Sivasithan’s Vasiyoga|சிவசித்தன் பாமாலை

சிவகுருவே சரணம்

 சிவசித்தன் பாமாலை

      சிவசித்தனின் வாசிதேகக்கலையினை கற்ற, தேகக்கழிவுகள், நீங்கி, உடல் உபாதைகள் நீங்கப்பெற்று, தேக ஆரோக்கியம் பெற்ற பயிற்சியாளர்கள், சிவசித்தனின் மக்கள் நலன் சேவையில், தம்மால் இயன்ற பணிகளை சிவசித்தனுடைய சேவையில் சேர்ந்து செய்ய சேவகர்களாக பணியாற்றத் துவங்கினர். தம்மைப்போன்ற பலருடைய நோய்களையும் மன துயரங்களையும் கண்டு அதனை போக்கிவரும் சிவசித்தனின் ஆற்றலையும், அருளையும் கண்டு, இன்னும் எண்ணிலடங்கா மக்களும் இந்த கலையினைக்கற்று பயன்பெற வேண்டும் என எண்ணியே சிவசித்தனின் இயல்பை பாடல்களாக இயற்றி, சிவசித்த பாமாலையினை உலகுக்கு தெரிவித்தனர்.

பாமாலை தொடுத்த சேவகர்கள்,

சிவசித்தனின் பக்தர்கள், பக்தைகள் ஆயினர் நாளடைவில்.

Sivasithan_a1

     யாம் பெற்ற இன்பம், அனைவரையும் சென்று அடைய வேண்டும் என எண்ணியே பக்தர்கள், பக்தைகள் பாமாலை தொடுக்கிறார்கள். இதுவே, சிவசித்தன் பாமாலை எழுந்த வரலாறு.

 

பயிற்சியாளர்கள், சேவகர்கள், பக்தர்கள், பக்தைகள் என ஒவ்வொருவரும் தனித்தனியே தமது அனுபவங்கள் மூலம் தான் உணர்ந்த உண்மையினை, தாம் தெரிந்து கொண்டதை, தாம் புரிந்த கொண்டதை மற்றவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும், வாசிதேகப்பயிற்சிக்கு வராத நபர்களும், இப்பாமாலையின் படித்தாவது, தேகத்தினை மருந்தில்லாது சரி செய்து ஆரோக்கியம் காக்கும் சிவசித்தனின் குணாதிசயத்தை புரிந்து கொண்டு, பயன் பெற வருகை தரவேண்டும், வாசி பயில வேண்டும் என்றும் மனித ஆற்றல் உணர்த்தும் சிவசித்தனின் வாசியினை பயின்று பயன்பெற வேண்டும் என்பதே இப்பாமாலை எழுந்ததின் நோக்கம்.

 

     சிவசித்தன் பாமாலை இயற்றும் இந்த பக்தர்கள், பக்தைகள், பயிற்சியாளர்கள், சேவையாளர்கள் யாரும் அடிப்படையில் இருந்தே பாடல் இயற்றும் இயல்பு இல்லாதவர்கள் என்பதே இதன் சிறப்பம்சம்.

 

பாமாலை எழுதும் இவர்கள், தம் தேக கலையினை சிவசித்தனால் தூண்டப்பெற்றவர்கள் தம் எண்ண எழுச்சிகளை சிவசித்தனால் செயலாக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சிவசித்தனின் வாசிதேகக்கலையினை பயின்றவர்களுக்கு, சிவசித்தனின் வாசி, அவர்களது எண்ணங்களுக்கு ஓர் அழகான வடிவு கொடுத்துள்ளது அதுவே “சிவசித்த பாமாலை”.

