சிவகுரு சிவசித்தரின் பாடல்கள்

sivasiththan (june92013) (24)

வாசியோகப் பாடல் : 1

சிவகுருவே சரணம் ! 

நானுரைக்கும் வார்தைதனில் மெய்யுண்டு

என்பதறிய காலம்பல வேண்டுமென,

அக்காலம்வர படிகள்பலகட உன்னுள் ஓடும்

பொய்மையால் மறைக்கப்பட்டு நீ வெளியேற.

வழிநடத்தும் உள்ளெண்ணமதனை அடக்கியாளு

அதன்வலிமை தனையான் தருவேன்

வலிமையாம் அனைத்திலும் பொறுமையே !

என்றுமறை பொருளாய்யுணர்த்தி யருளிய

எம்குருவாய் சிவகுருவிற்கு நன்றியல்ல

எம்முயிர் துடிப்பும் சமர்ப்பிக்கலானேனே !

  

மறைந்த ஒளிக்கும் உயிரூட்டும் காலைநம்மில்

கூட்டும் கலையாம் வாசியோகம் !

 

நல்வாழ்வை வழுக்கும் கலியுக வழக்கை   

களையும் கலையாம் வாசியோகம் !

 

காலால் தோன்றிடுமாற்ற மனைத்தும் நம்மிலூரிடும்

ஊற்றாயமைக்கும் கலையாம் வாசியோகம் !

 

பிணியென்னும் நோய்பற்றி யும்மைதுன்புறுத்தும்

ஆழதனில் தானுண்டுயும்மை சீர்செய்யும்

வழிதனுமாய் நாவடக்கம் பணிவடக்கம்

கால்புகுத்தும் நெறியடக்கம் இவையனைத்தும்

உட்புகும் பொறுமைதனும் உன்னுள்

வெளிக்கொணர்வார் சிவனறம் உள்என

எம்குருவருளாய் ‘சிவசித்தன்’ காலதனால்.

 

*************************

 

சிவகுருவே சரணம் !

 

நாட்கள் பலவுன்னில் வேண்டும்

துயிலிலிருந்து உன்னை எழுப்ப

அத்துனை பொழுதும் குருநாதனுண்டு

உனக்காக உன்னை காக்க

அத்துனை பொழுதிலும் தானுனக்கு

வேண்டும் பொறுமை எனும் முதலுதவியே !

 

வாதம் பித்தம் கபமனைத்தும் நோயல்ல

நாம் மறந்து வெளியேற்றா கழிவதனால்

உயிர்பெற்ற துடிப்படைக்கும் தீயவையாய்

யமையும் சுவாசனவன் அவனைக்

கண்டஞ்சி நாம்பதற்றுற்று மருந்தேற்றி

நாம்நம்மை கொன்றுள்ளோம் என்பதனை

உணர்ப்பிக்கவும், அதனுள்ளிருந்து மீட்டெழவும்

வழிதனில் வாழ்வருளி நமதுடலுயிரை

மெய்யூட்டி புதுப்பித்தருளினரே எம்குருவாம்

சிவன்தொண்டர் “சிவசித்தர்” காலதனால் ! 

   

*************************

 

சிவகுருவே சரணம் !

 

காலத்தின் வழிகளையும் வலிகளையும் செதுக்கி

வாழ்க்கையின் புதுமையும் புலமையையும் புகுத்தி

ஞானத்தின் வார்ப்பையும் பார்ப்பையும் நிரப்பி

மனத்தில் இன்பத்தையும் நிறைவையும் பரப்பி

புத்துயிர் ஊட்டுமாம், ‘சிவகுரு’சிவசித்தர்’

அளிக்கும் வாசியோகம் ! சிவசித்தரின் வாசியோகம் !

 

சிவகுருவே சரணம் !

 

மும்மூன்று கோல்தனையும் செயலற்றதென்றாக்கி

மூவிரண்டு கூட்டானபூதமதனை தன்கைபாவையாக்கி

மூவிலிரண்டு கழிந்ததொருவராம் ‘சிவகுரு’நாதராம் 

முக்காலத்தை யுணர்ந்துகடந்த ‘சிவசித்தரவர்’

முக்கண்ணனையும் தன்னில்வெளிக்காட்டும் சிவக்கண்ணன்

முத்தமிழ் பெற்ற மாமதுரைதனில் சிவலோக சிந்தாமணி.

 

– க. முகேஷ்.

சிவகுரு சிவசித்தரின் பாடல்கள்

 

வாசியோகப் பாடல் : 2

சிவகுருவே சரணம் ! 

sivssiththan 2  (11)காணுலவும் நாள்பல கண்டிராத உன்னதமாய்

கண்டபின் மெய்சிலிர்க்கும் உண்மையாய் உலவும்

கண்கண்ட உண்மைதனை நம்பறியா செயல்தனை

கண்முன் காட்சிக்கனையாய் முன்நிறுத்தி

மெய்ப்பிக்கலானார் ‘சிவசித்தர்’ சிவனருளாலே !

