முன்னுரை

சிவசித்தனின் பாமாலை

 

பாமாலை வரலாறு

வரலாறுகள் ஓராயிரம் உலகெல்லாம் கண்டும், என்ன பொருள் உணர்த்தியது உணர்வுள்ளே, காதல்களும், போர்களும், சண்டைகளும் வரலாறுகளாய் நிற்பது நாடதன் சிறப்பு கூறவே, குலமதன் சிறப்பு கூறவே.

 

யார் கூறினார் தேகமதன் சிறப்பிங்கே,

யார் கேள்வியானார் அகம்/புறம் புதிராக,

யார் உணர்த்தியது கழிவே விடையென்று,

யார் அருளினார் மொழியது தேகத்தின் உணர்வென்றே,

Sivasithan_a (1)

தந்தவருக்கே தரவேண்டும் அவர்தந்த அறிவதனை

தட்சணையாய் என்றே எண்ணம் கொள்ள – ஏற்றாரே

உயிர் மெய்யை எழுத்ததிலே அனைவருக்காய் தன்

விதிமுறைகள் நிலைநிறுத்தினோர் உயிர்மெய்களை

 

பன்மலர் வாசங்களில்

பல்லாயிரம் மகரந்தங்களில்

பல்கால் வரைந்திட

பல்லவிகள் சிவசித்தனுக்கே

பாமாலைகள் ஏற்றாரே… சிவசித்தனின் இலக்கியம் 

சிவசித்தன்
சிவகுரு சிவசித்தன் மனித உடலுக்கு தேவையான வாசியோகக் கலையை செம்மையாக செவ்வனே செயல்பட வைக்க சிவகுரு சிவசித்தன் ஒருவராலே முடியும்.

பாரினில் பிறந்து பாமரனாக இருந்த வாசியோகப் பயிற்சிகள் செய்து உடல்பிணி போக்கி, உள்ளத்தில் இறை உணர்வை உருவாக்கிய சிவகுரு சிவசித்தனின் உன்னதம் உணர்ந்த ஆண், பெண் இருபாலரும் தங்கள் எண்ணத்தில் ஊற்றாக உருவெடுத்த தமிழ் வார்த்தைகளை சரம் சரமாக இடமறிந்து இணைத்துத் தொடுத்த பாமாலைகளின் (கவிதை வடிவில்) தொகுப்பு.

இதனை கண்ணுறும் யாவரும் இதில் உள்ள இலக்கணப் பிழைகளையும், மரபு கவிதையின் கோட்பாடுகளையும் ஆராய்ந்து, குற்றம் கண்டு பரிகசிக்காமல் பொறுமை காத்து (பொருட்குற்றம் வாராது) சராசரிக்கும் கீழான எங்களின் முயற்சிக்கு எமது வாழ்வின் ஆதாரமே வாசியோகம் தான் என்ற உயரிய எண்ணத்தின் வெளிப்பாடாகவும், தொடர்ந்து ஆதரவு அளித்து, மேலும் எங்களின் ஆற்றலை செம்மையாகவும், செறிவுடனும் வெளிக்கொணர மீண்டும் வாய்ப்பளிக்க அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்குக் கொண்டு, எமது கவிதை புனையும் முயற்சியைத் தொடருகிறோம். நன்றி.

Read More 

Sivasithan_a (3) சிவசித்தனின் புராணம் 

சிவசித்தன் புராணமிதுவே…

“அறிவை அறிவால் அறிந்து கற்பதே சிறந்தது..
அறிவை அறிவால் அறிந்து தெளிவதே சிறந்தது..
அறிவை அறிவால் அறிந்து உணர்வதே சிறந்தது..”

—————–சிவசித்தன்

மனிதன் மற்ற பிறப்புகளிலிருந்து தனித்து தெரியக் காரணம் மனிதனின் அறிவு என்ற நிலை…அறிவை ஏன் நிலை என்கிறோம்…ஏனென்றால் அந்நிலைக்கு செல்லாமலேயே அறிவு பற்றி பேசுகிறோம்..அறிவு செயல்படாமல் யாராலும் பகுத்தறியவே முடியாது…பேரறிவையும் தன்னுள் உணரமுடியாது.

