மூன்றணுவால் தேகஅக முக்தி

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

சில காலம் வாழும் தேகத்தே
பல காலம் வாழும் உண்மை
ஆன்மா உள்ளதே!

அறிந்துணர் அகத்தை
அதிலே ஆத்மனனை உணர்!

உணர்ந்திட உண்மையாய் இரு
உண்மையாய் இருக்க உண்மை
சிவசித்தனின் வாசியோகத்தை இழு!

வலியில்லா அகமே
ஆத்மனன் அமைதி கொள்ளும் அகமே!

மெய்தவமது வாசியே!
மெலிவதுதான் மெய்வாசியே!
மெய்யுணர்வதுதான் சிவசித்தன் வாசியே!

ஒர் அணு வாசியால் உயிருணர்ந்தோம்.

இருஅணு வாசியால் அகத்தே
ஆத்மனனை அனுபவித்து உணர்ந்தோம்.

மூன்றணுவால் தேகஅக முக்தி தந்து
மூலத்தின் முதல் அணுவாய்
எம்முள் இருந்து வழிநடத்துகிறான்
சிவசித்தனே!

அணு படைத்த அவனாலே
எம் அணு காக்க முடியும்.

அனைத்தும் அவனே!
ஆதியும் அவனே!

சிவசித்தனே உண்மை வாசியே மெய்!

சிவசித்தனே துணை!

நன்றி சிவசித்தனே!!!

அகிலத்தின் காவலன் என்றே – என் அகத்தின் காதலன் என்றே!

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

அகமே தான் நீ இருக்க
அனைத்துமாய் நிறைந்திருக்க
அறிவது பேரறிவாய் உணர்ந்திருக்க
அங்கம் முழுவதும் வாசியாய் வசித்திருக்க
அறிந்தேன் ஆதிமுதலானவன்
அன்பின் பொருளான சிவசித்தனே
அகிலத்தின் காவலன் என்றே – என்
அகத்தின் காதலன் என்றே!

சிவசித்தனே துணை!

நன்றி சிவசித்தனே!!!

இறைவாசம் புரியும் அகஆலயமே

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

தேககூடே மெய்கூடு!
மெய்கூடே ஆன்மக்கூடு!
ஆன்மக்கூடே இறைகூடு!

இறைவாசம் புரியும் அகஆலயமே
மெய்எண்ணம் உருவாகும் நிலையே!
மெய்எண்ணமே சிவசித்தஎண்ணமே!
அகஆலயத்தின் மெய்ஞானஒளியே
‎சிவசித்தனே!!!

சிவசித்த வாசி தரும் மெய்இறைவாசமே!
சிவசித்த திருநாமம் தரும் அகத்தின் மெய்மோச்சமே!
சிவசித்த மும்முறை அருளும் மெய்ஒளியாய் அகஞானதீபமே!

சிவசித்தனே சீவமுக்தன்!
சிவசித்தனே துணை!

நன்றி சிவசித்தனே!!!

அறிவுணர்த்தும் விழியும் ‎அன்புணர்த்தும் விழியும்

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்,

புலனது நசிந்தே
புறத்தோர் சொல்கேட்டே
புண்ணுடல் கொண்டேன்!
புகலிடம் தேடியே அலைந்தேன்!

பூங்கரம் நீட்டியே
புத்துயிர் தந்தானே ‎வாசியாலே!
புதுஅணு பிறந்ததே ‘
புவியில் வாழத் தகுதி கொண்டேன்
புல்லாங்குழல் மெல்லிய ராகமாய்
மெய் ‎சிவசித்த திருநாமம் கொடுத்தானே!
புதுராகமாய் தோடியாகி புலப்பட்டதே என் ‎அகதேகசற்ப்பம்!

நாளும் புது அணுக்கள் நாதனே
நின் வாசியின் பெருங்கருணையால்!
நாளும் செல்லச்செல்ல
என் ஆவிலும் அன்புணர்ந்தேன்!
ஆதியும் ‎சிவசித்தனே நீயே என்றுணர்ந்தேன்!

வாசியது நாளும் உள் செல்லச்செல்ல
உன் வாசம் கண்டு வசமானது
உன்னால் படைக்கப்பட்ட ‎அகமே!
நாடி நரம்பெல்லாம் என்
நாதனின் நாமமே!
நாளும் பொழுதும் அவன் எண்ணமே!
நாணம் கொள்ளுதே அவன்விழி காண்கையிலே!
‎அறிவுணர்த்தும் விழியும் ‎அன்புணர்த்தும் விழியும்
அழகாய் தான் கொண்டு
மெய்யுணர்த்தும் ‎வாசிவிழியை நெற்றியில்தான் கொண்டானே!

