இயற்கையின் துனைகொண்டு படைத்தானே இவ்வுலகை

குருவடி சரணம் சிவகுரு திருவடி சரணம்

வணக்கம் சிவகுருவே

வாய்மட்டும் தான்கொண்டு
வான்முட்டும் பொய் பேசி
வாழ்ந்துவரும் வஞ்சகர்களே கேளுங்கள்

தான்கொண்ட லட்சியத்தில்
சிறிதளவும் வழுவாமல்
மெய்ஞான வழிகொண்டு
இயற்கையின் துனைகொண்டு
படைத்தானேஇவ்வுலகை
தான்கண்ட வான்வாசிகொண்டு

கதிரவனின் ஒளிதனையே
சிறுமேகம் மறைத்திடுமோ
சிலநேரம் மறைத்தாலும்
சூரியனின் சுடரொளியால்
மேகக்கூட்டம் சிதறியோட
திக்கெட்டும் ஒளிவீசும்
எம் பகலவனின் பேருண்மை

விண்ணவரும் மன்னவரும்
படித்தவரும் பாமரரும்
சிவகுரு சிவசித்தன் பேரொளியான்
மெய்யடியை பணிவார்கள்
பூமாரி பொழிவார்கள்

ஓம் சிவய சிவசித்தன் ஓம்

மனமெல்லாம் கழிவுடனே மதியிழந்து திரிந்தோமே!

குருவடி சரணம் சிவகுரு திருவடி சரணம்

வணக்கம் சிவகுருவே

மனமெல்லாம் கழிவுடனே
மதியிழந்து திரிந்தோமே!

கண்டதையும் தான் தின்று
மலக்குடலை அடைத்தோமே!

மருத்துவனை நாடிச்சென்று
பணத்தையெல்லாம் இழந்தோமே!

போகாத கோயிலில்லை
பார்காத ஜோசியனில்லை!

இப்படித்தான் இனி நம் வாழ்வென்று
வருத்தத்துடன் இருந்தோமே!….

ஒளிக்கீற்றாய் தெரிந்த திசை
நோக்கி முன்னேரிச்சென்றோமே
அதிசயத்தை கண்டோமே!

ஒளிக்கீற்றாய் தெரிந்த இடம்
ஒளிவெள்ளமாய் மாறியதே!

தடுத்தாட்கொண்டான் தவப்புதல்வன்
மும்முறையை அருள்புரிந்தான்!

திருநாமத்தால் இறையுனர்த்தி
உணவுமுறையால் உடல்கழிவகற்றி
வாசியோக பயிற்சியினால் மனக்கழிவகற்றி!

நோயென்பதே மாயை என்றுனர்த்திய
இயற்கையின் இறைவா போற்றி போற்றி!…….

ஓம் சிவசிவ சிவகுருவே ஓம்

உன்னடிதனிலே என் மரணமும் வேண்டும்

குருவடி சரணம் சிவகுருதிருவடி சரணம்

வணக்கம் சிவகுருவே

அன்பினால் அரவணைத்து

வாசியால் வளமளித்து

எமை

காக்கும் சிவசித்தனே அன்பானவன்

ஓம் சிவசிவ சிவகுருவே ஓம்


 

குருவடி சரணம் சிவகுரு திருவடி சரணம்

வருந்தாதே மனமே
கலங்காதே இனிமேல்
வீழ்ந்ததால் தானே
விண்மீனாய் எழுந்தோம்
சிவகுருவின் திருபாதம்
பற்றியதால் தானே
கவலைகள் அனைத்தும்
நீங்கியதே நமைவிட்டு….

தினசரி நானும்
சிவகுரு புகைப்படம் கண்டே
அன்றாட பணிகளை துவங்கிடுவேனே
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காட்சி
அவன் திருமுகம் தனிலே கண்டிடுவேனே
வானத்தில் ஜிவ்வென பறப்பது போல
ஆனந்தமாய் நானும் உணர்திடுவேனே…

அவனே என்னுடன் இருப்பதினாலே
துன்பமும் இல்லை துயரமும் இல்லை
கஷ்டமும் இல்லை நஷ்டமும் இல்லை
இறையை உணர்த்தியே எமை ஆட்கொண்ட இறைவா பிறவிப்பயனை அருளிய இறையே
உன்னடிதனிலே என் மரணமும் வேண்டும்
விழிநீர் வழிய நின் திருவடி சரணம்