 



 

சிவகுருவின் பக்தை,

                                                           த.பூர்ணிமாய்

                                     வாசியோக வில்வம் எண் : 12 09 108

“ஒருவனாய் தனித்து உள்ளொளி அறிந்த”

322

சுயம்புவாய் உருவான எங்கள் சிவகுருவே

சுயம் தனில் நிலைத்து

சுளிமுனை அறிந்து

சுடரொளி உணர்ந்து

பரம் தனில் நிலைத்து

பரவொளி அறிந்து

பண்ணிசைப் பாடி

பரமனை உணர்ந்து

முத்தொழில் செய்து

மூவரும் ஆகி

நான்கதில் நலமதை உணர்த்தி

ஒருவனாய் தனித்து

உள்ளொளி அறிந்த

எங்கள் சிவகுருவே

“சிவகுரு சிவசித்த பேரொளியான்”

************************

 

வைகறையில் வந்திட்டோம் ஸ்ரீ வில்வம் யோக ஒளித்திருத்தலமதிலே

சிவகுரு அருளிய மந்திரமதை முறையாக சொல்லி

மூலமதை அறிந்திட்டோம்!

பயிற்சிகள் பல செய்து, உடல் கழிவதை அழித்திட்டோம்!

உடல் பிணி அகன்று உள்ளமதில் உயர்ந்திட்டோம்!

பெருவாழ்வை நல்கிய சிவகுருவை உணர்ந்திட்டோம்!

பேரின்பம் அருளிய சிவகுருவை பொன்னேட்டில் புகழ்ந்து

புதுக்கவிதையாய் கொடுத்திட்டோம்!

சிவகுரு நல்கிய வாசியால் நலமனைத்தையும் பெற்றிட்டோம்!

நாடு தோறும் நலம் பெற நம் சிவகுருவை வேண்டி

வந்தனை செய்து வாழ்ந்திட்டோம்!

 

************************

சிவகுருவின் வாசியால்

உண்மையில் விழித்து

ஊனதனை அறிந்து

ஊனமதை போக்கி

உயிர்தனை பெற்று

உண்மைதனில் நிலைத்து

உயிர் ஒலி அறிந்து

உள்ளொளி பெருக்கி

உளம் தனில் நின்ற – எங்கள் சிவகுருவே

“சிவகுரு சிவசித்தன்”

 

**********************

 

சிவமாய் தனித்து சிந்தையில் உணர்ந்து

தவமாய் இருந்து தன்னொளி அறிந்து

வரமாய் பெற்ற வாசியோகத் தலைவனே!

உருவாய் வந்தாய் உண்மையாய் நினைப்போருக்கு!

உளமாய் தந்தாய் உண்மையில் நிலைத்தோனுக்கு!

உள்ளொளியால் நின்றாய் உண்மையாய் உரைத்தோனுக்கு!

 

சிவகுருவின் பக்தை,

K.B.சுபாசினி

வாசியோக வில்வம் எண்: 13 02 106

உன்னொளி அறிய உள்ளொலிக்கு புறம்பாய் நீ…

சிவகுருவே சரணம்

 

 

#Sivasithan (17)சிந்தையில் சிவம் தூண்டும் சிவகுரு சிவசித்தரை

சிந்திப்பாயோ சிவகுரு சிவசித்தரை

ஆதாரம் பல தேடும் மானிடா

உனது ஆதாரம் செயல்படுவதே – சிவகுரு சிவசித்தராலே!

உனது உண்மை செயல்பட

உன்னுள் வாசியாய் – எம் சிவகுரு

உண்மை தேடினாயோ

உண்மைக்குப் புறம்பாய்!

உனது எண்ணமும் உண்மையும் செயல்பாடாகுதே

உன் அக உண்மையால்

உன்னொளி அறிய உள்ளொலிக்கு புறம்பாய் நீ

இதுவும் சிவகுரு சிவசித்தரின் எண்ணமோ!

 

**********************

 

என் எண்ணமது செம்மையாகவில்லை

ஏகாந்தமதை உணரவில்லை

கழிவது குறையவில்லை

காட்சி ஏதும் காணவில்லை

பிறவிப்பயன் பெறுவேனோ!

பிறவாநிலை அறிவேனோ!

உனதெண்ணம் என்னுள் செயலாவது எப்போது!

எற்றமதை உணர்வது எப்போது!

உண்மை தனில் நான் நிலைக்க என்னைப் பண்படுத்துவீரோ!

– சிவகுருவே.

