சிவசித்தரின் பாமாலை|004|

சிவகுருவே சரணம்!

முவ்வரி மந்திரந் தனை உச்சரிக்கும்பொழுது
தன்னை யறியாது தன்னுடல் ஆடுதய்யா!
குண்டலினியை உணர முடியுதய்யா!
சுழுமுனை எனும் இயக்க ஆற்றலை
நெற்றிப் பொட்டில் உணர முடியுதய்யா!
கை விரல்கள் நெற்றியை விட்டு அகல மறுக்குதய்யா!
உடல் எங்கும் ஓர் காந்த சக்தி பரவுதய்யா!
மும்மலமும் (ஆணவம், கன்மம், மாயை) அகலுதய்யா!
ஐவகைக் கழிவும் அகலுதய்யா!
உடலானது நாகப் பாம்பினைப் போல
முன், பின், இட, வலமாக
படமெடுத்து ஆடுதய்யா!
மனமோ அளவில்லாப் பேரின்பத்தை அடையுதய்யா!
இவை யாவும் நிகழுதய்யா!
எம் சிவகுரு சிவசித்தரிடம் வாசி பயிலலே……
எம் ஸ்ரீ வில்வம் வாசியோக மையமதிலே……..

************************************************

சிவசித்தரின் பாமாலை|003|

சிவகுருவே சரணம்!

IMG_20150409_062010வாசி வாசி வாசியப்பா!
ஈரெழுத்தாம் வாசியை
நாசி வழியில் ஏற்றி
முழுதாய் சுவாசி வாசியை
உனக்கு என்றும் துணை இருக்கும் சிவகுருவின் ஆசி!

********************************************

அறிவாய், ஆற்றலாய்,
இன்பமாய், ஈகையாய்,
உண்மையாய், ஊழ்வினையாய்,
என்றுமாய், ஏகாந்தமாய்,
ஐஸ்வர்யமாய், ஒளியாய்,
ஓங்காரமாய், ஒளடதமாய்,
அ@துமாகி, எ@துமாகி,
எங்களுள் என்றென்றும் நிறைந்திருக்கும்
உண்மையின் சொரூபனாவனருக்கு
எங்கள் சமர்ப்பணம்!

********************************************

சிவசித்தரின் பாமாலை|002|

சிவகுருவே சரணம்!

செந்தமிழின் வித்தகரே சரணம்!
கலியுக வரதனே சரணம்!
சிந்தாமணியின் சுடரே சரணம்!
காலனை வென்றவரே சரணம்!
ஈசனின் மறு பிறப்பே சரணம்!
பகலவனின் ஒளியானவரே சரணம்!
சிவஞான முக்தியரே சரணம்!
சூட்சுமத்தின் வித்தகரே சரணம்!
சர்வ சக்திகளின் அடக்கமானவரே சரணம்!
சிவகுருவே சரணம்!
சிவசித்தரே சரணம்! சரணம்! சரணம்!
*********************************

பெயர் : சு. சண்முகவள்ளி.
ஊர் : சின்னமனூர்.
வாசியோக வில்வம் எண் : 1309304,

சிவசித்தரின் பாமாலை|001|

திரு.வாசியோக சிவசித்தர் அவர்களின் பொன்மொழி வாசகங்கள் – ஷண்முகவள்ளிsivssiththan 2  (8)

வாசியோகப் பாடல்கள் : 1 

 

  1.  “உன்னை அறிய வைப்பேன்

    உன்னை உணர உனக்கு காலம் பத்தாது”

     2. “வாசித்தான் உடலில் உள்ள உயிரை உணர வைக்கும் 

    வாசியை முதலில் அறி

    எண்ணை அறிய காலம் உண்டு 

     3.“எம் இறப்பிற்க்குள் வாசியை அறி

    எம் இறப்பில், எம் காலத்தில், உம் காலமறிந்து படைப்பேன்”

     4.  “உயிரை அறிந்து அணுவால் உயிர் பெற்றவன்

    உயிர் பெற்று உணர்ந்தவன், மற்றவர்கள்

   உயிர் இல்லாதவன்.

    உயிரை அழிக்கும் அணு அறிந்தவன்”

   5.  “உயிரை அளிக்கும் அணு அறிந்தவன்

    எண்ணத்தில் எண்ணினால் உயிர் அணுவை அழிப்பான்”

  6.  “உயிரை அறிந்து, உணர்ந்து, உணர்வால் வாழ்பவன்

    உடல் இருக்க உயிர் இல்லை அவனுக்கு

    உயிர் உணர்வானவன் சிவசித்தன்”

  7.  “உயிர் அணுவை அழித்து சவமாவான் சிவசித்தன்

    எல்லா உடலையும் தன உணர்வால் அறிவேன்

    ஆனால், என உயிரை, உணர்வை எவனும்

   அறிய மாட்டான்”

  8.  “யாம் இறந்தாலும் எம் வாசியோகப் பயிற்சி

    என்னை உண்மை ஆக்கும்”

  9.  “திறக்காத வாசல் தன்னை திறக்க அடியில்

    வாசியை ஏற்றிப் பார்”

  1௦. “காணாத சொல்லைக் காட்டும் நாவில்

    உண்மை வாசியை உணர்”

  11. “வாசி என்பது உண்மைநிலை

    வாசியின் வெளிப்பாடு தான் உண்மை நிலை”

  12. “கண்மூடித்தனமாக இருப்பவர்களுக்கு நான் காட்சி                                       

     கொடுப்பது இல்லை”

  13. “மலத்தின் மனம் அறிந்தால் நவீன் சுவை அறியாது

    உடல் அறிந்தால் உண்மை அறிவாய்

    உடல் நலம் என்பது உண்ணும் உணவில் அல்ல

    உன் மலம் [போவது உண்மையல்ல, உன் மலம் நீக்கு

    உன் மலம் வெளியேற்றினால் மும்மலம் வெளியேறும்,

    உடல் கழிவகற்றி உண்மை உணர்ந்து ஒளி காண்பாய்”

    { மும்மலம் என்பது ஆணவம்,கன்மம்,மாயை}

  14. “உடல் கழிவகற்றி உண்மை உணர்ந்து ஒளி காண்பாய்”

  15. “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்”


பெயர் : சு. சண்முகவள்ளி சுந்தர்
ஊர் : சின்னமனூர்.
வாசியோகவில்வம் எண் : 1309304,