சிவசித்தரின் பாமாலை|011|

சிவகுரு வாழ்க !

சிவகுருவே சரணம் !

 

இறப்பு :

 

துளியில் உருவெடுத்து பொறியில் பொடியாகும்

மானிடனே! இதற்கிடையில் பதியைத் தேடித் தேடிப்

பார்த்த கல்லின் உருவை எல்லாம் பாதம் தொட்டு

பணிந்தும் பதியதனை மதியதனில் பதிக்க முடியலையே!

உம் உடலதினிலே உத்தமனை உணர முடியலையே!

 

 

 

உருக்குலையும் உடலதனில் உருவில்லா வாசியை

உத்தமனாய் சிவகுரு சிவசித்தர் அருளிய விதிப்படி

இழுக்க இயங்கிடுமே இறையுணர்வது உம் தேகமதிலே!

பருவம் அடையும் வயதிலே பக்குவம் பெறவே!

அரூபமான வாசியத்தை அன்றாடம் இழுக்கவே

அனைத்தும் ஒழுங்குறுமே அறியாமை ஒதுங்கிடுமே!

 

விதியென்று ஏதுமில்லை உம்மதியதனை மழுங்க

வைத்துவிட்டு பதி செய்த விதியது என் குற்றம்

ஏதுமில்லை என்று ஒழுங்கில்லாது வாழ்ந்து

ஓய்ந்து மாய்ந்து போகும் மானிடனே!

மாயும் முன்னே உம் மதியதிலே மகாசொரூபர்

மதுரையம்பதியாரை மனதில் ஏற்று நீ மாயுமுன்

உம் காயமதிலே காலோடு சேர்ந்த கடவுளை உணர்வையே!

 

அறிவாசியை அறிவாய் அற்புதர் சிவகுரு சிவசித்தரை!

அறிவாசியை அறிந்திடுவாய் தன்னறிவே!

அறிவாசியை அரிதான அரூபனை அறிந்துடுவாய்

அறிவாசியை அங்கம் மாயும்முன் ஆதியை உணர்ந்திடுவர்

அறிவாசியை அகிலத்தை இயக்கம் வாசியையும்

வாசியை அருளும் வல்லோன் சிந்தாமணியாரையும் அறிவாயே!

 

சிவசித்தரின் பாமாலை|010|

சிவசித்தரின் பாமாலை|010|

 

DSC02591பாலோடு சேர்ந்த நீரதனை தனியேப் பிரித்தெடுக்கும்

அன்னமதின் தன்மை போலன்றோ – கால்கொண்டு

காமத்தில் சூழ்ந்த கழிவதனை தனியே

களைந்தெடுக்கும் நற்காரியம் நடக்குதன்றோ !

சிவகுரு சிவசித்தனின் வாசிகலை பயின்றாலே !

 

–          XXX

 

அத்துணையும் அறிந்தவர் சிவகுருவே !

ஆலவாய் பதியினிலே அழகிய சிந்தாமணியிலே

அமர்ந்த சிவகுருவே ! சித்தருக்கும் சித்தரான

சிவகுருவே ! சித்திகள் அனைத்தையும்

அறிந்தவர் சிவகுருவே ! இறை பக்திக்கும்

மேலான குருபக்திக்கு உரியவர் சிவகுருவே !

உடலை சுத்தி செய்து சிவசித்தியை

வாசியால் உள்ளூட்டி உத்தமரை

உணர வைப்பவர் சிவகுரு சிவசித்தரே !

சிவசித்தரின் பாமாலை|009|

சிவசித்தரின் பாமாலை|009|

 

வாசியிற் கலந்த ஈசனே !

அவர் அவர் எண்ணங்களான நாதனே !

மனித எண்ணங்களின் சூட்சுமமாய் விளங்கும் வாசியே !

மனித உயிரின் சூட்சுமமான வாசியே ஈசனே !

உன்னை (வாசி) அறிந்தாலே உண்மை உணர்வீரே !

உலகில் வேறெதுவும் தேவையில்லையே !

வாசியோகத்தை எங்களுக்கருளிய ஈசனே !

எம் சிவகுருவே ! சிவசித்தனே !