 

 

சிவகுருவின் பக்தை,

K.B.சுபாசினி

வாசியோக வில்வம் எண்: 13 02 106

 

 

சிவகுரு சிவசித்தனை நாடினோர்க்கு….

 சிவகுருவிடம்,

 

 

வார்த்தைஜாலம் என்பது கிடையாது – ஆனால்

அவரின் வார்த்தைகள் ஜாலம் செய்யுமே! வாசியால்

அவரை நாடினோர்க்கு

#Sivasithan (18)

சிவகுருவிடம்,  

 

தேவையற்ற பேச்சு என்பது கிடையாது – ஆனால்

அவரிடம் தேவையான பேச்சு கூட தேவையிராது வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

வெறும் பேச்சு என்பது கிடையாது – ஆனால்

அவரின் ஒவ்வொரு பேச்சுக்கும் அணுக்கள் உயர்பெறும்  -வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம், 

 

நோய் என்பது கிடையாது – ஆனால்

அவரிடம் எந்த நோயும் நொந்துபோகும் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

மருந்துகள் என்பது கிடையாது – ஆனால்

அவரிடம் மருந்தும் (தீயசக்திகள்) மண்டியிடும் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

பசி என்பது கிடையாது – ஆனால்

அவரிடம் பசி அறிந்து புசிக்கச்செய்திடுவார் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

ஆகாரம் என்பது கிடையாது – ஆனால்

அவர் உணர்த்திடுவார் “உணவே ஆதாரம் இல்லை” என – வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

சுவைக்காக உண்பது என்பது கிடையாது – ஆனால்

அவர் தயவால் சுவையறிந்து உண்ணமுடியும் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

உறக்கம் என்பது கிடையாது – ஆனால்

அவரால் ஆழ்ந்த தூக்கம் கிட்டும் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

பயம் என்பது கிடையாது – ஆனால்

அவர் பயம்போக்கி அபயமளிபார் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

கவலை என்பது கிடையாது – ஆனால்

அவர் கவலையை நீக்குவார் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

வேதனை என்பது கிடையாது – ஆனால்

அவரது வேதனை மனிதஉடல் துயரே – தீர்ப்பார் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

 சிவகுருவிடம்,  

 

ஆதங்கம் என்பது கிடையாது – ஆனால்

அவரது ஆதங்கம் மனிதன் உடலுண்மை உணராததே -உணர்த்திடுவார் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

தன்னலம் என்பது கிடையாது – ஆனால்

அவரது எண்ணம் மனிதநலம் ஒன்றில் – எண்ணிடுவாறே -வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

எதிர்மறை எண்ணங்கள் என்பது கிடையாது – ஆனால்

அவர், அழித்திடுவார் எதிர்மறை எண்ணங்களை வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

தீய எண்ணம் என்பது கிடையாது – ஆனால்

அவர், தம் நல்எண்ணங்களால் படைத்திடுவார் புதிய -படைப்புலகத்தை வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

வயது என்பது கிடையாது – ஆனால்

அவர் வயதானவரையும் வயசுகுறைத்திடுவார் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

மந்திரம் என்பது கிடையாது – ஆனால்

அவரது பெயரே மந்திரமாய் ஒலிக்கும் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

வசியம் என்பது கிடையாது – ஆனால்

அவரிடம் கூட்டம் சேருமே தானாய் வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

இல்லாதது என்பது எதுவும் கிடையாது – ஆனால்

அவரிடம் இருப்பது “மெய்” ஒன்றே -உணர்த்திடுவார் மெய்யாய்

அவரை நாடினோர்க்கு

 

சிவகுருவிடம்,  

 

பந்தபாசம் என்பது கிடையாது – ஆனால்

அவரிடம் பந்தம் ஏற்படுமே தானாக வாசியால்

அவரை நாடினோர்க்கு

 

 

சிவகுருவின் பக்தை,

                                                           த.பூர்ணிமாய்

                                     வாசியோக வில்வம் எண் : 12 09 108

 

சிவசித்தனின் படைப்புலகத்தில்…..

சிவசித்தனின் படைப்புலகத்தில்…..