 

*********************

 

சிவகுருவே சரணம் !

 

வானதனில் நானிருக்க தேடாதீர் பூமிதனில்

உனதுலகம் பூமியல்ல உன்னுள்ளம் எனதுணர்த்த

நானாய் வராது உருப்பித்தேன் என்னருளாய்

உனதுலகம் தூய்மையாய் ஐங்கழிவகற்றி சுற்றிவரும்

பூமியாய் உன்புருவில் சுழல்தெரிய – நானடக்கமும்    

உன்னுடலில் வெளிக்கொணர உயிர்ப்பித்தேன்

என் சீடனாம் சிவத்தை சிவசித்தரை !

என்னுமுறையால் மொழிகிறார் சிவபிரானே !

 

*********************

 

சிவகுருவே சரணம் !

 

வாசியெனும் ஈரெழுத்திலோடும் உயிர்த்துடிப்பு

நாசிவழி இருபுரு நடுதலின் நாதன்தன்

இயல்பினால் மேலேறி உள்ளனைத்தும்

ஒன்றாக்கி; துடிப்பதனில் சீராக்கி

எண்ணத்தை ஓராக்கி ! செயலதனை

மெய்யுணர்வாய் ஊட்டும் உருவம் !

மனிதுனுமாய் யாவர்க்கும் ஆசிதனை

அருளிய சிவகுருவாம் சிவனுருவம் !

எம்குருவாம் சிவசித்தன் தாழ்பணிந்தேனே !   

 

*********************

 

சிவகுருவே சரணம் !

 

பொய்யுரையை மெய்பிம்பமாய் பொய்ப்பிக்கும்

மானிடரையெல்லாம் வாயுரையாய் வாழ்த்தி

தினம்தொழுது தாழ்பணிந்து வணங்கினபோதும்

இறையுணர்வை தான்தேடி தினமோடும்

தன்னதனை யுணரா பித்தனாய்வாழ

வழியின்றி திரிந்தோரையும் கண்டெடுத்து

நாள்குறித்து தன் கையாசிதனில்

உயிரூட்டி, வாசிதனில் நிலைநிறுத்தி,

ஊசிநூலாய் உட்புகுந்து மாசெனும்

நோய்களைந்து உள்வேசம்பல

வெளியேற்ற வழிகண்டு அவ்வழியினதாம்

ஆசனம் உரைத்து உடல் நெறிதனை

காலில் கட்டுகிறார் எம் குருநாதர்

சிவசித்தரவர்’ குருநாதர் ‘சிவனேசனவன்’ ஆசியினாலே ! 

– க. முகேஷ்.

சிவகுரு சிவசித்தரின் பாடல்கள்

sivasiththan (june92013) (20)

வாசியோகப் பாடல் : 3

குருவே சிவகுருவே சரணம் !

 

குருவே சரணம் ! சிவகுருவே …. சரணம் !

சரணம் குருவே ! சிவ சிவ சரணம் குருவே ! ….

குருவே சரணம் ! சிவ உருவே சரணம் !

சரணம் சரணம் ……. சுவாமி சிவகுருவே சரணம் !

 

சிவமே குருவாய் என்றும் அருள்தாய் வரமும்

என்றும் நலமாய் வாழச்செய்தாய் எனையும்

கண்டேன் உணர்ந்தேன் தாழ்பணிந்தேனே !

சரணம் சொல்லியே தினம் துதித்தேனே !

(குருவே சரணம் ! சிவகுருவே …. சரணம் !)

 

உலகம் இழிந்து தினம் தினம் அழிந்தபோதும்

வாழ வழியாய் எம்மை ஆளும் சிவமே !

குறைகள் என்ற மக்கள் உம்மை அடைந்து பெற்ற மோட்சமே !

சரணம் குருவே ! சிவசிவ சரணம் குருவே !

உம்மை யடையா போது ஏது இந்த மோட்சமே !

மனவலியில் உள்ள போதுமுண்டு உம்மில் நாட்டமே !

      (குருவே சரணம் ! சிவகுருவே …. சரணம் !)

 

வாழ வழியின்றி வாழ்ந்தவர் எவரும் புதுவாழ்வுதனை

பெறுவார் குருவின் உருவினிலே !

 

இறந்தநிலையில் வாழும் மனிதர்க்கும் சுளிமுனை

என்னும் உயிரால் ஒளிரச் செய்திடுவாரே !

எம் குருவாம் சிவகுருநாதர்  ‘சிவசித்தர்’ அருளாலே !

      (சரணம் சரணம் ….. சுவாமி சிவகுருவே சரணம் )

 

– க. முகேஷ்.