சிவசித்தரின் பாமாலை|008|

சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்,

 

DSC04789பறந்து விரிந்து நாம் வாழும் பிரபஞ்சத்தில்

பல்வேறு சமயங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு

சமயமும் வகுத்த வேதநூல்கள் இன்றளவும்

இருக்கின்றன. அவை மனிதனுக்கு எவ்வாறு

பயனளித்து நல்வழி காட்டுகின்றன என்பது

கேள்விக் குறியே! வேள்விகள் பல செய்ய சொல்லும்

வேத நூல்கள் பலஇருக்கின்றன. மனிதனின்

நாடியையும் அது செய்யும் வேலையையும்

துள்ளியமாய் கற்றரிந்து கற்றுத்தர மானுடர்க்கு

யாருண்டு! எந்த நூல் உள்ளது என்றால்

அதுவும் கேள்விக்குறியே! மனிதனின் அங்கத்தை

அணு அணுவாய் ஆராய்ந்து அதற்கேற்ப வாசியெனும்

பயிற்சி தரப்பட்டு அவனது அங்கமும் அகமும்

தூய்மையாகப்பட்டு, பின்னர் இறையை உணரும்

நிலைக்கு கூட்டிச் செல்லப்படுகிறது. சிவசித்தனின்

(வாசியோகமும் – இயற்கையும்) என்ற குறிப்பேட்டில்

சிவசித்தனின் மனித வேதம் என்ற நூல் சிவசித்தனின்

திருநாவால் உதிர்க்கப்பட்ட திருவார்த்தைகளை அதாவது

எம்மதத்தினராய் இருந்தாலும் அவர்கள் சுவாசிப்பது

சுவாசமே அந்த சுவாசமெனும் பிராண சக்தியை

வாசியாய் உணர்த்தி அவர்களின் மனம், எண்ணம்,

உடல் கழிவு, உண்ணும் பழக்கம், வாழும் நெறிமுறை

என்ற பலவகையான நெறிமுறைகளையும்

யாவர்க்கும் பொதுவான வண்ணம் சிவசித்தனால்

உருவாக்கப்பட்ட திருமொழியே இவ்வேதம்.

எவரொருவர் இதைப் படித்து இதில்உள்ள

நல்வழிப்படி நடக்கின்றனரோ அவர்களின்

வாழ்வில் பிணிதீர்ந்து இப்பிறவி தனை இன்புற்று

வாழ்ந்து இறைநிலையையும் அடைந்து அதாவது

நல் இறப்பை அடைந்து மறுமைநிலை இல்லாது

பரமுக்தி அடைவார்கள். இதுவே இறை சித்தரான

சிவகுரு சிவசித்தரின் மெய் கூற்றே!

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001

சிவசித்தரின் பாமாலை|007|

சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்

 

sivssiththan 2  (1)துன்பக் கடலில் நீந்துவோர்க்கு நிம்மதி தந்து

நித்ய வாழ்வழிக்கும் புண்ணியரே ! எம் கர்ம

வினை தீர்த்து வன்மமான எண்ணத்தை அழித்த

ஆதிசிவ பிறையொளிச் சுடரே ! உம்திவ்ய

மலர் பாதங்களைத் தொழுது பயன் பெற்றவர்கள்

ஏராளமுண்டு ஸ்ரீ வில்வ வாசியோக மையமதிலே !

 

**********************

 

சிவகுருவைத் தொழுதுண்டு வாழ்வர், வாழ்ந்திடுவர்

பிணியின்றி அவனியிலே எந்நாளுமே !

 

சிவகுருவின் திருப்பார்வை கண்டாலே உருக்குலைந்த

மனமும் உறுதிப்படுமே அக்கணமே !

 

தெளிவில்லா மனமதுவும் பொலிவு பெறுமே

சிவகுருவின் திருவாக்கை கேட்டவர்க்கே !

 

**********************

 

முன்னிருந்த புண்ணுடலும் பொழிவாகி பொன்னுடல்

ஆகுதப்பா சிவசித்தனின் வாசிகலையிலே !

 

கண்விழித்து கால் இழுத்து காலையிலே வாசிசெய்தவர்க்கு 

வந்திடுமே நல்லொழுக்கமது எந்நாளுமே !

 

**********************

 

மருந்துலகம் கைவிட்டு மாண்டு போவோம்

என்று மனவேதனையுற்று மன்றாடும் மானிடரையும் 

எம் சிவசித்தனின் வாசியோகம் மறுவாழ்வு

தந்து உயிரூட்டும் உண்மை தனை உணர்வதற்கு

ஸ்ரீ வில்வ வாசியோகம் தேடி நாடிவா மானிடனே !   

 

ஓயாத மன அலைகளுக்கு ஓய்வு தந்த

ஓங்காரமே சிவகுரு சிவசித்தர் !