 656

  • நோய் என்பது இல்லை………

சிவசித்தனின் படைப்புலகத்தில்.

 

உடலில் தேங்கும் கழிவுகளே

உடலின் உபாதைகள்.

 

கழிவுகள் மனித உடலை ரணமாக்குகிறது

கண்டதையும் தின்று நடைபிணமாகிறான் மனிதன்.

 

சிவசித்தனின்….

வாசியோகம் கழிவுகளை அகற்றுகிறது

உணவுமுறைகள் உபாதைகளைத் தீர்க்கிறது

 

எனவே

நோய் என்பது இல்லை………

சிவசித்தனின் படைப்புலகத்தில்.

 

  • ஆசை என்பது இல்லை….

சிவசித்தனின் படைப்புலகத்தில்.

 

மனதில் ஏங்கும் எண்ணங்களே

மனதின் தீராபிரச்னைகள்.

 

ஆசைஎண்ணங்கள் மனிதனை ஆட்டுவிக்கின்றன.

நீளும் ஆசையில் சுயம் தொலைக்கிறான் மனிதன்

 

சிவசித்தனின்….

வாசியோகம் எண்ணங்களை சீர்செய்கிறது

சிவகுருமந்திரம் பிரச்சனைகளை தீர்க்கிறது.

 

எனவே

ஆசை என்பது இல்லை…

சிவசித்தனின் படைப்புலகத்தில்.

 

  • கடவுள் அப்பாற்பட்டவர் என்பது இல்லை….

சிவசித்தனின் படைப்புலகத்தில்.

 

அகத்தில் இருக்கும் அறியாமையே

அகமறிய தடைகல்.

 

இறைதேடி அலைபாய்கிறது மனதுவீணே

இருக்கும் இடத்தை உணரமறுக்கிறான் மனிதன்.

 

சிவசித்தனின்….

வாசியோகம் கடவுளை அறியச்செய்யும்

உண்மையாக இருந்தால் தடைகல்லை அகற்றும்.

 

எனவே

கடவுள் அப்பாற்பட்டவர் என்பது இல்லை….

சிவசித்தனின் படைப்புலகத்தில்.

 

சிவகுருவின் பக்தை,

                                                           த.பூர்ணிமாய்

                                     வாசியோக வில்வம் எண் : 12 09 108

உள் உறுப்புகள் இயங்காமல் உனதறிவு செயல்படாது என்பதை அறிவாயோ?

சிவகுருவே சரணம்

உள் உறுப்புகள் இயங்காமல் உனதறிவு செயல்படாது என்பதை அறிவாயோ?#Sivasithan (19)

1. மருந்து மாத்திரையில்லா உலகமே
சிவகுரு சிவசித்தரின் வாசியோக படைப்புலகம்!
மருத்துவருக்கே சவால் விடும் உலகமே
சிவகுரு சிவசித்தரின் வாசியோக படைப்புலகம்!
படைப்புலகத்தில் படைப்பாளிகளாக மாற வாரீர்
சிவகுரு சிவசித்தரின் வாசியோகத்தை நாடி!

 

2. மருந்தால் நம் உடல் அணுக்கள் அழியும் என்பதை அறிவாயோ?
அறிவாய் சிவகுரு சிவசித்தரின் வாசியோகத்தில்!
உணவால் நம் உடல் அணுக்கள் அழியும் என்பதை அறிவாயோ?
அறிவாய் சிவகுரு சிவசித்தரின் வாசியோகத்தில்!
உடல் கழிவால் உள்ளுறுப்புகள் இயங்காது என்பதை அறிவாயோ?
அறிவாய் சிவகுரு சிவசித்தரின் வாசியோகத்தில்!
உள் உறுப்புகள் இயங்காமல் உனதறிவு செயல்படாது என்பதை அறிவாயோ?
அறிவாய் சிவகுரு சிவசித்தரின் வாசியோகத்தில்!
அறிவு செயல்படாமல் உனது எண்ணங்கள் சீரடையாது என்பதை அறிவாயோ?
அறிவாய் சிவகுரு சிவசித்தரின் வாசியோகத்தில்!
எண்ணங்கள் சீராகாமல் எத்தனை இறைவனை வேண்டினாலும்
பலனில்லை என்பதை அறிவாயோ?
அறிவாய் சிவகுரு சிவசித்தரின் வாசியோகத்தில்!
எண்ணமே இறைவன் என்பதை அறிவாயோ?
அறிவாய் சிவகுரு சிவசித்தரின் வாசியோகத்தில்!