ஓம் சிவசிவ சிவகுருவே ஓம்

சித்தா சிவசித்தா அறியாமை அழிக்கின்றாய்

குருவடி சரணம் சிவகுரு திருவடி சரணம்

சித்தா சிவசித்தா
வித்தாய் வாசி விளைவித்தாய்

சித்தா சிவசித்தா
நல்முத்தாய் எமை மாற்றிட்டாய்

சித்தா சிவசித்தா
தனதருளை தந்திட்டாய்

சித்தா சிவசித்தா
மாயை மறைத்திட்டாய்

சித்தா சிவசித்தா
சற்பம் உணர்த்திட்டாய்

சித்தா சிவசித்தா
எம் உயிரினில் உறைகின்றாய்

சித்தா சிவசித்தா
அற்புதங்கள் புரிகின்றாய்

சித்தா சிவசித்தா
அறியாமை அழிக்கின்றாய்

சித்தா சிவசித்தா
அரவத்தால் ஆட்கொண்டாய்

சித்தா சிவசித்தா
எமை காக்கும் இறைவனாகின்றாய்

ஓம் சிவசிவ சிவசித்தன் ஓம்

சீறிடும் சிவசித்த சற்பமே நீ வாழியவே

குருவடி சரணம் சிவகுரு திருவடி சரணம்

காக்கும் களிரே

கர்ஜிக்கும் யாளியே

ஆதித்தமிழ் தந்த வேழமே

எண்ணவோட்டத்தின் பரியே

சீறிடும் சிவசித்த சற்பமே

நீ வாழியவே

சிவகுருவே போற்றிகுருவடி சரணம் சிவகுரு திருவடி சரணம்

அச்சம் தவிர்த் ‪#‎தேன்

கோபம் துறந் #தேன்

நெஞ்சம் நிமிர்ந் #தேன்

உண்மை உரைத் #தேன்

அன்பை அறிந் #தேன்

தேகம் தெளிந் #தேன்

வாசியால் வளர்ந் #தேன்

இறையை உணர்ந் #தேன்

உன்னை நினைந் #தேன்

உள்ளம் குளிர்ந் #தேன்

பூவாய் மலர்ந் #தேன்

உன்மலரடி பணிந் #தேன்

ஓம் சிவய சிவசித்தன் ஓம்

முகநூலின் வழியாக மூலவனுக்கு முகமன்

குருவடி சரணம் சிவகுரு திருவடி சரணம்

காவலனுக்கு கடிதம் தேதி:-5.1.2016

அனுப்புனர்:-
செ.சி.கார்த்திகேயன்,
கதவுஎண்:-1, ஓம்சக்தி இல்லம்(சிவசித்தன்இல்லம்),
சாமிகுளம் முதல் தெரு,
சின்னமனூர்.

பெறுநர்:-
இயற்கையின் இறைவன்
சிவகுரு சிவசித்தன் அவர்கள் சமூகம்,
வான்வாசி ஒளித்திருத்தலம்,
சிந்தாமணி.

பொருள்:-முகநூலின் வழியாக மூலவனுக்கு முகமன்..

வணக்கம் சிவகுருவே;

ஆலயம் அது செல்லாமல்
ஆண்டவனாய் உனைக் காண்கின்றோம்
உன் மெய்யடியை தான் பற்றி
பேருண்மை உணர்கின்றோம்

துர்எண்ணம் தூளாகும்
உன் எண்ணமே செயலாகும்
கழிவகன்ற உடல்தனிலே
உன்உருவை காண்கின்றோம்

உன்னருகே வந்தவுடன்
உழல்கிறதே எம் சற்பம்
உன்விழியசைவை கண்டவுடன்
அடங்கி பணிந்திடுதே அன்பொழுக

மூவுலகம் அழிந்தாலும்
உன் ‪#‎தனியுலகம் ‪#‎தழைத்தோங்கும்
அத்தனியுலக பேரொளியில்
எமக்கிடமளித்த இறைவனே

ஆதித்தமிழ் தந்த புரவலனே
தேன்தமிழில் சொல்லெடுத்து
உன்மலரடி போற்றி பணிகின்றேன் ‪#‎ரெம்பாவாய்….

