சிவசித்தரின் பாமாலை|005|

விதி’ எனச் சொல்லும் வார்த்தையை மாற்றி

                              அமைப்பவர் சிவசித்தன்

வியாதியே இல்லை என்ற உண்மையை

                  நிரூபித்துக் காட்டுபவர் சிவகுரு சிவசித்தன்.

உண்மையின் உருவமே சிவகுரு சிவசித்தன்.

உயிர்களைக் காப்பவர் சிவகுரு சிவசித்தன்.

உயிர்கலைக் கற்பிப்பவர் சிவகுரு சிவசித்தன்.

ஓதும் பொருளின் உட்பொருளாய் இருப்பவர்

                              சிவகுரு சிவசித்தன்”.

 

 

ஓம்கார ஒளியை உருவினில் தந்த சிவகுருவே !

உடலும் உயிரும் கொடுத்து உலகத்தாரை

காக்க வழிசெய்த ஒளி உடல் கொண்டோனே !

சிவகுருநாதனே சித்தேஸ்வரனே சிவகுருநாதனே!  

பாவிகளும் நின் பார்வையால்

பதி உணர வைத்த சிவகுரு சிவசித்தனே !

பற்றற்றவனை பற்ற வைத்து

பாலாபிஷேகம் செய்து பரம் பொருளோடு

இணக்கம் தந்த எம் சிவகுரு நாதனே !

சரணம் சரணம் சிவசித்தனே சரணம்”.

 இரா.ராஜகுரு,
பழங்காநத்தம்,மதுரை.

சிவசித்தரின் பாமாலை|004|

பிணி என்ற சொல் அகற்றி

கால் என்ற வாசியை ஏற்றி

சப்த கழிவுகளும் (நிசப்தம் ஆகி) முழுமையாக வெளியேறி

சர்வேஸ்வரனும் தானும் ஒன்றாகி

ஆனந்தமயமான ஸ்தூலத்தை பெற்றிடச் செய்யும்

அற்புதகுருவே சிவமான சிவசித்தனே !”      

 

 

DSC06403ஆல் இலையில் பள்ளி கொள்வான் கண்ணனே !

எங்கள் ஆழ் மனதில் குடியிருப்பான் சிவசித்தனே !”

 

உலகிற்கெல்லாம் சிரசாய் இருப்பான் கண்ணனே !

எங்கள் செயலுக்கெல்லாம் சிரசாய் இருப்பான் சிவசித்தனே !”

 

வாசியாய் எங்கும் நிறைந்தவன் ஈசனே !

சுவாசமாய் எங்கள் உடலில் கலந்தவன் சிவசித்தனே !”

 

 

உடல் உபாதையில் நொந்தாலும்

மனம் தெளிவில்லாமல் குழப்பத்தில் வீழ்ந்தாலும்

ஊழ்வினை ஆட்கொண்டு துயரத்தில் ஆழ்ந்தாலும்

சிவகுருநாதா சிவசித்தா ! உந்தன் அணுகுமுறையான

பேச்சு ஒன்றில் உடலும் மனமும் ஆனந்தம் பெற்றேன்

உந்தன்சொல் விதியையும் மாற்றி அமைக்கிறது.

மனம் தெளிந்து விரிவடையும் தன்மை கண்டேன்.

உயிரை வளர்க்கும் உத்தமனே சிவசித்தனே

சரணம், சரணம், சரணம்”. 

இரா.ராஜகுரு,

பழங்காநத்தம்,மதுரை.

சிவசித்தரின் பாமாலை|003|

சிவசித்தனால் கால்கொண்டு நடக்க கற்றவனே

கலிதாண்டி பதி அடைவான்”.

 

sivssiththan 2  (12)சிவகுரு சிவசித்தனால் இந்த கலிகாலத்தில்

மாயையும், அறியாமையும் ஆட்கொள்ளும்

இந்த கலிகாலத்தில் இறையே மனித உருவம்

எடுத்து வந்துள்ள சிவசித்தனால் வாசியை

ஏற்றம் செய்ய கற்றுக் கொள்ளும் மனிதனே

சிவசித்தனால் பதியான இறைவனை அடைவான்”.

