தாட்சணியம் தாரும் தயாபரனே !!

#Sivasithan (14)தன்னிச்சையாக தனியனாக தனையறிந்தவரே

தானாககற்ற தரணியாளும் கலையை

தமிழ்கொண்டு தாடாளனாக தருவிப்பவரே

தாபம் தட்பம்அறியாது அதன்

தாத்பரியம் அறியாது தாதன் செய்த

தவறை தவிர்த்து தாண்டவம் விடுத்து

தாட்சணியம் தாரும் தயாபரனே !!

 

சிவகுருவின் பக்தன்,

மா.மணிகண்டராஜன்

வாசியோக வில்வம் எண்: 13 11 001

அலைபேசி எண்: +91 89 40 02685

பணம் :

பணம் :

 084

 • பணம் சேர்ப்பது உன் உடல் அணுவை அழிப்பதற்கு சமம்.
 • அளவோடு உண்ணும் உணவே உண்மையை அறியச் செய்யும்.
 • அளவோடு சேர்க்கும் பணமே உன் வாழ்வை பெருக்கும்.

 

 • பணமே உன் ஒழுக்கத்தை அழிக்கும். சிவகுருவின் வாசியே உன் ஒழுக்கத்தை நிலைநிறுத்தும்.
 • வாசி அறியாமல் உன் உடல் உயிர் பெறாது. உடல் உயிர் பெறுவது வாசியாலே! பணத்தால் அல்ல.
 • இறக்கும்போது உடல் அறிவது வாசி. வாசியால் இறக்கும்போது மனநிறைவு பெறுவது இறைவனின் உணர்வே.

 

 • இறக்கும்போது உடல் அழிவது பணத்தாலே. நீ உண்ணும் உணவாலும், நீ சேர்த்த பணத்தாலும், இவையாவும் இல்லாத ஒழுக்கத்தால்.
 • இறப்பின் ஆனந்தம் உணர்வது வாசி, பணத்தால் அல்ல. சிவகுரு வார்த்தை கோடி நன்மை. நீ சேர்க்கும் பணத்தால் கோடானகோடி அணு உன் உடலில் அழியும்.

 

 • பணத்தை அழிப்பது பணமே. அழியாமல் இருக்கும் வாசியை உன் உடலில் ஏற்றடா!
 • பர ஒளி காண உடல் தேவை. உடல் உயிர் பெற வாசி தேவை.
 • உடலை அழிப்பது பணம். உறவை கெடுப்பது பணம். அணுவை அறிந்தால் அழிவது ஏது!

 

 • பணம் சேர்த்து உன் உடல் அழிவது பாவமே. அப்பணத்தால் மற்றவரை அழிப்பதும் பெரியபாவம்.
 • உடல் வாழ்வு பணத்தால் அல்ல. உள்ளத்தின் இறைவனை அறிவதும் பணத்தால் அல்ல. உன் உடல்நலம் பெறுவது பணத்தால் அல்ல.

 

 • கோயிலுக்கு செலவழிக்கும் பணமே உன் உண்மையை அறியும். உண்மை பணமே உன்னை உயர்த்தும்.

 

வாசி அறிந்தால் வாழ்வு. உண்மை இழந்தால் அழிவு…

ஒழுக்கம் : 

 • உடலின் செயல்பாட்டை அறிந்து, அணுவுக்கு தேவையான வாசியோகப் பயிற்சியை செய்தாலே உடல் நலம் பெறும்.
 • உடல் அழிவுக்கு காரணம் ஒழுக்கமின்மை. ஒழுக்கத்தின் ஆணிவேர் அணு.

 

 • சிவகுரு பார்வை அணுவை அறியும். வாசியால் உன்னை நீ உணர முடியும்.
 • வாசியால் அணு அழிவை தடுப்பாய். உணவால் உன் உடலை அழிக்கிறாய்.#Sivasithan (15)

 

 • ஒழுக்கமற்ற உன் அணு சிவகுருவின் வாசியால் உயிர்பெறும்.
 • வாசியால் உன் உடல் அழியாது. ஒழுக்கமின்மையால் உன் உடல் அழியும்.

 

 • வாசி அறிந்தால் வாழ்வு. உண்மை இழந்தால் அழிவு.
 • உடல் அறிந்தால் உள்ளம் அறியலாம். உண்ணும் உணவை அறிந்தால் வாசியை அறியலாம்.

 

 • வாசியை அறிந்தால் உண்மையை வாசியாலே உணரலாம்.