 

சிவகுருவின் பக்தை,
K.B.சுபாஷினி,
வாசியோக வில்வம் எண்: 13 02 106

 

அனைத்தும் கடந்து அனைத்திலும் கலந்த சிவசித்தனே …

சிவகுருவே சரணம்
சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்

098

அறிவை அறிவால் அறிந்து கற்க
உணராதோர்க்கும் உரைத்து எம்முடல்
உற்றபிணிதனை நீக்கி என்றும்
எளியோர் நெஞ்சினில் உறையும் சுடரே!

அனைத்தும் கடந்து அனைத்திலும் கலந்து
அனைத்துமாகி அனைவர்க்கும் அருளி
அன்பால் உணர்த்தி ஆழ்ந்து நின்று
அன்பினால் எம்மை ஆளும் அருளே!

ஒன்றும் இரண்டும் பலவும் கலந்து
ஒன்றாகி நிற்கும் விந்தையின் வித்தே
தெரியச் செய்து தெளியச்செய்து தெளிவினிலே
அறியச் செய்யும் அறிவின் சிவகுருவே!

வாசிக்குள் வளைந்து வாழ்ந்து வாசியால்
வாசியை வளைத்து வசமாக்கி
வாசியை வறியோர் தம் வாழ்வுக்களித்த
வாசியே எம் வாழ்வே!

எல்லாமும் உம்முள் கிடக்க வெளி
எல்லாமும் கடந்து எம் உள்ளே
எல்லாமும் ஆகி நிற்கும் எம்சிவகுருவே
எல்லோரும் வேண்டுவது உன் அருளே!

நன்றி.

 

பணிவுடன்,
சிவகுருவின் பக்தை,
க.சங்கரவடிவு,
வாசியோக வில்வம் எண்: 12 09 104

இருளில் ஒளிரும் பிரபஞ்சத்தில் அறிவோம்…

சிவகுருவே சரணம்

444

 

கவிதையாய் அறிவோம் சிவசித்தனை

கண்ணின் மணியாய் அறிவோம் சிவசித்தனை

கலங்கரை விளக்கமாய் அறிவோம் சிவசித்தனை

கரிய இருளில் ஒளிரும் பிரபஞ்சத்தில் அறிவோம் சிவசித்தனை

கட்டவிழ்ந்த மலர்வாசத்தில் அறிவோம் சிவசித்தனை

கற்பக விருட்சமாய் அறிவோம் சிவசித்தனை

கருவறை தெய்வமாய் அறிவோம் சிவசித்தனை

கண்ணீரின் கதகதப்பில் அறிவோம் சிவசித்தனை

கட்டளையின் வடிவில் அறிவோம் சிவசித்தனை

கண்ணியமான வாக்கில் அறிவோம் சிவசித்தனை

கடல் போன்ற தோற்றத்தில் அறிவோம் சிவசித்தனை

கறையில்லா பேச்சில் அறிவோம் சிவசித்தனை

 

___________

 

உண்மையின் உருவம்……

 

உண்மை ஒளியே அனைத்துமாய் ஆக்கியது

உண்மை ஒளியே ஆற்றலின் பாதையென அறிவித்தது

உண்மை ஒளியே இயல்பு இயல்பே இறையெனக் காட்டியது

உண்மை ஒளியே ஈதொரு மாசக்தி தானென தெரிவித்தது

உண்மை ஒளியே உய்வுக்கு வழியென உரைத்தது

உண்மை ஒளியே ஊற்றாம் பேரின்பத்தை காட்டியது

உண்மை ஒளியே எம் “சிவசித்தன்” என பறைசாற்றியது.