“அறிவு என்பதே மனிதனின் முழுமுதற் சொத்தாகும்”…

அறிவைப் பற்றிய அறிவே இல்லாத நம்மால் எப்படி அனைத்தையும் உணர முடியும்,நம்மை அறிவானவர்களாக நிரூபிக்க முடியும்…

மனிதனை நல்வழிபடுத்தவும்,வாழ்வியல்(இல்லறம்) மேம்படவும் இறைமை மற்றும் இறைத் தத்துவங்கள் வடிவமைக்கப்பட்டன… ஆனால் இறைமை,இறைவன்,எழுத்துகள்,ஓசைகள்,ஒளி போன்றவற்றை மனிதன் தன்னை விட்டு விலகி அப்பார்ப்பட்டு உயரமான விஷயங்களாக எண்ணி அதனையும் – தன்னையும் வடிவமைத்து விட்டான்.. பின்னர் அவன் செய்யும் தவறுகளுக்கு பிராயச்சித்தமாக மன்னிப்பு கோரவும்,நிறைவேறா ஆசைகளை தெரிவிக்கவும்,பாவங்களைப் போக்கவும் இறைவனைத் தேடினான்..இறைவனைப் புரிந்து கொள்ள மொழியைத்தேடினான்…

மொழி மனிதனின் வாழ்வியலை நிறைவேற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறது…இயல்பான செயல்களைப் புரிவதில் மொழி முதற்பங்கு வகிக்கிறது…அத்தகைய மொழிகளில் முதன்மையானது தமிழே..தமிழ் மொழி நம் உயிர் மொழி… தமிழ் மொழியின் தொன்மையும் உண்மையும் பல்லாயிரம் ஆண்டுகளாகத் மனிதர்களால் பாடப்பட்டுள்ளது ..எனினும் அவை அனைத்துமே மக்களுக்குப் புரியும் வண்ணமாகவோ,அல்லது புரிய வைக்கும் விதமாகவோ வெளிவர வில்லை என்பதே குறிப்பிடத்தக்கது…

இன்றளவில் மனப்பாடப் பாடல்களாகவே சில வெளிவருகின்றன..பாடல்கள் எதற்காக என்று யோசித்தால் அவை இறைவனை நோக்கி பக்தர்கள் பாடுவதாய் இருக்கும்..அவற்றின் பொருள் என்று பார்த்தால் அவை இறைவனின் செயல்பாடுகள் அல்லது வரம் கேட்டுப் பாடுதல் என இருக்கும்…அவற்றின் முழுமைத் தேடினால் சைவமும் வைணவமும் போட்டி போடுவதாய் இருக்கும்..அனைத்தும் ஒன்று தான் என்று ஒரு சாரார் கூறுவார்… ஆனால் இதுவரை யாரும் உணர்த்தாத நிலைதனை கண்ணொளி மூலம் இன்று உணர்த்துபவர் சிவகுரு சிவசித்தன்…
சிவகுரு சிவசித்தன் வாசி யோகத்தில் இல்லாததென்று எதுவும் இல்லை…

சிவகுரு சிவசித்தனின் வாசியோகம் என்றும் எந்த வரைமுறைக்குள்ளும் அடங்காது..சிவகுரு சிவசித்தன் போலவே அது ஒரு சுயம்பாகும்..வாசியோகக் கலை மூலமாக சிவகுரு சிவசித்தன் உணர்த்தும் உண்மைகள் அனைத்துமே நமக்கும் நம் சந்ததியினருக்கும் முழுமையாய் சென்றடையவும் அவற்றின் மூலம் இறைமை என்றால் என்ன ? இறை ஆற்றல் எவ்வாறு சிவசித்தனால் வெளிப்படுகிறது போன்ற விஷயங்களோடு,நாடி பார்த்தல் துவங்கி முக்தி நிலை வரை உடல் உண்மைகளாக வெளிவருகிறது…

அவற்றில் நீங்கள் எங்கும் காணமுடியாத உண்மைகள் நிலைக்கும்,நிரம்பி வழியும்…உடலின் பிரதானம் அறியாயோ என்று பலர் கூறியிருப்பினும்…உணர்வுகளாய் முழுமையாய் யாரும் உணர்ந்தது இல்லை …முழுமையாய் உணர்த்தவும் இல்லை…

சிவகுரு சிவசித்தன் புராணம் மூலமாக உங்கள் அனைவருக்கும்

நாடி,கழிவு,பயிற்சி,இருசரம்,சுளிமுனை,ஆற்றல்கள்,ஆடல்கள்,பேராற்றல்கள்,பேரின்பம்,சிற்றின்பம்,ஒளி காணுதல்,உயிருள் உண்மை உணர்தல்,உயிர் உயிர்பெறுதல்,பரம் உணர்ந்து அடைதல்…என அனைத்து செயல்பாடுகளைப் பற்றியும் காணலாம்..அவற்றினால் நீங்கள் என்ன உணர முடியும்,அடைய முடியும் … இயற்கையினை உங்களுள் செயல்பாடுகளாய் உணர்தல் எனும் ஆச்சரியம் வரை அனைத்தும் உணர்ந்தவர்களால் எழுத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது..அவற்றினைப் பற்றி தெரிந்து கொள்ள முழுமையாய் படியுங்கள் வாசி யோகம் எனும் உயிர் கலைக்கு உயிர் கொடுக்கும் சிவசித்தனை எக்கணமும் நினைத்து சிவசித்தனை வந்தடையுங்கள்…

“படைத்தவன் தன்னையே பார்”
——————–சிவசித்தன்…

Read MoreLeave a Reply