தங்களால் கருணையுடன் உருவாக்கித்தரப்பட்ட தனியுலக சாம்ராஜ்யத்தில் புதிதாகப்பிரவேசிக்கிறேன்!

வணக்கம் சிவகுருவே.

தங்களால் கருணையுடன் உருவாக்கித்தரப்பட்ட தனியுலக சாம்ராஜ்யத்தில் புதிதாகப்பிரவேசிக்கிறேன்!
நன்றி சிவகுருவே

புதியதோர் உலகம்…அது
சிவசித்தன் உருவாக்கிய…..
தனியொரு உலகம்.
உண்மைக்கோர் உலகம்;
உண்மையானவர்களுக்காக;
உண்மையால் உருவாக்கப்பட்ட,
உயர்ந்ததொரு தனியுலகம்;
அங்கே…….உறுப்பினராக ஆக
அக உண்மை மட்டுமே போதும்;
ஆடம்பரத்திற்கு இடம் இல்லை,
படாடோபத்திற்கு இடம் இல்லை,
மருந்து, மாத்திரைகளுக்கு இடம் இல்லை,
மாற்றிப் பேசும் பேச்சுக்கு இடம் இல்லை.
பொய்,புகழ்ச்சிக்கு இடம் இல்லை.
வம்பு, வழக்கிற்கு இடம் இல்லை.
வசை பாடுவதற்கு ஒன்றும் இல்லை.
ஏமாற்றுவதற்கு ஒருவரும் இல்லை.
ஏமாறவும் மனிதர்கள் இல்லை.
இங்கிருப்பது ஒன்றே ஒன்று தான்;
……………………………………………………………..
உண்மை…….உண்மை………உண்மை
மறுபெயர்; சிவகுரு சிவசித்தக் கண்ணன் ஒருவரே!

நன்றி வாசிதேகக்கண்ணா!

 

 

வாழ்க்கையை புதிதாக வாழ ஆரம்பித்திருக்கும்

சிவகுரு சிவசித்தனே சரணம்!

உள்ளத்தை தெளிவடையச் செய்து,
உணர்வுகளைத் தூய்மை செய்து,
எண்ணத்தை ஏற்றம் பெற வைத்து,
ஏகாந்தமாய் இருக்க வைத்து,
அன்பை உள்ளுக்குள் உணர்த்தி,
ஆருயிர் தலைவனை நேசிக்கவைத்து,

…..அடங்காமல்……
…..ஆணவத்துடன்….
…..அடிப்படைப் பண்பு இல்லாமல்….
…..கீழ்ப்படிதல் இல்லாமல்…..
…..தவறான எண்ணம் கொண்டு…
…..சிவசித்தனை நினைத்த என்னை…

…..மிகுந்த கருணையுடன்,
தவறைச் சுட்டிக் காட்டி,
நல்எண்ணமாக மாற்றி அமைத்து,
கணவருடன் ,குழந்தைகளுடன்…
ஒற்றுமையாய் வாழ வாழ்வியல்
அறிவைப் புரிய வைத்து,

அடக்கமாய் வாழ்வதன் உன்னதத்தை,
அன்பின் மகத்துவத்தை,
விட்டுக் கொடுத்தலின் உயர்வை,
அனுசரித்தலின் பண்பை,

எனக்குள் புரியவைத்து உணர்த்தி,
வாழ்க்கையை புதிதாக வாழ
ஆரம்பித்திருக்கும் என்னை
தனது தூய அன்பால்
தூய்மையாக்கிக் கொண்டிருக்கும்
சிவகுரு சிவசித்த வாசிதேகக்
கண்ணனின் திருவடிகளில்
சமர்ப்பிக்கின்றேன்!

நன்றி சிவகுரு! நன்றி சிவகுரு!

முழுவதுமாய் நம்பி வந்தால், மூழ்காமல் கரை ஏற்றுபவனாம்!

வணக்கம் சிவகுருவே!
சிவகுரு சிவசித்தன் திருவடி சரணம்
…………………………………………………………….
மூலவனாம்,
மூலப்பொருள் ஆனவனாம்;

முதலும், முடிவும் இல்லாதவனாம்;
முழுமுதற் பொருள் ஆனவனாம்;

மூவுலகை இயக்கி ஆள்பவனாம்;
மூன்றும் ஒன்றே என ஆனவனாம்;

முக்கண்ணனாம்;
முப்பொருள் உணர்த்தியவனாம்;

முக்காலமாய் இருப்பவனாம்;
முடியா முதலானவனாம்;

முறையாக வாசியை உட்செலுத்தினால்
தேகம், அகம் உணர்த்துபவனாம்;

முயற்சியுடையோரைக் காப்பவனாம்;
முப்பால் கடந்தவனாம்;

முழுவதுமாய் நம்பி வந்தால்,
மூழ்காமல் கரை ஏற்றுபவனாம்!