 

சிவகுருவின் பக்தன்

 – ம. சண்முக பாண்டியன்,

சிந்தாமணி,மதுரை.

சிவசித்தரின் பாமாலை|006|

DSC_0383சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்

இறைசக்தியின் முழுவம்சமாய் குருவாய்

வீற்றிருக்கும் சிவகுரு சிவசித்தனின் திரு உருவம்

– தனை இல்லமதில் வைத்து திருச்சுடரேற்றி

சிவகுருநாதர் மந்திரத்தை முப்பது தடவை ஆழ்மனதில்

ஓதும்போது தீவினைகள் அண்டாது எதிர்மறை

சக்தியெல்லாம் இல்லமதில் இல்லாமல் போகுமே !

 

**********************

 

சித்தியிலே பெரிய ஞானசித்தி எம் ஆசான்

சிவகுரு சிவசித்தன் பிராணன் மூலம் அறிய

வைக்கும் சிவமாகிய வாசி சித்தியே ! இச்சித்தியினை

அறிந்தவர்க்கு எல்லாம் தெளிந்து உள்ளமது

ஒருங்குற்று ஆழ்மனது அமைதியுறுமே ! அவனியிலே

இதுபோன்ற வாசிசித்தி அளிக்கும் சிவசித்தனின்றி வேறுஇலர்!      

 

**********************

 

ஆயிரம் ஆலயங்கள் அமைந்தாலும் அந்த

ஆலயத்தில் பல பூஜைகள் செய்தாலும்

கிட்டாத புண்ணியத்தை, பெற முடியாத சித்தியினை

சிவகுரு சிவசித்தரின் வாசியோகம் கற்றவர்க்கு

கைக்கூடும் இது கால் அறிந்த மானிடர்கள்

அறியக் கூடிய அற்புத செயலன்றோ ! 

சிவகுருவின் பக்தன்

 – ம. சண்முக பாண்டியன்,

சிந்தாமணி,மதுரை.

சிவசித்தரின் பாமாலை|005|

சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்

 

sivssiththan 2  (2)பேராசைப் பெருங்கடலில் மனமதனை மூழ்கவிட்டு

எச்செயலிலும் மனநிறைவு கொள்ளாமல், பணமிருந்தும்

மனம்தன்னில் அமைதியில்லாமல் அலைகின்ற

மாந்தர்களே ! சிவகுரு சிவசித்தன் செப்பி வைத்த

மந்திரத்தை அவர் வகுத்த வழிசென்று உள்ளுள்ளே

ஓதிவந்தால் ஓலமிடும் மனமதுவும் ஒருமை நிலை

அடைந்து ! ஓம்காரத்தை உணர்ந்திடுமே !

 

**********************

 

சிவகுரு சிவசித்தன் வாசிகலையாலே உடலில்

மடிந்த அணுவும் மறுஉயிர் பெற்று

ஜனனம் எடுக்குதப்பா ! புதுப்புது அணுக்கள்

உருவாகி உடலது புத்துணர்வு பிறக்குதப்பா !

உள்ளமதுவும் தூய்மைபெற்று ஆதியதை அறியுதப்பா !

ஆழ்அகம் அதுவும் ஆத்மஅமைதி பெறுகுதப்பா !

 

**********************

 

மனிதனின் சிந்தையிலே சிந்தனைகள் பலவாறு

தோன்றி அதுவே பல்வேறு வடிவங்களாக வடிவெடுத்து

ஆழ்மனதின் அமைதியினை அடியோடு உருக்குலைத்து

தீய எண்ணங்களை நினைக்க வைக்கிறது !

இத்தகைய எதிர்மறை எண்ணத்தை அடியோடு

ஒழித்து ஆழ்மனதிற்கு அமைதிதரும் அற்புதக்

கலையே சிவகுரு சிவசித்தனின் வாசிகலையாகும் !

 

**********************

 

இறைவனின் சக்தியாய் குருவும், குருவினுள்

இறைவனும் இரண்டெனக் கலந்திருப்பதை

சிவகுரு சிவசித்தரின் வாசிகலை பயின்றவர்கள்

அறிவர், சிவகுருவடிவில் சிவனருள் தன்னை

அகக்கண்ணில் கண்டிடலாம், சிவகுருநாதர் அருளிய

மந்திரத்தை ஆழ்மனதில் ஓதும்போது, ஓம்கார

ஒளியதுவே உள்ளுள்ளே ஒளிவிடுமே !