 

 

 

அறிவை அறியச் செய்யும் அறிவே சிவகுரு சிவசித்தன்.  

மனிதன் மனிதனாக வாழகற்றுக் கொடுப்பவரே சிவகுரு சிவசித்தன்”.

 

உண்மையும் சத்தியமும் நிலையாய் கொண்ட

புதிய யுகத்தை படைப்பவர் சிவகுரு சிவசித்தன்.

அணுவை இயக்கும் அற்புத குருவே சிவமான சிவசித்தன்”.

 

 

 

 

                  – இரா. ராஜகுரு,

                    பழங்காநத்தம், மதுரை 

 

சிவசித்தரின் பாமாலை|002|

sivasiththan (june92013) (13)

நாடி வந்தவனை நாடிபார்த்து

சிவசித்த வாசியை உள்ளே நிறுத்தி

கோடானகோடி அணுவை பிளந்து

ஆதியாய் இருக்கும் கணல் மூட்டி

அன்னாக்கின் மேல் தீபம் ஏற்றி ஒளிகண்டு

உயிரொளி பெருக்கும் குருவே

சிவகுருவே சிவசிவகுருவே சிவம்மான குருவே”.

 

 

கால் கணக்கை அறிந்தவனே

அன்னாக்கின் மேல் ஒளி காண்பான்.

கால்’லின் போக்கை நடத்த தெரிந்தவனே

கால் அதுவாய் இருக்கும் சிவமான சிவசித்தனை காண்பான்

காண்பதற்கு அறியார் மாயையில் உழலும் மனிதன்”.

 

 

 

தன் நலம் கருதா மனமோடு இணங்கும்

குணமுடையோன் சிவகுரு சிவசித்தனே !”

 

சிவசித்தனே ‘கதியென’ என்னும் மனத்தினில்

லயித்தே இருப்பவன் சிவகுரு சிவசித்தனே !”

 

சிவகுருநாதா என்றால் குரல் கொடுப்பான்.

காற்றாய், கணலாய், பனியாய், ஒளியாய்,

இடியாய் வருவான் சிவகுரு சிவசித்தனே !”

 

இரா.ராஜகுரு,
பழங்காநத்தம்,மதுரை.

சிவசித்தரின் பாமாலை|001|

sivasiththan (june92013) (15)

 

சிவகுரு வாழ்க !
சிவகுருவே சரணம் !

“சிவம் ஆன சித்தனால் உருவான பக்தன் நான்
வினையாவும் போக்கும் எங்கள் சிவசித்தனே
குருவான தெய்வமே எம் குலம் காக்க வேண்டும்
வளமான வாழ்விற்கு வழிகாட்ட வேண்டும்”.

“பகலவனின் ஒளி காணும் முன்னே
பரமனின் ஒளியே ஆதியென அள்ளித்தரும்
என் சிவகுருநாதனின் முக ஒளி காண
வரம் எமக்களித்த என்குருநாதனே
போற்றி ! போற்றி !”

“எம் இன்னலைப் போக்க பல்வேறு
நிலைகளில் யாம் உனைப் பார்க்க
“யாம் இருக்க பயம் ஏன்” எனும்
மந்திரச் சொல்லாக உன் திருமேனி
காட்சியளிக்கின்றதே, என் சிவகுரு நாதனே
போற்றி ! போற்றி !”

“வாசியாய் விளங்கும் இறைவனே
ஓங்காரமாய் இருக்கும் ஈசனே
ஓங்காரத்தை உணர்த்த அவதரித்த சிவசித்தனே”

“உன்னை ஒரு கணமும் மறவாத மனம் வேண்டும்
துன்பம் களைவாய், இன்பம் அருள்வாய்
துயரங்கள் தொடராமல் துணைவருவாய்
குருவே சிவனே அருள்வாய் சிவசித்தனே”.

இரா.ராஜகுரு,

பழங்காநத்தம், மதுரை.