முழுமை அறிவைக் கொடுப்பவனாம்;
முழுமையாய் நமைஆட்கொள்பவனாம்;

மூவுலகும் தொழ வேண்டியவனாம்;
மூன்றும் ஒன்றாகத் தெரிபவனாம்;

ஒளிப்பிழம்பான பேரொளியில்,
சிறுபொறியாய் நமை இயக்குபவனாம்;

அவனே சிவசித்த ஒளிப்பேராற்றலாம்;
அவனே அன்புகாட்டும் வாசிதேகக்
கண்ணனாம்;

அவனே சிவகுரு சிவசித்தனாம்;
அவனே ஆதிமூல அருட்ஜோதி
வடிவானவனாம்;

சிவகுருவே சமர்ப்பணம்!
சிவகுரு சிவசித்த திருவடிகளேசரணம்!

நன்றி சிவகுருவே!

ஐந்தெழுத்து மந்திரமாம்….. “ஐங்கரனே”

சிவகுரு சிவசித்தன் திருவடி சரணம்!

ஐந்தெழுத்து மந்திரமாம்…
“சிவகுருவே”

ஐந்தெழுத்து மந்திரமாம்….
“சிவசித்தா”

ஐந்தெழுத்து மந்திரமாம்….
“வாசிநாதனே”

ஐந்தெழுத்து மந்திரமாம்…..
“ஐங்கரனே”

ஐந்தெழுத்து மந்திரத்தால்;
ஐம்புலனணைத்தையும்;
ஐம்பூத சேர்க்கையுடன்;
ஐந்துவித செயல்களால்,
(படைத்தல்,காத்தல்,
அழித்தல், அருளல்,
மறைதல்)
அடக்கம் பெற வைப்பவனே!
ஆதி மூல நாயகனே…எங்கள்
சிவசித்த வில்வ நாயகனே….
உன் திருவடிகளே சரணம்!சரணம்!

நன்றி சிவகுருவே!

கேளிக்கை, படாடோபம் எங்களுக்கில்லையே, எளிமையான சிவசித்தன் உள்ளிருக்கையிலே

சிவகுரு சிவசித்தன் திருவருளால்;
………………………………………………………………..

நாளும், கிழமையும் நமக்கில்லையே,
நாதன் உள் இருக்கையிலே;

நவகோள்கள் எதுவும்
பார்ப்பதில்லையே,
நவசிவசித்தகன்
உள் இருக்கையிலே;

சாதகம்,கட்டம் தேவையில்லையே,
சற்பத்தலைவன் உள்ளிருக்கையிலே;

வாஸ்து, பரிகாரம் செய்வதில்லையே,
வாசித் தலைவன்உள்ளிருக்கையிலே;

கோவில்,குளம்,மலை சுற்றத்
தேவையில்லையே,
அக்னி தற்பரண் உள்ளிருக்கையிலே;

செய்வினை எதுவும் எமக்கில்லையே,
எங்கள் சிவகுரு நிறைந்திருக்கையிலே;

பயம்,கவலை எதுவும் எமக்கில்லையே,
பங்கயக் கண்ணன் வாசிதேகக்
கண்ணன் இருக்கையிலே;

கேளிக்கை, படாடோபம்
எங்களுக்கில்லையே,
எளிமையான சிவசித்தன்
உள்ளிருக்கையிலே;

யாரிடமும் எதிர்பார்த்தல்
எங்களுக்கில்லையே,
எல்லாம் சிவசித்தன் கொடுப்பதாலே;

அன்பு, இன்பம், ஆனந்தம், ஆழ்துயில்
அனைத்தும் எங்களுக்குண்டே,
தூய அன்பாய் அவனை
பக்தி செய்வதினாலே;

வேறு என்ன வேண்டும் இப்பிறவியிலே
நிறைவாய் நிறைந்திருக்கும்
சிவசித்தன் உள்ளிருக்கையிலே!!!!!

சிவகுருவின் திருவடிகளில் சமர்ப்பணம்!
நன்றி சிவகுருவே!

பூஜை, புனஸ்காரம் செய்வதில்லையே,
முல்லை நீரானவன்
உள்ளிருக்கையிலே;

சாத்திரம், சம்பிரதாயம் எதுவும்
கடைபிடிப்பதில்லையே,
சிவகுரு சிவசித்தன்
உள்ளிருக்கையிலே;

எங்கள் சிவசித்தனின் ஆதியான, அன்பான, அமுதமான இயல்புத்தமிழ்

வணக்கம் சிவகுருவே!