 

**********************

 

ஆதியின்றி அந்தமின்றி உருவமற்று அருவமான

நீக்கமற நிறைந்திருக்கும் நித்திய தெய்வமதனை

பிண்டமதில் அறிய வைத்து, அண்டமதின்

சூட்சுமத்தை அறிய வைத்து, ஆதியதை அறிந்தவரே

எமைக் காக்கும் சிவகுரு சிவசித்தனே !

உம் திருத்தாழைப் பணிகின்றேனே !

 

சிவகுருவின் பக்தன்

 – ம. சண்முக பாண்டியன்,

 சிந்தாமணி,மதுரை.

சிவசித்தரின் பாமாலை|004|

sivasiththan (june92013) (15)சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்,

 கால் புகட்டி கலி அகற்றி உள்ளுள்ளே

வாசி செலுத்தி ஊழ்வினை வந்த பிணிஅகற்றிய

தூயனே ! எம் ஆசானே ! சிவகுரு சித்தனே !

உம்தாழ் பணிந்து நீர்தந்த கலை

பயின்றால் அலைகடலாய் எண்ண அலைகள்

எழுகின்ற ஆழ்மனமும் அமைதி அடையும் !

ஆயிரம் ஆயிரம் மனிதர்கள் நித்தம்

நித்தம் மகிழ்கின்றனர் வாசியோக

குருகுலம் தன்னிலே ! வந்து பயின்று பார் மனிதனே !

உன் அகம் அறியும் பேரானந்தமதையே ! 

 

**********************

 

உன்னுள்ளூள்ள உத்தமனை அகக்கண்ணில்

கண்டு ஆனந்தமடைய அவனியிலே

வழியுண்டோ ! உண்டென்பர். சிவகுருவாம்

சிவசித்தனின் உயிர்க்கலையெனும் வாசிகலை

அறிந்து வாசியான சிவத்தை உணர்ந்தவர்கள்

இவ்வுண்மையை கண்டிடலாம் வாசியோக குருகுலமதிலே !

 

**********************

 சூளிக் கொண்டையிலே கங்கைதனை சூடியவா !

ஆழி நிறத்தைப்போல அங்கநிறத்தைக் கொண்டவா !

சூழும் வினைதன்னை சுட்டெரிக்கும் சுந்தரனே !

உம்மை சுளிமுனையின் சூட்டினிலே உணர

வைத்தார் உயிர்க்கலையெனும் வாசியாலே

எம் ஆசான் சிவகுரு சிவசித்தன் !

 

**********************

 

ஆடி அடங்கும் வாழ்க்கையிலே ஆழ்மனதின்

ஆட்டத்தை அடக்கி அமைதியதைத் தருகின்ற

இறைகலை எதுவன்றோ ! ஓர் அறிவை உட்புகுத்தி

ஓலமிடும் மனமதனை ஒருமைப் படுத்தும்

வாசி கலையன்றோ ! அக்கலைதன்னைப் புகட்டி

மனிதனையும் புனிதனாக்கும் நற்செயலன்றோ !

சிவகுரு சிவசித்தனின் வாசிகலை !

 

**********************

 

தீயவழிசென்று பரிதவிக்கும் மனிதனுக்கும்

நல்வழிவகுத்து நல்லறிவைப் புகட்டி வரும்

நாயகனே ! வாசிகலை வித்தகர் சிவகுரு

சிவசித்தன் ! அவர் வகுத்த விதிமுறைப்படி

வாழ்ந்து வந்தால் நாளும் கிழமையும்

நவகோளும் நன்மையளிக்குமே !

 

சிவகுருவின் பக்தன்

  – ம. சண்முக பாண்டியன்,

சிந்தாமணி,மதுரை.

சிவசித்தரின் பாமாலை|003|

 

சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்sivssiththan 2  (7)

 

அடிமனதில் எழுகின்ற தேவையற்ற ஆசைகளும்

சிவகுரு சிவசித்தனின் வாசியோகக் கூடத்தின்

படியேறி குருபாதம் தன்னை பணிந்து

பணியும்போது ஆழ்மனது நிறைவுற்று பேரானந்தமது

மனதிலே நிலவுமே ! நித்தம் நித்தம்

காணும் உண்மையன்றோ ! ஸ்ரீ வில்வ குருகுலமதிலே !