அணு:

அணு:

085

 • உடல் அணுவின் செயல்பாடு தன்னுள் அறிய வாசியே மூலம்.
 • உடலால் தன்னை உணரவைக்கும் அணுவிற்கு உணவே வாசி.
 • இரு வழி நுழையும் வாசி உடலால் அண்டத்தை உன்னுள் காண்பாய்.

 

 • தன்னுள் இருக்கும் அணுவை அறியாமல் இயற்கையை அறிய முடியாது.

 • இயற்கையை அறிய முற்படுவது உடலில் உன் அணுவை அழிப்பதற்கு சமம்.

 • சிவசித்தன் வாசியை உணர்ந்த அணுவை எவரும் உணரமாட்டார்.

 

 • சிவசித்தன் அணுவை அறிய முற்படுவான். அவன் அணுவை அழிப்பவன் ஆவான்.
 • சிவசித்தன் வாசியை உணரும் அணுவை துன்புறுத்தினால் வாசியே உன் உடல் அழிவதை தடுக்காது.
 • பிறந்தாய் வளர்ந்தாய், உன் அணுவை அறியாதவன் நீ. உயிர் கொடுக்கும் அணுவை அறிய முற்படாதே.

 

 • முச்சுடரையும் தன்னுள் அறிவது வாசியால் தான். அதை தன்னுள் உணர வைப்பது சிவசித்தரின் வாசியே.

 • வாசியே தன்னுள் முச்சுடரின் ஒளியாகும். சிவசித்தன் அருளாலே இது மெய்யாகும்.

 • உடல் அறியும் அணுவாலே முச்சுடரின் வழி அறிவாய். வாசியாலே உயிர்பெற்று முவ்வழியை உணர்வாய்.

 

 • காணாத ஒளியை தன்னுள் காணும் வளியால் சிவகுருவின் அருளால் நவதுளையால் ஒரு துளை அறிவாய்.
 • இருக்கும் இடமறிந்து வாசி செலுத்து உன் அகம் வாசியால் ஒளி ஆகுமே.
 • நாவால் கூறும் வார்த்தையை அணு அறியுமே. அறியாமல் பேசி அழிக்காதே உன் உடலை.

 

 • ஆதாரம் இத்தனை என்று அறியாத நீ, வாசியை அறிந்து பார். ஆதாரம் எவை எவை என்று உணர்வாய்.

 • ஆதாரம் கணக்கிட்டு கூறியவன். அணுவை அறியாமல், உடலை அழித்தானே.

 • ஆதாரம் அறிந்து செலுத்தும் வாசியால், அண்டத்தின் பேராற்றலை நீ அறிவாய்.

உடம்பு :

உடம்பு :

#Sivasithan (16) 

 • உடம்பை நிலைநிறுத்தினால், பிராணனை வாசியாக மாற்றி ஞானத்தை பெற முடியும்.

 

 • அழியும் உடம்பை அறியும் வழி சிவசித்தரின் வாசியோகமே.

 

 • உண்ணும் உணவின் கழிவுகளே நம் உடம்பை அழிக்கிறது.

 

 • உடம்பு கழிவுகள் தேங்கி அழிவதை உணர்த்துவது அணுக்களே.

 

 • உடம்பு அழியும் நிலையை உணர்த்தும் அணு.

 

 • அழியும் அற்ப உடம்பு என்று நினையாதே. உடம்பே ஞானத்தை பெறும் வழி. அவ்வழி வாசியே.

 

 • அழியாத அணுவை பெற்றவனுள் அண்டமும் இயங்கும்.

 

 • கழிவு அகற்றிப் பார். அணுவின் துடிப்பால் வாசியின் நிலை அறிவாய்.

 

 • வாசியே அணுவின் கூறு. அணுவை பிளந்து வாசியால் உடம்பை நிலை நிறுத்தலாம்.

 

 • வாசியின் நிலையால் அணுவின் நிலையை உணரலாம். அணுவின் நிலையால் உடம்பை உணரலாம்.

வாசிஉணர்த்தும் அணுபொறியானவன்

 

sivssiththan 2 (29)

மண்ணகத்தே வாழ்ந்து எம் வாசியால்

வாழச் செய்தவன். —————– சிவசித்தன்

 

           எம் வாசிதான் உன்னுடல் இயக்கத்துள்ளும்

           அமைப்புக்கும் ஊன்றுகோல் உண்மைதனை

           உடல் உணர்த்தும். —————-சிவசித்தன்


           எம் வாசியை உண்மையை உணர்த்தும்

           வாசிபரிபூரணன், முறை தவறாமல் கற்பிப்பேன்

           முறையோடு காத்தல் எம் இறைமை. —————-சிவசித்தன்

                                               