அமுதத்தமிழ்;
ஆதித்தமிழ்;
இன்பத்தமிழ்;
ஈகைத்தமிழ்;
உயிர்த்தமிழ்;
உவகைத்தமிழ்;
எண்தமிழ்;
ஏற்புடைத்தமிழ்;
ஐந்நிலத்தமிழ்;
பைந்தமிழ்;
ஒப்புயர்வற்ற தமிழ்;
ஓங்கி வளர்ந்த தமிழ்
ஓங்காரத்தமிழ்;
ஔடதமான தமிழ்;
அஃதே எங்கள் சிவசித்தனின்
ஆதியான, அன்பான, அமுதமான
இயல்புத்தமிழ்;
தமிழ் வாழ்க;
தென்மதுரை ஆதி சித்தன் வாழ்க, வாழ்க, வாழ்கவே!
நன்றி சிவகுரு!

அனைத்து இடங்களிலும் அன்பாய், இன்பமாய், நல் உணர்வுகளாய் பரவி நிறைந்து

வணக்கம் சிவகுருவே!
காக்கும் சிவசித்தனே அன்பானவன்!

பௌர்ணமி நிலவில்,
தென்றலின் வருடலில்,
ஆதித் தமிழனை வணங்கி,
தொடங்கினேன் பயிற்சிகளை!

முழுநிலவின் குளுமையில்,
வாசியானது உட்சென்று,
இயற்கையை துணைக்கழைத்து,
வாசிநாதனை தரிசிக்க,
அனுமதி வேண்டி நின்று,
உள்ளே துடிப்புடன்
காத்து நின்ற போது,

அனைத்து இடங்களிலும்,
அன்பாய், இன்பமாய்,
நல் உணர்வுகளாய்,
வாசிதேகக் கண்ணன்
பரவி நிறைந்து,

ஓர் உருவாய்,
ஒருமை எண்ணமாய்,
பேராற்றலின் ஒரு துளியாய்,
பேரன்பின் ஒரு துளியாய்,
பேரறிவின் ஒரு துளியாய்,
பேரழகின் ஒரு துளியாய்,
பேரருளின் ஒரு துளியாய்,
ஒளிவெள்ளத்தின் ஒரு பொரியாய்,

வற்றாத இருப்பாக,
வாரிவழங்கும் வள்ளளாக,
வாசி நாதனாக,
எம் பெருமானாக,
இரு பெரும் சக்திகளோடு,
(இறையான்மாக்களோடு)
காட்சி தனை அருளும்,
வாசிதேகக் கண்ணனாக
மலர்ந்தருளும்
சிவசித்தனே!
நின் திருவடி சரணம்! சரணம்!
நன்றி சிவகுருவே!

கண்ணொளியால் கருணை காட்டுகின்ற சிவசித்தன்… ஒன்றுமில்லாதவனாய்

சிவகுரு சிவசித்தன் திருவடி சரணம்!

ஒன்றுமில்லாத ஆதிமூலமே!

கண்ணொளியால் கருணை காட்டுகின்ற சிவசித்தன்…….
ஒன்றுமில்லாதவனாய்;

தேகத்தில் தனதருள், தனதன்பை
தந்திடும் சிவசித்தன்……..
ஒன்றுமில்லாதவனாய்;

அகத்தில் அன்பை அம்சமாய்
அருளிடும் சிவசித்தன்……….
ஒன்றுமில்லாதவனாய்;

எண்ணத்தில் நல்எண்ணமாய்
நலமருளும் சிவசித்தன்……..
ஒன்றுமில்லாதவனாய்;

செந்நீர் முழுவதும் நிறைந்திருக்கும்
சிந்தாமணி சிவசித்தன்……..
ஒன்றுமில்லாதவனாய்;

நரம்புகள் அனைத்திலும்
உணர்வாய் சிவசித்தன்………..
ஒன்றுமில்லாதவனாய்;

நாடியின் நலமிகு தன்மைகள்
அனைத்தும் சிவசித்தன்………..
ஒன்றுமில்லாதவனாய்;

வாசியாய், இயற்கையாய்
அனைத்திலும் சிவசித்தன்……..
ஒன்றுமில்லாதவனாய்;

அணுவும், அதன் மையமும் இயக்குவதும், இயங்குவதும்சிவசித்தன்……..
ஒன்றுமில்லாதவனாய்;

ஒன்றுமே இல்லாத வெற்றிடமே!
ஒன்றை உணர்த்தும் சிவசித்தன்…..
ஒன்றுமில்லாதவனாய்;

ஒன்றுமில்லாத உன்னிடமிருந்து
படைக்கப்பட்ட நாங்களும்
ஒன்றுமில்லாதவர்களாய்
ஆக வேண்டும்.

ஒன்றுக்குள் ஒன்றாய்;
ஓர் உருவமாய்;
ஒன்றிப் பிணைந்து;
ஒன்றுமில்லாதவர்களாகி;
ஒன்றுவோம்…. சிவசித்தனிடம்;

உன்னை உணர்ந்தவர்கள்
பின் தொடரட்டும்;
உன்னை உணராதவர்கள்
பின் வாங்கட்டும்;
நமக்கென்ன வருத்தம்?

நாம்தான் ஒன்றுமில்லாதவர்கள்
ஆயிற்றே!!!!!

நன்றி சிவகுருவே!