ஓம் சிவசிவ சிவகுருவே ஓம்
ஓம் சிவசிவ சிவசித்தன் ஓம்
ஓம் சிவய சிவசித்தன் ஓம்

நன்றி சிவகுருவே
இப்படிக்கு;
உன்சற்பம்
செ.சி.கார்த்திகேயன்

அழித்தல் படைத்தல் காத்தல்

குருவடி சரணம் சிவகுரு திருவடி சரணம்

அழித்தல் படைத்தல் காத்தல்

தீயஎண்ணம் அழித்து
உடல்கழிவுகள் அழித்து
சேர்த்த பாவங்கள் அழித்து

நல்லெண்ணம் படைத்து
வான்வாசி படைத்து
தனதருளை படைத்து

உண்மையே காப்பு
வாசியால் காப்பு
திருநாமத்தால் காப்பு

அனைத்தையும் அளித்து
காக்கும் சிவசித்தனே அன்பான
இயற்கையின் இறைவன்

ஓம் சிவசிவ சிவகுருவே ஓம்

மாதவம் புரிந்தே நின் மலரடி பணிந் ‪#‎தேன்

குருவடி சரணம் சிவகுரு திருவடி சரணம்

வணக்கம் சிவகுருவே

மாதவம் புரிந்தே நின் மலரடி பணிந் ‪#‎தேன்

தீயஎண்ணம் அனைத்தையும் துறந் #தேன்

பேரானந்தம் தனிலே மூழ்கித் திளைத் #தேன்

ஒவ்வொரு கணமும் நின் திருமுகம் நினைந் #தேன்

திருநாமக்காப்பு சொல்லி நின்னை தொழு #தேன்

சற்பம் கண்டேன் என்னை உணர்ந் #தேன்

உன்னடியே சுவர்க்கம் என்றே புரிந் #தேன்

படைத்தவன் உந்தன் அன்பை அறிந் #தேன்

தேன்தமிழ் கொண்டே பாசுரம் தொடுத் #தேன்

இயற்கையின் இறைவன் நீயென்று மொழிந் #தேன்

ஓம் சிவசிவ சிவகுருவே ஓம்

அனைத்தையும் துறந்தே உன்னடி கொண்டோம்

குருவடி சரணம் சிவகுரு திருவடி சரணம்

பூஜியத்தில் ராஜ்ஜியம் ஆளும் சிவசித்தா
நீ எமை பரிபாலனம் செய்யும் சமநிலை கண்டே
வியக்கிறேன்

அனைத்தையும் துறந்தே உன்னடி கொண்டோம்
வாசிதேகக்கண்ணா

நின் திருவருள் போதும் வேறென்ன வேண்டும்
சிவசித்த அகஅருளகா

சொல்லும்சொல்லில் உண்மையின் வலிமை கண்டோம்
சிவசித்த சொற்பிரகாசா

தீமைகள் கண்டால் நெற்றிக்கண்ணில் கனலை கக்கும்
அக்னிதற்பரன்

இருளாய் இருந்த எம் வாழ்வில் ஒளியாய் வந்தாய்
சிவசித்த பேரொளியானே

தெரியாதிருந்த எம்சற்பங்களை உயிரளித்தே காத்தாய்
ஆதிதேகசற்பகாலா

அறிவில்லாதவனயும் அறிவில் ஆதவனாய் ஆக்கிய
சிவகுருவே

நின் மலரடி போற்றி

ஓம் சிவசிவ சிவகுருவே ஓம்

அழகினும் அழகு நின் திருமுகம் அழகு

குருவடி சரணம் சிவகுரு திருவடி சரணம்

வணக்கம் சிவகுருவே

அழகினும் அழகு நின் திருமுகம் அழகு
அமிழ்தினும் அமுது நின்மொழி அமுது
தேனினும் இனிய நின்தமிழ் தேனே

உன்னடி பற்றா மானிடன் வீணே
உன்னடிதானே சுவர்க்கத்தின் வாசல்
உன்னடி கொண்டே பரவசம் பெற்றோம்

ஓம் சிவசிவ சிவகுருவே ஓம்


 

குருவடி சரணம் சிவகுரு திருவடி சரணம்

பஞ்சபூதங்களையும் தன்னகத்தே கொண்டவனே

பிணியென்று வந்தோர்க்கு பிணியருக்கும் மாமருந்தே

கல்நெஞ்சும் கசிந்துருகி கவிபாட வைத்தவனே

முடியாதென்றியம்பாத முடிவில்லா மாமுனியே

ஓரணுவில் ஈரணுவாய் கலந்தெம்மை காப்பவனே

மூவுலகம் அல்லாத தனியுலகம் தந்தவனே

உனைப் போற்றிப் பாடேலோ ரெம்பாவாய்

ஓம் சிவசிவ சிவகுருவே ஓம்