் மறவேன்!
ஓர்அறிவு எவ்வறிவு! சிவசித்தன்
என்னுள் புகுத்திய வாசியே அவ்வறிவு!
எவ்வுயிரும் ஒன்றன்றோ! பல்லுயிரும் பிணியின்றி
காத்தருளும் சிவசித்தன் கலைமுன்னே!
வேதம் முற்றும் கற்றரிந்தாலும்
வாதம் செய்யாதே! கால்புகுத்தி இடரகற்றும்
இறைசித்தராம் சிவகுரு சிவசித்தனிடம்
ஆரூடமும் கண்டு வியக்கும் விந்தை
திகழுதப்பா! ஆலவாய் பதியினிலே!
சிந்தாமணி தலமதினிலே! சைவத்
துய்ய மாமணியாய் குருபீடம் அமர்ந்திருக்கும்
வாசிதேககுரு சிவகுரு சிவசித்தனாலே!
கால் அறிந்து சிவசித்த வாசிதேகக் கலையே
செய்யும் வாசிதேகம் பயிலும் மானிடரிடம்
நவகோள் என்செய்யும் ஏது தீங்கு
விளைவிக்கும் இல்லையென்பதே மெய்யப்பா!
பேரண்டமதில் நவகோளும் இயங்குவது
வாசியின் தன்மைக்கேற்ப! அதையே
பிண்டமதில் வாசியின் மூலம் பஞ்ச
புலன்களையும் சரிசெய்கிறார் சிவசித்தன்!
மானிடனே இறையை உணர வேண்டும் என்ற
ஆவலோடு உடலெங்கும் கழிவை வைத்துக்
கொண்டு! நாற்றமுற்ற உடலோடும்
உளமோடும், காடு, மலை, குகை, கடல் என்று
எங்கு தேடி அலைந்தாலும் நீங்கள்
தேடி சென்ற மெய்ப்பொருளை உண்மையாய்
உணர முடியாது! அவ்வுணர்வை உட்கார்ந்த
இடத்திலேயே பெற கழிவுகளை நவவாசல்
வழியே பூரணமாய் வெளியேற்றும்
சிவகுரு சிவசித்தன் வாசி பயின்றால்
அனைத்தும் வசமே!
உணவு உண்ணும் பழக்கம்
முதல் நீர் அருந்தும் நேரம் வரை
கால அளவு வகுத்த கால் உணர்த்தி
இறையுணர்த்தும் சிவசித்தனே! உம்
விதிமுறைகளுக்குட்பட்டு வாசிகலை செய்பவரை
நவகோள் வகுத்த விதி என்செய்யும்!
சிவசித்தனே முழு கதி என்று என்னும்
மானிடர்க்கு நற்கதியே கிட்டுமே!
சிவகுருவின் பக்தன்,
ம.சண்முக பாண்டியன்,
வாசியோக வில்வம் எண்: 10 11 001