 

சிவகுரு பக்தை ,

விக்னேஸ்வரி ராஜேஷ்குமார்.

சின்னமனூர்.

வாசியோக வில்வம் எண்: 12 05 313

 

“சிவகுரு உணர்த்தும் முதலும் முடிவும்

“சிவகுரு உணர்த்தும் முதலும் முடிவும்

#Sivasithan (21)

 

உணர்த்துமே ஒரு வழிப் பாதையை

உணர்த்துமே நெறியான வழியினை

உணர்த்துமே உடலே அனைத்தும்,

அதை அனைத்துமான நேர்மறை எண்ணங்களின்

பிறப்பிடமாக ஆக்குவது சிவசித்தரின் வாசியே!”

 

 

உண்மை ஒளியே ஏகன்; அவனே(ரே) சிவசித்தன்

என உணர்த்தியது

உண்மை ஒளியே ஒரு வாசலுக்கான சாவி என

விளக்கமளித்தது

உண்மை ஒளியே ஓங்காரம் அரியவைக்குமென

அறிவித்தது

உண்மை ஒளியே மெளவலாய் மலருமுள்ளேயென

மணம் பரப்பியது

உண்மை ஒளியே இஃதொரு கேடில்லை

சிவசித்தனிருக்கவென சிந்தை தெளியவைத்தது…

 

“உண்மையின் உருவமே! சிவசித்தனே!

உண்மையும் நீயே! ஒளியும் நீயே! சரணடைந்தோம்

ஒளியின் வழியில் உம்மிடம்!”

 

 

சிவகுரு பக்தை ,

விக்னேஸ்வரி ராஜேஷ்குமார்.

சின்னமனூர்.

வாசியோக வில்வம் எண்: 12 05 313

 

 

 

சிவசித்தனால், உன்வாழ்வெனும் வாசியை…

சிவசித்தனின் வாசி. . . . . . .

 

#Sivasithan (22)

வாசி வெளிக்கொணரும் உன்னில்உள்ள வாசியை

(திறமை முதியவற்றில் வேறுபாடு)

வாசி மாற்றியமைக்கும் உன் வாசியை (இயல்பை)

வாசி புரியவைக்கும் உன் வாசியை (தனித்தன்மையை)

வாசி மேம்படுத்தும் உன் வாசியை (தகுதியை)

வாசி அடக்கும் உன் மனம் எனும் வாசியை (குதிரை)

வாசி உடலை லேசாக்கும் வாசியின் சிறகுபோல (பறவை)

வாசி கற்றால் தெரிந்துகொள்வாய் வாசியை (நியாயம்)

வாசி உனைகொண்டுசெல்லும் வாசிக்கு (நல்ல நிலைமை)

வாசி சிவசித்தனால், உன்வாழ்வெனும் வாசியை (இசைக்குழலை)

வாசிக்கும் இனிமையாய் (ஒலிக்கச் செய்யும்).

 

 

கையில் கிடைத்த சிந்தாமணி

 

சிவசித்தனே!

 

சிந்தாமணியில் தோன்றிய சிந்தாமணி நீ!

அரிதிலும் அரிதாய் கையில் கிடைத்தும் நீ,

 

அறிகிலர் இல்லை கிடைத்தற்கரிய நீ

உண்மையான சிந்தாமணி என நீ!

 

ஏ மனமே!

 

உண்மை அறியாமல் பொய்நாடும் நீ,

அவ்வளவு எளிதில் கிடைக்குமோ சிந்தாம நீ!

நமக்கென என நம்பமனம் மயங்குதோ? – நீ

விழித்துக்கொள், மனமே இன்றாவது நீ!

 

சிவசித்தன் என்றொரு நாமமுண்டு, நீ

கண்டுகொண்ட சிந்தாமணிக்கு என நீ

உணர்வாயா, விரைவில் நீ!

 

(சிந்தாமணி – பொருள்:

‘விரும்பியதை தரவல்ல தெய்வீக ரத்தினக்கல்’)

 சிவகுரு பக்தை ,

த.இரா.பூர்ணிமாய்,

வாசியோக வில்வம் எண்: 12 09 108