 

**********************

 

சிவகுரு சிவசித்தன் உரைக்கின்ற ஒவ்வொரு

வார்த்தையும் ஆழ்மனதில் இருந்து வருகின்ற

உண்மைக்கூற்றே ! உயிர்க்கலையை

பயின்று வாசியை உணர்ந்தவர்க்கு உளமது

சமாதானம் ஆகுமே ! மனநிறைவும் வந்திடுமே !

நிலைமாறும் மனமதுவும் நிறைபெற்று நின்றிடுமே !

சிவசித்தனின் வாசிகலை பயில்பவர்க்கே !

 

**********************

 

வாழ்விலே வரும் உயர்வையும் தாழ்வையும்

சமமாக பாவித்திடுவான், வாசியோகம்

பயின்றவர். சிவகுரு சிவசித்தனின் ஓர்

அறிவாம் வாசியினை உணர்ந்தவர்க்கு

உள்ளமான ஆழ்மனதில் அமைதியானது

எந்நாளும் நிலைத்திடுமே !

**********************

 

அணுவுக்குள் அணுவாய் அணையா விளக்காய்

சுளிமுனை எனும் சிவஜோதியை நெற்றியிலே

மிளிர வைத்த சிவநேசனே ! வாசி அருளும்

சிவசித்தனே ! சிந்தையிலே சிதறுகின்ற

எண்ணமதை நிலைநிறுத்தி ஆழ்மனதில்

அமைதிதனைத் தந்தருளும் சிவகுருவே போற்றி ! போற்றி !

சிவகுருவின் பக்தன்

 – ம. சண்முக பாண்டியன்,

சிந்தாமணி,மதுரை. 

 

சிவசித்தரின் பாமாலை|002|

003sivasiththanசிவகுரு சிவசித்தர் தாள் சரணம்

 

அமைதியின்றி அலைகின்ற மனதிற்கும்

ஆறுதல் தருகின்ற திருத்தலம் எதுவோ !

அகசுமை இறக்கி சுகம் தருகின்ற

சுந்தரன் யாரோ ! ஆழ்மனதிற்கு அமைதிதேடி

அலையாதே வீணே ! ஸ்ரீ வில்வம் யோகம் தேடி வா

அமைதியான பூரண நிலையதனை !

 

*************************

 

ஆயிரம் முறை ஆலயங்களுக்குச் சென்று

ஆண்டவனைத் தொழுதாலும், படிகள்பல ஏறி

மலைகளுக்கு சென்றாலும் அடங்காத ஆழ்மனதில் எழும்

அலைகளுக்கு, அமைதி அடைய எம் ஆசான்

சிவகுரு சிவசித்தன் செப்பி வைத்த மந்திரத்தை

மனதில் பதித்தாலே ஓயாத மன அலையும் ஓய்ந்து

ஓம்காரம் உள்ளூள் புகுந்து பூரண அமைதி பெறுமே ! 

 

*************************

 

கண்கள் இமைமூடி தவநிலையில் இருந்தாலும்

ஆழமனது அமைதியில்லாது அலைபாயும்,

சிவசித்தனின் வாசிகலை அறியார்க்கு !

வாசியறிந்தவனுக்கு வசப்படுமே அமைதியின்

பூரண நிலையான நிசப்த நிலை சிவசித்தனின்

மந்திரத்தை செபித்து உயிர்கலை புரிபவர்க்கே

இறையுணர்வு பூரணமாய் கிட்டிடுமே ! 

 

************************* 

மனக்குறையும் தீர்ந்திட்டே மனநிறைவும்

வந்திடுமே சிவசித்தன் வாசிகலையிலே !

 

உண்ணும் முறை தன்னை உணர வாய்த்த உத்தமன்

எம் ஆசான் சிவகுரு சிவசித்தரே !

 

சிவசைவத்துய்ய மாமணியாய் மதுரையம்பதியிலே

வீற்றிருக்கும் வித்தகரே சிவசித்தன் !

 

பட்டினியாய் கிடந்தாலும் கிட்டிடாத பரவொளியை   

வாசியிலே அறிய வைத்தவரே சிவசித்தர் !

 

ஆழ்மனத்தின் அழுக்குகளையும் அடியோடு ஒட்டிவிடும்

சிவசித்தனின் வாசியெனும் பேரொளியே !

 

பேரானந்தம் பேரூற்று பெருக்கெடுக்கும் நெஞ்சமதில்

சிவசித்தனின் வாசிகலை உணரும்போதே ! 

 

சிவகுருவின் பக்தன்,  

ம.சண்முக பாண்டியன்,

வாசியோக வில்வம் எண்: 10 11 001