மெய்யுணர்த்தும் மெய்செயல் தன்
மெய் வாசியால் செய்திடவே!
மெய் ஆன்மாக்களும் அவன் வசமாகுதே!
இப்புவியதுவும் புத்துயிர் பெறுதே சிவசித்தானாலே!

‎சிவசித்தனே துணை!
நன்றி சிவசித்தனே!

அகஆலயத்தின் கருவறையில் ‎ஆதியாய் அலங்கரித்தாய்!

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

‎சிவசித்தனே துணை!

மெய்தவ ‎சிவசித்த வாசியால்
‎தேகமே விருந்தளித்தாய்!

மெய்மொழிந்த மெய்ஒலி ‎சிவசித்த திருநாமத்தால்
‎தேகசற்ப்பமதை மீட்டெடுத்தாய்!

மெய்கண்ட திருகாட்சியால் மெய்யொளியாய்
‎தேகஅகத்தே பூரணமாய் நிறைந்திட்டாய்!

மெய்வாசம் தானறிய ‎தனதாற்றலால்
‎தனதறிவை பேரறிவாக்கி உள் நிறைந்திட்டாய்!

மெய்அன்பை ‎தனதன்பால் உணர்த்தி
அகஆலயத்தின் கருவறையில் ‎ஆதியாய் அலங்கரித்தாய்!

மெய்அகம் தான் கொண்ட ‎மெய்நாதனே
என் அணுவெல்லாம் உன்னிடம் தஞ்சமே!

தன்னொளி காட்டியே கண்ணொளியால்
மெய்யொளி உணர்த்தி என்றும்
எம் மெய்யில் உறைந்த ‎சிவசித்தனே
நின் மெய்பாதம் சரணடைகிறேன்.

‎சிவசித்தனே உண்மை!

நன்றி சிவசித்தனே!!!

படைத்தான் நல்அணுவதனை திருநாமத்தின் தூயஎண்ணத்தால்

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

எரியும் அனலாய் வாசி தந்தான்
சேரும் கழிவை தினமும்
முறையாய் மும்முறையால் ‎அழித்தான்!

‎படைத்தான் நல்அணுவதனை
திருநாமத்தின் தூயஎண்ணத்தால்
சிவசித்த எண்ணமாய் எண்ணிட
உள்ளிருந்தே ‎காத்தானே!

அழித்து படைத்து காத்து
நல்எண்ணமாய் உண்மையாய்
வாசிவழி தூய வாழ்வளித்த
சிவசித்தனே! படைத்தவனே!

சிவசித்தனே துணை!

நன்றி சிவசித்தனே!!!

அதீத உணவே மலம்! கழிவின்றி இருப்பதே நலம்!

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

வயிறே நிலம்!
அதீத உணவே மலம்!
கழிவின்றி இருப்பதே நலம்!
தேகமே நலம்!
அகமே நலம்!
ஆத்மமே நலம்!
அணுவே நலம்!

சிவசித்த வாசியே களம்!
சிவசித்த சொல்லே வளம்!
சிவசித்த பேரறிவே சுகம்!
சிவசித்த திருநாமமே பலம்!
தேகசற்ப்பமே குதூகலம்!

என்றும் எம்மை காத்தருளும் சிவசித்தனே பக்கபலம்!

சிவசித்தனே துணை!

நன்றி சிவசித்தனே!!!

அகமே நிறைந்து ஒளிந்தானே

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

ஆன்மாக்களின் அகக்குமுறல்
அக்கினியாய் ஆத்மனன்
ஆடிக்காற்றிலும் வாசியேற்ற
அணையா மெய்ஒளியாய்
அகமே நிறைந்து ஒளிந்தானே
‎சிவசித்தனே!!!

சிவசித்தனின் வாசியால் உணர்வை உணர்

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

சிவசித்தனே துணை!

உணவின் மேல் வாசம் கொண்டவன் சிவசித்தனை உணரமுடியாது.

மெய்யாய் சிவசித்தனின் வாசியின் மீது வாசம் கொண்டவன் சிவசித்தனின் மெய் வாசமுணர்ந்து அவனே சர்வம் என்று சரணடைவானே!

உணவை குறைத்து
சிவசித்தனின் வாசியால் உணர்வை உணர்
உன் வாசமறிந்து வாசிதந்த சிவசித்தனே மூலவனே!

நன்றி சிவசித்தனே!!!

அனுதினமும் தரிசனம் தருவானே

சிவகுரு சிவசித்தனின் ஆசியால்

அணுவில் வீற்றவன்
அனுதினமும் தரிசனம் தருவானே
ஆதியான சிவசித்தனே!

அற்புதம் புரிகின்றான்
ஆன்மாவின் ஆனந்தத்தை
ஆழமாய் ரசிக்கின்றான்!

நன்றி சிவசித்தனே!!!