திருவருள் பாமாலை

1. உண்டழித்த உடலதனை கண்டு வியக்க

வாசிவழி தந்தாரே எம் சிவகுரு.

 

#Sivasithan (20)2. எண்ணமெனும் கிடங்கினிலே வினாக்கள் ஆயிரம்

தோன்றுதே எம்சிவகுருவை கண்டாலே!

 

3. உணர்வற்று உயிரற்று ஊனுடலுடன் உனைஅடைந்தேனே

உயிர்மொழி தனை அறியவைத்தாரே எம் சிவகுரு!

 

4. கண்டுகளித்த உணவதனை கழிவென்று

உணர்த்தினாரே! எம் சிவகுரு.

 

5. ஒங்கி கிடந்த உடல்தனை உயிர்தந்து

ஒடுக்கி ஒளிதந்தாரே எம் சிவகுரு.

 

சிவகுருவின் பக்தன்,

மா.மணிகண்டராஜன்

வாசியோக வில்வம் எண்: 13 11 001

அலைபேசி எண்: +91 89 40 02685

சிவசித்தரின் பாமாலை|003|

sivssiththan 2 (37)

 

தன்னிச்சையாக தனியனாக தனையறிந்தவரே

           தானாககற்ற தரணியாளும் கலையை

     தமிழ்கொண்டு தாடாளனாக தருவிப்பவரே

           தாபம் தட்பம்அறியாது அதன்

     தாத்பரியம் அறியாது தாதன் செய்த

           தவறை தவிர்த்து தாண்டவம் விடுத்து

     தாட்சணியம் தாரும் தயாபரனே !!  

சிவகுரு சேவையில்,

மா.மணிகண்டராஜன்

வாசியோக வில்வம் எண் : 1311001

+918940002685

சிவசித்தரின் பாமாலை|002|

சிவசித்தரின் பாமாலை – 01

 

சிவகுரு சிவசித்தரே !!!

    

Copy of Vilvam  (10)எங்களின் எண்ணமும் நீரே !

     எங்களின் செயலும் நீரே !

 

நன்மையும் நீரே !

     நெருப்பும்  நீரே !

 

எங்களின் பயனும் நீரே !

     எங்களின் வினையும் நீரே !

 

ஆதியுமான எங்கள் சிவகுருவே

     நீரே அந்தமும் என அறிவித்தீரே !

 

அனைத்து செயல்களுக்கும் ஆரம்பமும் நீரே !

     அதன் முடிவும் நீரே !

 

எங்களின் நடைமுறை உண்மையும் நீரே !

     அதனை பொய்மையாக்குவதும் நீரே !

 

சக்தியும் நீரே ! சிவனும் நீரே !

 

மொத்தத்தில்

     வாசியோக பக்தனின் முதலும் நீரே !!

                                  முடிவும் நீரே !!

 

சிவசித்தரின் பாமாலை – 02

 

உண்டு அழித்த உடலுடன்
உனை அடைந்தேனே, உன் வாசியால்
ஊனை உருக்கி உயிரற்ற என்
உடலதனை உயிர் கொடுத்து
எனையும் உணர வைத்தாயே வாசியால் !!

 

 

சிவகுரு சேவையில்,

மா.மணிகண்டராஜன்

வாசியோக வில்வம் எண் :  1311001

+918940002685

சிவசித்தரின் பாமாலை|001|

sivssiththan 2  (38)

சிவசித்தரின் பாமாலை – 01

எண்ணமது ஈடேற எத்தனையோ வழிமுறை

           கண்டு இறைவனிடம் வரம் வேண்டி

 கைமாறு பேசி, பலன் பாதி அடைந்து

            இருந்தேனே பரதேசியாய்…..

கைமாறு ஏதும் இல்லாமல், கள்ளம் கபடமின்றி

            உண்மையாய் மந்திரம் கூறி, கவனமுடன்

 பயின்றேனே எம் சிவசித்தரின் வாசியை

            ஈடேறியதே என் எண்ணமது !!!!!

***************************************************

சிவசித்தரின் பாமாலை – 02

நடைபிணமாகி நலனது அறியாமல்

      நா சுவைதனில் மயங்கி கிடந்தோமே !!!

நல்லவைதனை உண்டு நாளும் பயிற்சி செய்து

      நரகலதனை விலக்கி நயனமது திறந்து

 நரலதனில் உயிர் பெற்று நந்தவனமாகியதே !!!  

      எனக்கு நற்றுனணயானது சிவகுருவின் வாசிகற்றனே !!!

****************************************************************

சிவகுரு சேவையில்,

மா.மணிகண்டராஜன்

வாசியோக வில்வம் எண் :

+918940002685

சிவகுரு சிவசித்தரின் பாடல்கள் – மா.மணிகண்டராஜன்

வாசியோகப் பாடல் : 1

குருவே சரணம்!!

 

     sivssiththan 2  (9)      எல்லா பொருளிலும் காட்சி அளிப்பவரே !

                எல்லையில்லா எண்ணங்களை படைப்பவரே !

           எங்களுக்குள் ஓளியை ஏற்றிய ஈடில்லாதவரே !

                எங்களின் எண்ணத்திலும் செயலிலும் ஒன்றானவரே !

           கழிவுகளை வெளியேற்றி எங்களுள் வெளிச்சத்தை காட்டியவரே !

                காந்தமான (வாசியை) சக்தியை தன்னுள் அடக்கியவரே !

           வாசியின் தலைவனே ! எங்கள்

                                      சிவகுருநாதனே !

                                   

                    குருவே சரணம் !

                        குருவடி சரணம் !

               

           மாந்தர்க்கு மனம் உண்டு,

                                செயல் இல்லை !

           மாந்தருள் கழிவுண்டு,

                                வெளியேற வழி இல்லை !

           அளவில்லா சக்தியான வாசியுண்டு,

                                ஆனால் மாந்தரின் வசம் இல்லை !

           சிவகுருவான ஒளியுண்டு,

                                மாந்தர்க்கு பார்வை இல்லை !

           அளவாய் உண்டு, உண்மை கொண்டால்

                பரம்பொருளான “சிவகுரு சிவசித்தரின்” ஆசியுண்டு !!                          

 

                                       சிவகுருவின் ஆசியுடன்,

                                       மா.மணிகண்டராஜன்

                                        வில்வம் எண்: 13 11 001