           வாசியால் எம் செயல்

           வாசியோடு கலந்து உள்பொருள்

           வாசிஉணர்த்தும் அணுபொறியானவன்

           வாசியான சிவசித்தன் பரந்த

           வாசியில் ஐந்தெழுத்தை உடலாலே உணர்த்தும்

           வாசியின் நெருப்பான சிவசித்தன் யாமே.. —————-சிவசித்தன்

 

**************************************************************************

ஆயுள் வரை சுகம் பெற வாசியை ஏற்று

 

1)    உடல் கழிவால் உடலெல்லாம் அழிந்து உயிர் தன்னை

இழந்தால் உடல் பேரின்பம் இல்லையே. —————-சிவசித்தன்

 

2)    வாசியால் உடல் உணர்ந்த இவ்வின்பத்தை இன்னதென்று

எம்மால் சொல்ல முடியாதது என்பது உண்மை. —————-சிவசித்தன்

 

3)    வாசியோகத்தால் அடையும் இருபெரும் பயன்

கவலை இல்லாமையும், மகிழ்ச்சியும். —————-சிவசித்தன்

 

4)    வெட்டவெளியிலே காணாத கடவுளைக் காட்சியாக

காண்பதும் உன்னுள்ளே நானுமாய் நிற்கும்

காலம் உள்ளதே. —————-சிவசித்தன்

 

 

 

 

சிவசித்தன்: வாசியே நிலையான உலகம்

சிவசித்தன்

sivssiththan 2 (30)
* மனிதன் பிறந்து தூய்மையான வழியில் சென்று
உண்மை உணர எம் வாசியோகமே உண்மையை
மனிதனுள் உணர்த்தும்.

* உடல் உண்மையை உணர், உறவுகளின் பற்றை நீக்கு
உடல் பற்றை நீக்கியப்பின் மனித உடல் உண்மையையும்
தன்னுள் செயல்படும் ஆற்றலை எம் வாசியோகத்தால்
உணர வைப்பேன்

* நிலையான வாசி நிலையான உலகம், மனிதன் எப்படி
மாற்றினாலும் உலகம் பிறந்து இறந்து பிறந்து கொண்டே
தான் இருக்கும் அது தானாய் நடக்கும் செயலாகும்.

* வாசியான எண்ணத்தால் உலகம் படைத்தேன்
வாசியே மனித உடலுக்கு உண்மை உணர்த்தும்
வாசியே மனித ஆற்றலை உடலுக்கு செயல்படுகிறது.

* வாசி இல்லையேல் உலகில்லை
உடல்(பிணி) இல்லையேல் அறிவில்லை
உண்மை இல்லையேல் ஆற்றலில்லை

* உடம்பின் அறிவு பயனற்றதாகும்
உடல் உள்ளுறுப்பு உற்பத்தியே உண்மையாகும்
உடலுக்கு வாசிதந்தால் அறிவு பேரறிவாகும்
உண்மை ஆற்றலின் செயலை உடலால் உணர்வாய்.

ஆதியான முதலும் முடிவும்.

– சிவசித்தன்

சிவசித்தனின் உண்மை உணர்வுகள் !

1. அனுபவமே அறிவு என்பதை நீ உன்னை உணர்ந்தால் உண்மை புரியும் – சிவசித்தன்

2. பணம் உன்னை அழிக்கும். உன் அறிவு வேலை செய்யவில்லை,(காரணம் மனிதன் நடைபிணம் – ஆகையால் அறிவு உனக்கு வேலை செய்யாது) உன் பணம் தான் உன்னை ஆளுகிறது – சிவசித்தன்.

3. வழிகாட்டி இல்லாத நிலை தான், மனிதன் அறியாமைக்கு உண்மையான காரணம், அறியாமை என்றால் சொன்னால் சிலர் எனக்கு எல்லாம் தெரியும் என்பான். ஆனால் உனக்கோ உண்மையை உணர தெரியவில்லையே – சிவசித்தன்

sivssiththan 2 (27)

4. உன்னை அறியவைத்தேன், இயற்கையை அறியும் முன், எமை விட்டு விலகினாய்,
உன் உடல் அறிந்த என்வாசி அறியும் உன் ஆன்மா நிலைதன்னை,
நிலை தடுமாறினாய், மாயையால் உன் வசம் வாசியும் இருந்தும் அறியாமல்,

பல யுகம் கண்டு அறிவாய் எமை. (உன் ஆன்மா) – சிவசித்தன்.

5. தமிழன் என்றால் தமிழ் நாட்டில் தான் இருக்க வேண்டும். தமிழ்தான் பேசவேண்டும். தமிழ் மக்கள் வாழ்வில் முன்னேற வழிவகை செய்ய வேண்டும் – சிவசித்தன்.