முன்பு நான்,பின்பு என்னுள் நிகழ்ந்தவை,

12/02/2013 க்கு முன்பு நான்,

086

காலத்தை பொருட்படுத்தாமல்

கண்டதையும் உட்கொண்டு; சப்த

கழிவுகள் தான் தேங்க உடல்

பொலிவுகள் தான் மங்க மருத்துவம்

பல செய்து, வேண்டாமல் வந்த

வரமாம் மரண பயம்.

 

12/02/2013க்கு பின்பு என்னுள் நிகழ்ந்தவை,

 

வந்த பயமதனை நீக்க

வாசியெனும் நீரூற்றி,

நிலையான இவ்வுலகில்

நிலைபெற்று நீடூழி வாழ வேண்டுமெனும்

தன்னம்பிக்கை வித்திட்டு,

விதிமுறைகள் வேரூன்ற என்னுள்

விருட்சமாய் வளர்ந்து நிற்கும்

சிவகுரு சிவசித்தருக்கு போற்றி….போற்றி…

சிவகுரு சிவசித்தர் தாள் சரணம்.

 

இந்த சிறு குழந்தையின் கிறுக்கல்களில் பிழைகள் பல இருந்தாலும், அடுத்த கடிதத்தில் பிழைகளை திருத்தி, எழுத்துக்களை மெருகேற்றி வடித்திட சிவகுரு சிவசித்தரிடம் வேண்டிக்கொள்கிறேன்.

 

இப்படிக்கு,

                                                வாசியோகப் பயிற்சியாளர்,

                                                            பெயர் : கோ.சீதாலக்ஷ்மி

                                                                                                                        வி.எண் : 13 02 117

 

சிவசித்தரின் பாமாலை|001|

ஆணவம்

IMG_20150409_062010தாயின் கருவறையில் உதித்து
இப்பூவுலகில் காலடி வைத்து
பெற்றோரின் அரவணைப்பில் வளர்ந்து
சமுதாயத்தில் ஒருவராய் தோன்றி
பலதரப்பட்ட மக்களுடன் பழகி
பற்பல அனுபவங்களைப் பெற்று
உயர்ந்தக் கருத்துக்களை விட்டு
தீயவற்றை அகத்திலே ஏற்றி
ஆணவம் என்னும் குணத்தினாலே
அறிவை மட்டுமா இழந்தாய்
அடியோடு தன்னையே இழப்பாய் மானிடா!
வாரீர்! வாரீர்! வில்வம் மையத்திற்கு
வசந்தம் வீசும் வாழ்க்கை யினிலே
நாடிப் பார்த்து நரம்புகளைத் தூண்டி
வாசி என்ற காற்றை இழுத்து
அகத்தில் இருக்கும் இருளைப்போக்கி
நேசம் என்ற உணர்வை ஊட்டி
ஆணவம் என்னும் நிலையைப் போக்கி
அருள் என்னும் நிலையைப் பெற வைத்த
அற்புதச் சுடரே! சிவசித்தரே!
நின்புகழ் பாட வார்த்தைகள் இல்லையப்பா!
அப்பப்பா உன் செயலால் அனைத்தையும் பெற்றேன்
ஆணவம் அகலக் கண்டேன்
பற்பலப் பிணிகள் நீங்கி பரவசமடைந்தேன்
பக்தி மயமானேன்! சிவசிவ என உன்னிடம் தஞ்சம் புகுந்தேன்
யான் பெற்ற இவ்வின்பத்தை பெறுக இவ்வையகமே!
என்றென்றும் நின்சேவை தொடரட்டும்.
***********************************************************
மு.ஆனந்தி
13 12 108